Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் சத்தியப்பிரமாணம்

Featured Replies

44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35க்கு இருந்த சுப நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56946-2013-01-15-07-15-12.html



mohan5.jpg

  • தொடங்கியவர்

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் ஷிராணி பண்டாரநாயக்க

 

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, கொழும்பு விஜயராம வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

குறித்த இல்லத்திலிருந்த அவரது தனிப்பட்ட பொருட்கள் அனைத்தையும், கொழும்பு, றோயல் பார்க்கிலுள்ள தனது சொந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56939-2013-01-15-06-31-09.html

  • தொடங்கியவர்

cartoon2(343).jpg

  • தொடங்கியவர்

cartoon-2(33).jpg

  • தொடங்கியவர்

புதிய நீதியரசர் நியமனத்துடன் மோதல் முடிந்து விட்டதா?
 
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகிய வற்றுக்கிடையே இடம் பெற்றுவருகின்ற மோதல், அவரை பதவிநீக்கம் செய்து புதிய பிரதம நீதியரசரொருவரை நியமித்ததுடன் முடிந்துவிட்டதா? இந்தக் கேள்விக்கு அரசியல் பிரமுகர்கள் அளித்த காரசாரமான பதில்கள் இதோ

தற்போதுதான் மோதல் ஆரம்பம் - மனோ கணேசன்

நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகியவற்றுக்கிடையிலான மோதல், புதிய பிரதம நீதியரசரொருவரை நியமித்ததனூடாக முடிவுக்கு வரவில்லை. இப்போதுதான் மோதல் ஆரம்பித்துள்ளது.

நமது நாட்டில் எதேச்சாதிகார ஆட்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பது வெள்ளிடைமலையாக நாட்டுக்கும், உலகுக்கும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு தவறுகளையும், குற்றங்களையும் செய்துவரும் இந்த அரசு, மக்கள் நியாயம் வேண்டி இறுதியாகச் செல்லும் உயர்ந்த இடமான நீதிமன்றத்தையும் தட்டிப்பறித்து தனதாக்கிக்கொண்டுள்ளது. இதனூடாக மக்களின் அடிமடியிலேயே அரசு கைவைத்துள்ளது.

ஜனநாயகம், நீதி, நேர்மை, நியாயம், மக்கள் ஆட்சி என்பன தொடர்பில் பேசுவதற்கு இந்த அரசுக்கு இனி அருகதை கிடையாது. நீதித்துறைச் சுயாதீனத்தை இல்லா தொழித்ததன் பின்விளைவுகளை அரசு வெகுவிரைவில் சந்திக்கும் என்றார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

 



பிரச்சினைகள் பன்மடங்காகும் - விஜித ஹேரத் எம்.பி.

இனிமேல்தான் பிரச்சினைகள் பன்மடங்காகப் பெருகி நாட்டில் பெரும் அபாயகரமான நிலை தோற்றம் பெறும். இல்லாத பிரச்சினைகள் திடீரென உருவெடுக்கும். சட்ட விரோதமான முறையிலேயே பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டார்.

அத்துடன், புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமில் அங்கம் வகிக்காதவர். இவ்வாறு இந்தக் குழாமில் அங்கம் வகிக்காதவரை பிரதம நீதியரசராக நியமித்தது பெரும் பிழையாகும்.

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர் இன்னுமொரு ராஜபக்ஷதான். அமைச்சரவை ஆலோசகராகவும், பல்வேறு அரசு நிறுவனங்களின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிப்பவருமான இவர், பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவராவார்.

எனவே, இப்படியான ஒருவரை புதிய பிரதம நீதியரசராக நியமிப்பதனூடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளெல்லாம் இனி தோன்றும். அத்துடன், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல்போகும். நீதித்துறை மீது அவர்களுக்கு பெரும் சந்தேகங்கள் ஏற்படும்.

மேலும் நாட்டில் ஜனநாயகம், நீதித்துறை வீழ்ச்சிக்கே இது வழிவகுக்கும்  என்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்.

வலுவான எதிர்க் கட்சி தேவை - பாலித்த ரங்கே பண்டார

சக்திமிக்க பொது எதிர்க்கட்சியொன்று தேவை என்பதை நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகியவற்றுக்கிடையிலான மோதல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தன்னிச்சையாகத் தாம் எடுக்கும் தீர்மானத்தை மிகவும் இலாவகமாக நிறைவேற்றி முடிக்கும் இந்த அரசின் ஆட்சியை வீழ்த்துவதற்கு சக்திமிக்கதொரு பொது எதிர்க்கட்சி நாட்டில் உருவாக்கப்படவேண்டும். அதுதான் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற பிரச்சினைக்கு ஒரே வழி.

அரசு தொடர்ச்சியாக ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றது என்பதற்கு நீதித்துறை சுயாதீனத்தை முடக்கும் அதன் நடவடிக்கை தக்க உதாரணமாகும்.
எனவே, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகியவற்றுக்கிடையில் மட்டுமல்ல, நாட்டில் இடம்பெற்றுவருகின்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டுவர சக்திமிக்க ஒற்றுமையான பொது எதிர்க்கட்சியொன்று தேவை.

தலைமைத்துவம் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. முதலில் சக்திமிக்க பொது எதிர்க்கட்சியொன்றை உருவாக்க நடவடிக்கை எடு ப்போம்  என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார.

 

http://onlineuthayan.com/News_More.php?id=533691770316658233

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.