Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மாணவி பற்றி அக்கறைப்படுவோர் மண்டைதீவு சிறுமி பற்றி அக்கறை கொள்ளாததேன்?

Featured Replies

 

children-150x150.jpgடெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது.

பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.

இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக்கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அறிந்து கொழும்பில் உள்ள மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளும் ஐக்கிய தேசியக்கட்சி மகளிர் அமைப்பினரும் கையெழுத்து வேட்டை நடத்தி ஊர்வலகமாக சென்று இந்திய தூதரிடம் மனுவும் கொடுத்திருக்கிறார்கள். நல்ல விடயம்.

இலங்கையில் உள்ள பெண்ணிலைவாதிகளும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு மேலாக ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் டெல்லி மாணவியின் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளுக்கு தங்கள் நாட்டில் தினம் தினம் நடக்கும் பாலியல் பலாத்காரங்களும் படுகொலைகளும் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக கூறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காதில் விழவில்லை. ஆனால் டெல்லி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டும் அவர்களை பாதித்திருக்கிறது.   நாடு கடந்த அரசாங்கத்தில் உள்ள பெண்களும் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் டெல்லி பெண்ணின் படுகொலை மட்டும் அவர்கள் காதில் கேட்டிருக்கிறது. ஆனால் மண்டைதீவிலும், திருக்கோவிலிலும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழைத்தமிழ் பெண்கள் என்பதால் அவர்களின் அவலக்குரல் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அம்மணிகளின் காதில் விழவில்லை போலும்.

ஐ.தே.கவினரை பொறுத்தவரை தென்னிலங்கையை விட போரினால் பாதிக்கப்பட்டு நொந்து ஒடிந்து போய் இருக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் இந்த கொடுமைகள் நடப்பதால் இவர்களின் கண்களுக்கு இது தெரியவில்லையா அல்லது அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் தெரியவில்லையா என்பது புரியவில்லை.

தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினராலும், இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களாலும் நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலைகள் அனைத்தும் அதிகார மமதையில் நடத்தப்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஓட்டுக்குழுக்களும் சிங்களப்பெண்களையோ முஸ்லீம் பெண்களையோ பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர் என்றோ அல்லது படுகொலை செய்கின்றனர் என்றோ நாம் அறியவில்லை. ஆனால் அவர்களின் இலக்கு தமிழ் பெண்கள் தான் என்பதிலிருந்து இதுஒருவகை இனஅடக்கு முறையின் வெளிப்பாடாகவும் கருத வேண்டியிருக்கிறது.

எந்த ஒரு தமிழனும் ஒரு சிங்களப்பெண்ணையோ அல்லது முஸ்லீம் பெண்ணையோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வரலாறு இல்லை. ஆனால் தமிழ் பெண்களை சிங்களவர்களும், முஸ்லீம்களும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்கள் அதிகம் உண்டு. தமிழர்கள் மீது கைவைத்தால் சட்டத்தின் முன் தமக்கு தண்டனை கிடைக்காது தப்பி விடலாம் என்ற அதிகார பலத்தின் வெளிப்பாடாடே தமிழ் பெண்கள் தொடர்ந்தும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களும் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என ஓயாமல் ஓலமிட்டன. ஆனால் மண்டைதீவில் 4வயது சிறுமி இதே காலப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏன் அறியவில்லை. அல்லது திருக்கோவிலில் மூன்று தமிழ் பெண்கள் சிங்கள காடையர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையான தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறியவில்லையா?

தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவே இவை மூடிமறைக்கப்படுகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக நாடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வடக்கில் சிறிலங்கா கடற்படையினரினதும், ஈ.பி.டி.பியினரதும் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுப்பகுதியில் மட்டும் 2012ஆம் ஆண்டு இரு சிறுமிகள் உட்பட அண்மைய ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் இவர்களில் நான்கு சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் யாரும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

ஐயோ டெல்லியில் உள்ள மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுவிட்டார் என கொழும்பில் உள்ள மேட்டுக்குடி பெண்கள் காவடி எடுத்து திரிந்த அதே காலப்பகுதியில் தான் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டார். திருக்கோவிலில் வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்த மூன்று தமிழ் பெண்கள் மீது சிங்கள காடையர்கள் பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை தாக்கிய காயப்படுத்தி இருக்கிறார்கள்.

