Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சரவை மாற்றத்தால் மட்டும் இலக்கை எட்டிவிட இயலாதே...!

Featured Replies

கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் கடந்த வாரம் நடந்தேறியுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெறத்தக்க இலாகா மாற்றங்கள் தொடர்பாக பலவித எதிர்வு கூறல்களும் முன்னர் வெளியிடப்பட்டு வந்துள்ளன.  ஆனால் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பதவிப் பொறுப்புக்களில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

 

 

 

உலகிலேயே பெரிய அமைச்சரவை என்ற சாதனை

புதிதாக உருவாக்கப்பட்ட ஏழு அமைச்சுக்களுடன், தற்போது அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதால் அந்த தொகை 67 ஆக அதிகரிக்கிறது.

 

 

பிரதி அமைச்சர்கள் 28 பேர் மற்றும் திட்ட அமைச்சர்கள் இருவர் என அமைச்சர்களது முழு எண்ணிக்கை 97 என்பதுடன், கண்காணிப்பு அமைச்சர்கள் மூன்று பேருடன் இந்தத் தொகை நூறு என்றாகிறது. பாதுகாப்பு, நிதி, துறைமுக அபிவிருத்தி, விமானசேவை மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு ஆகிய முக்கிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் வசமுள்ளன.


இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் செலவினங்களுக்கென ஒதுக்கப்பட்ட முழுத்தொகையில் மூன்றிலொரு பங்கு தொகை, ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

செலுத்தப்பட வேண்டிய கடனுக்கான தவணைக் கட்டணங்களைத் தவிர்த்து, அமைச்சுக்களுக்கான செலவினத்துக்கு ஒதுக்கப்பட்ட முழுத் தொகையில் இது 52 சதவீதமாகும்.


அதேவேளை சுதந்திர இலங்கையில் ஆட்சி அதிகாரம் வகித்த அரசுகளில், இன்றைய அரசே மிகப்பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

 

வழக்கமாக வினைத்திறனை உயரவைக்கும்  நோக்கிலோ அல்லது அரசின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் பொழுதோ இல்லையேல் சில திணைக்களங்களில் சவால்கள் உருவாகும் பொழுதோதான் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுதல் வழக்கம்.


அவற்றுக்குப் புறம்பாக, சில அமைச்சுக்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள சம்பந்தப்பட்ட அமைச்சரால் இயலாது போகும் வேளையிலும், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதுண்டு.

 

அமைச்சரவையில் மேற்கொள்ளும் மாற்றத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் வினைத்திறனை வெற்றிகரமாக ஈட்டிக்கொள்ள இயலுமா என்பது குறித்தும் கவனத்தில் கொண்டே அத்தகைய மாற்றத்தை மேற்கொள்வது பயன்தரவல்லதாகும். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அமைச்சர்கள் பலரின் பொறுப்புக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


அண்மைக் காலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த மின்சக்தி அமைச்சின் பொறுப்புக்கள் சம்பிக்க ரணவக்கவிடமிருந்து பறிக்கப்பட்டு பவித்ரா வன்னியாராய்ச்சியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது சிலவேளை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நடவடிக்கைகளால் ஜனாதிபதி அதிருப்தியுற்றதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முடிவாகவும் இருக்கக்கூடும்.


மின்சக்தி அமைச்சின் கீழ்வரும் மீளுருவாக்க மின்சக்திப் பிரிவு அவ் அமைச்சின் கீழிருந்து அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை, மின்துறை அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கு வேறு ஏதோவொரு பலமான காரணம் இருக்கக்கூடுமென எண்ண வைக்கிறது.

 

பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நிலவிய தரமற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினை காரணமாக அந்த அமைச்சுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடமிருந்து பொறுப்புக்கள் மீளப்பெறப்பட்டு அவை அமைச்சர் அனுர பிரியதர்சனயாபா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் அவ் அமைச்சில் நிலவி வந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலுமென ஜனாதிபதி நம்பியிருக்கக்கூடும். ஆயினும் அரச நிறுவனங்களில் நிலவும் சிக்கல்களை அவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தீர்த்து விட முடியுமா? என்பது சந்தேகத்துக்குரியதொன்றே.

