Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவர் வருகையில் வீழ்ச்சி

Featured Replies

இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானி வகுப்புக்கான விரிவுரைகள் மாத்திரமே இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் ஏனைய வகுப்புகளுக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து, சில மணிநேரங்களின் பின்னர் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

 

நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 60 சதவீதமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இதனால், பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. இந்நிலையில், இன்றைய தின விரிவுரைகளில் சுமார் 20 சதவீதமான மாணவர்களே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்புக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சில பீடங்களின் பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/56433-2013-01-08-06-21-51.html

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்ப்பாடுகள் வழமைக்கு திரும்பினதா?

 

யாழ் பல்கலைக்கழக செயற்ப்பாடுகள் இன்றை தினம் ஆரம்பிக்கபட்ட போதும் மாணவர்கள் வருகை தராமையிலால் பல்கலைக்கழகம் வெறிச்சோடி காணப்பட்டது.

 

சுமார் நாற்பது நாட்டளுக்கு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


எனினும் நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எனினும் இன்றைய தினம் பல்கலைக்கழக சூழலில் ஒரு சில மாணவர்களையே காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் பல்கலைக்கழகத்தினைச் சுற்றி அமைக்கப்பட்ட காவலரண்கள் காணப்படுகின்ற போதும் காவல் துறையினர் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்தனர்.


ஆனால் காவரண்கள் அமைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்பட்டுள்ளமை தமக்கு அச்ச நிலமையினை ஏற்ப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=399601753308661561

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.