அருகில் இருக்கும் தமிழ் பெண்களின் அவலக்குரல்களை கேட்காத கொழும்பு மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளுக்கு டெல்லியில் உள்ள பெண்ணின் அவலக்குரல் கேட்டிருக்கிறது. இதுதான் எமக்கு புரியாத புதிராக இருக்கிறது.

மண்டைதீவில் குணராசா சுடரினி என்ற சிறுமி கடந்த வாரம் (28.12.2012) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பழடைந்த கிணறு ஒன்றில் போடப்பட்டிருக்கிறார். அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை பிரேத பரிசோதனையை நடத்திய சட்டவைத்திய அதிகாரி சிவரூபன் உறுதிப்படுத்தியிருக்கிறார். வன்புணர்வினால் பிறப்பு வாசல் மற்றும் மலவசல் என்பவற்றில் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சிறுமியை காணவில்லை என்ற உடன் அன்று மாலையே அயலவர்களும் உறவினர்களும் அக்கிணறு உட்பட பல இடங்களிலும் தேடிய போதிலும் அச்சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. மறுநாளும் அப்பகுதியில் தேடிய போதே செருப்பு ஒன்று கிணற்றில் மிதந்து கொண்டிருந்ததை கண்டவர்கள் கிணற்றில் தேடிய போது அச்சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.

அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அன்று இரவுதான் அக்கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சடலம் கிணற்றில் போடப்பட்டதால் யார் பாலியல் பலாத்காரம் புரிந்தார் என்பதை டி.என்.ஏ. பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்றும் வைத்தியஅதிகாரி சிவரூபன் கூறியிருக்கிறார்.

இந்த பாலியல் பலாத்காரமும் கொலையும் இராணுவத்தினரால் அல்லது இராணுவத்தினருடன் இயங்கும் ஆயுதக்குழுவால் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆயுதக்குழுவாக இயங்கும் அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த ஒருவர் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட போதிலும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இக்கொலையை மூடி மறைப்பதற்காகவும் திசை திருப்புவதற்காகவுமே அரசியல் கட்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை மண்டைதீவில் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த காலங்களில் தீவுப்பகுதி உட்பட யாழ் குடாநாட்டிலும் ஏன் வடக்கு கிழக்கில் தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், படுகொலைகளின் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பது போலவே மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் மறைக்கப்பட்டு விடும்.

இது போன்றே நெடுந்தீவிலும் 03.03.2012 அன்று ஈ.பி.டி.பியினர் லக்சனா என்ற 12வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருந்தனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் நடந்த இப்படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பியை சேர்ந்த கிருபா என்ற நபர் கைது செய்யப்பட்ட போதிலும் இச்சம்பவத்தில் முக்கிய பிரதான நபர் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் என்றும் இவர் தமிழ்நாட்டிற்கு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரியவருகிறது.

கடந்த 2012ம் ஆண்டில் யாழ். தீவுப்பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர கடந்த ஆண்டு காரைநகரில் பழைய இரும்பு வியாபாரியான முஸ்லீம் நபர் ஒருவர் ஊனமுற்ற இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்திருந்திருந்தார்.luxsana-in-nedunthivu.jpg