சுற்றாடல்துறை மற்றும் மின்சக்தி மீளுருவாக்க அமைச்சு, மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சு ஆகியவை முறையே அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த மற்றும் சம்பிக ரணவக்க ஆகியோருக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை, புதிய அமைச்சுக்களின் செயற்பாடுகளில் அவ்விருவரும் தத்தமது திறமையை வெளிப்படுத்துவதை எதிர்பார்த்தேயாகும்.


 

அமைச்சரவை மாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது

எது எவ்வாறான போதிலும், அண்மைய அமைச்சரவை மாற்றம், அரச நிறுவனங்கள் பலவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலானதா? அல்லது வேறு அரசியல் பின்னணி கொண்டதா என்ற கேள்வி பல தரப்புக்களாலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு முன்நின்று ஆதரவளித்தோரைக் கௌரவித்து உற்சாகப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென்பது மற்றொரு தரப்பினரின் வாதமாகும். புதிதாக நிறுவப்பட்ட அமைச்சுக்கள் குறித்து பல தரப்பினர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 

குறிப்பாக, சீனிக் கைத்தொழில் அமைச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தனக்குத் தேவைப்படும் சீனியை இறக்குமதி செய்து வரும் இலங்கைக்கு, சீனிக் கைத்தொழிலுக்கு மட்டுமென ஒரு அமைச்சு உருவாக்குவது பொருத்தமானதுதானா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இத்தனைக்கும் இலங்கையில் பெரிய அளவில் சீனி உற்பத்தி மேற்கொள்ளப்படுவதில்லை என்ற உண்மையைம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நட்டத்தில் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை அரசு கையகப்படுத்திக் கொண்ட போதிலும், இதுவரை சீனி உற்பத்தி முயற்சியில் சாதகமான பயனை ஈட்ட முடியவில்லை.

 

தற்போது அந்த துறைக்கென தனியான அமைச்சொன்றை உருவாக்கியுள்ளமையால் நிர்வாக தரப்புக்களை உருவாக்க அரசு பெருந்தொகைப் பணத்தை செலவிட்டாக வேண்டும். இத்தகைய பயனற்ற முயற்சிகளால் நாட்டின் பொதுமக்கள் மீது மேன்மேலும் வாழ்க்கைச் சுமையைச் சுமத்துவதாகவே அமையும்.


முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, தாவரவியல் மற்றும் பொது விநோதங்கள் அமைச்சு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சு போன்ற அமைச்சுக்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த துறைகளுக்கென தனித்தனியான அமைச்சுக்கள் அவசியமானவைதானா? அல்லது இவற்றை வேறொரு அமைச்சின் அலகொன்றாக இணைத்துக் கொள்ள இயலாதா? என்ற கேள்விகளும் எழாமலில்லை.


இந்த துறைகள் முன்னர் இணைக்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலிருந்து பிரித்து எடுக்குமளவுக்கு இந்த துறைகளின் செயற்பாடுகளில் சிக்கல்கள் எதுவும் நிலவியதில்லை.

 

அந்த வகையில் புதிதாகச் சில அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருந்தமையே, அண்மைய அமைச்சரவை மாற்ற நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்பது தெளிவாகப் புலப்படுமொரு உண்மையாகும்.


இன்றைய நிலைமையில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்வதென்பது , உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் பயனளிக்குமானால் அது பெறுமதி மிக்கதே.

 

அதற்காக ஒரு அமைச்சின் கீழ் இயங்கும் அலகுகளைப் பிரித்து வெவ்வேறு அமைச்சுக்கள் ஆக்குவதாலோ, புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்படுத்துவதாலோ அத்தகைய எதிர்பார்ப்பை வெற்றிகரமானதொன்றாக ஆக்கிக் கொள்ள இயலாது.


தேவைப்படும் ஆளணிக்கு மேலதிகமாக ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு நாட்டு மக்களது பணத்தில் சம்பளம் வழங்குவதால், வினைத்திறன் மிக்க திருப்திகரமான சேவையை எட்டிவிடஇயலாது. அதற்காக, நோக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வதே அவசியமானதொன்றாகும்.

 

ஒரு அரச நிறுவனத்தின் சேவையைப் பூரணப்படுத்த வேண்டுமானால், ஆளணியை மென்மேலும் அதிகரித்துக் கொள்வதை விடுத்து, சேவையிலுள்ள ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிக்க வைக்க வழிவகை மேற்கொள்ளுதல் அவசியம்.


அதே வேளை நாட்டில் மேலதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் அரசு வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலும்.

 

 

புதிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படுதல் அவசியம்

புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் புதிய தொழில் முயற்சிகளை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையொன்றாகும். முதலீட்டு முயற்சிளுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது தொழிற்சாலைகளை மூடி வருவது குறித்தும், அவற்றில் பணி புரிந்த தொழிலாளர்கள் தமது தொழிலை இழக்க நேர்வது குறித்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன.


ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்ட போதிலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தற்போதும் அச்சலுகையை முற்று முழுதாக நிறுத்திக் கொள்ளவில்லை.

 

ஆயினும் இலங்கை ஜனநாயக நடைமுறைகளை உரிய வகையில் பேணிச் செயற்படுவதிலேயே ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அச்சலுகையை நிறுத்தாது தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவது தங்கியுள்ளது.

தற்போதைய இலங்கை அரசின் நடைமுறைப் போக்கால் அந்த நாடுகள் குறிப்பிட்ட சலுகையை எதிர்காலத்தில் முற்று முழுதாக நிறுத்திக் கொள்ளும் அபாயம் ஏற்பட இடமுண்டு.

 

 

எமது நாட்டு மக்களது வாழ்வியல் சுபீட்சம் மேற்குலக நாடுகளின் சந்தை வாய்ப்புக்களிலேயே தங்கியுள்ளது என்பதை உணராமல் எமது நாட்டு ஆளும் தரப்பினர் சிலர் மேற்குலக நாடுகளுக்குச் சண்டித்தனம் காட்டும் விதத்தில் செயற்பட்டு வருகின்றனர்.


வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் செயற்பட்டால் மாத்திரமே நாம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்க இயலும்.

 

இருக்கும் முதலீட்டாளர்களையே வெளியேற வைக்கும் விதத்தில் செயற்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க இயலாது. அத்தகைய போக்கை மாற்றிக் கொள்ளாமல், அமைச்சுக்களையும், அவற்றுக்கான அமைச்சர்களையும் புதிது புதிதாக உருவாக்கிக் கொள்வதால் பயனேதும் விளைந்து விடப்போவதில்லை.

உல்லாசப் பயணத்துறையை ஊக்குவித்து, அதனை அபிவிருத்தி செய்வது அரசின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. ஆயினும் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உல்லாசப்பயணத்துறை மூலம் நாடு ஈட்டிக்கொண்ட வெளிநாட்டுச் செலாவணி காலப்போக்கில் வீழ்ச்சி கண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

அந்த வகையில் அரசின் இன்றைய அரசியல் அடிப்படையிலான பொருளாதார நோக்கு மற்றும் செயற்பாடு என்பனவே பிரச்சினைக்கு உரியதொன்றாக இருந்து வருகிறது. அமைச்சரவையை மாற்றி அமைப்பதன் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு கண்டுவிட இயலாது.


அது மட்டுமன்றி அண்மைய அமைச்சரவை மாற்றத்தில் பெரும் வேறுபாடு எதனையும் குறிப்பிட்டுக் கூற இயலாதுள்ளது. அந்த வகையில் இது அரசியல் தேவை காரணமாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றமொன்று என்றே கருதவேண்டியுள்ளது.

 

"மலையைக் கெல்லி எலியைப் பிடித்தமை போன்று' என்றொரு முதுமொழி வழக்கிலுண்டு. இது அதனையொத்த ஒன்றல்ல. இங்கு பிடிக்கப்பட்டுள்ளது இரத்தத்தை உறிஞ்சும் அட்டையொன்றே. இந்த நாட்டின் பொது மக்களது இரத்தத்தை உறிஞ்சியே அமைச்சரவையை விரிவுபடுத்தி செயற்பட வைக்கப்பட்டுள்ளது.


இந்த அமைச்சர்களதும், அவர்களது உதவியாளர்களதும் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்த இந்த நாட்டு பொது மக்களது பணமே செலவிடப்படவுள்ளது. இது இந்த நாட்டுப் பொதுமக்கள் தலை மீது வாழ்க்கைச் சுமை மேன்மேலும் சுமத்தப்பட வழிவகுக்கிறதே அன்றி இதனால் வேறேதும் பயன் கிட்டப் போவதில்லை.



லங்காதீப (சீ.ஜே.அமரதுங்க )

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1164545904532352

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.