நெடுந்தீவில் கடந்த 3.3.2012 அன்று நடந்த லக்சனா என்ற சிறுமியின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பே காணப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனை முடிவு அரசியல் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு தீவுப்பகுதியில் உள்ள வைத்திய அதிகாரிகளும் துணைபோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  தீவுப்பகுதியில் உள்ள அரச அதிகாரிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஈ.பி.டி.பியினர் தமது குற்றங்களை மறைப்பதற்கு இந்த அதிகாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த முதலாம் திகதி திருக்கோவில் வட்டமடு பகுதி வயலில் களை பிடுங்கிகொண்டிருந்த மூன்று தமிழ் பெண்கள் மீது சிங்கள காடையர் குழு ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இந்த மூன்று பெண்களும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பெண்கள் மூவரும் அபாய குரல் எழுப்பியதை கேட்ட அப்பகுதி பிரதேச மக்கள் அங்கு வந்த போது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிங்கள காடையர் குழு தப்பி சென்றுள்ளது. ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இந்த மூன்று பெண்களும் வயலில் களை பிடுங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த 4பேரை கொண்ட சிங்களவர்கள் குழு அப்பெண்களை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். அப்பெண்கள் அபயக்குரல் எழுப்பி தப்பி செல்ல முற்பட்ட போது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ள போதிலும் காவல்துறையினர் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் பலாத்கார கொடுமையை புரிந்தவர்கள் சிங்களவர்கள் என்பதாலும் பாதிக்கப்பட்டது அப்பாவி ஏழை தமிழ் பெண்கள் என்பதாலும் காவல்துறையினர் குற்றம் புரிந்தவர்களை கைது செய்ய எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருக்கோவில் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சி மகளிர் அமைப்பினர் டெல்லி மாணவிக்காக நடத்திய கையெழுத்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்

புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் தகைமை நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை. இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பல மடங்கு பாரதூரமானதாகும். குறிப்பாக வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர். நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதிமுகாம்களில் அடைப்பட்டிருந்தபோதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.

எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது. நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐதேக பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியினர் தெரிவித்திருந்தனர்.

தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், வெளிநாட்டு பணத்தில் பெண்ணிலை வாதம் பேசித்திரிபவர்களுக்கும் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இந்த கொடுமைகளை தினம் தினம் அனுபவித்து வருகிறார்கள்.

கிழக்கிலே திருக்கோவில் சம்பவம் போல, வடக்கிலே மண்டைதீவு சம்பவம் போல தினம் தினம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்கள் இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களாலும், சிங்களவர்களாலும் ஏன் முஸ்லீம்களாலும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

திருக்கோவிலில் தமிழ் பெண்கள் சிங்களவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி இனஐக்கியம் பேசும் எந்த ஒரு சிங்கள அமைப்புக்களோ அல்லது பெண்கள் அமைப்புக்களோ வாயே திறக்கவில்லை.

அதேபோன்று காரைநகரில் தமிழ் பெண் ஒருவர் முஸ்லீம் இரும்பு வியாபாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது முஸ்லீம் அரசியல்வாதிகள் குற்றவாளியை காப்பாற்ற முற்பட்டனரே தவிர அக்குற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

லண்டனிலும் கொழும்பிலும்  பியர் அடிப்பதற்கும் களியாட்டம் போடுவதற்கும் சமஉரிமை கேட்டு போராடிவரும் பெண்ணிலை வாதிகளுக்கும் திருக்கோவில் சம்பவமோ மண்டைதீவு சம்பவமோ காதில் கேட்காது. டெல்லி சம்பவம் மட்டுமே காதில் கேட்கும்.   ஏனெனில் இங்கே பாதிக்கப்படுவது அப்பாவி நாதியற்ற தமிழ் பெண்கள் அல்லவா…..

-இரா.துரைரத்தினம்

www.thinakkathir.com

எப்படிதான் இந்த ஈனப்பிறவிகளுக்கு மன வருகின்றதோ இப்பிஞ்சுகளை சிதைக்க.

அன்பண்ணா டெல்லிப் பொண்ணுக்காக போராட்டம் நடத்தினால் ரீவியிலை காட்டுவினம் படமெடுத்துப் பேப்பரிலை போடுவினம். இதுக்கு போராட்டம் நடத்தினால் எங்களுக்கு பிரியோசனம் இல்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.