Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்ஹெய்ம் காத்திரமான யோசனைகளை முன்வைக்கவில்லை என்கிறது அரசாங்கம் - விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எரிக் சொல்ஹெய்ம் காத்திரமான யோசனைகளை முன்வைக்கவில்லை என்கிறது அரசாங்கம் - விக்கிலீக்ஸ்
05 பெப்ரவரி 2013
 
விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்
 
இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் காத்திரமான யோசனைகளை முன்வைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கானத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிக்  சொல்ஹெய்ம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை அடிப்படையாக் கொண்டு, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும், இலங்கை சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவிற்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான குறிப்புக்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
 
உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை சொல்ஹெய்ம் வலியுறுத்தியதாக ஜயந்த தனபால தெரிவித்துள்ளார். அதாவது சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இடைக்கால நிர்வாகம் குறித்த புலிகளின் யோசனையை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்ஹெய்ம் அரசாங்கத்தை வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இந்த யோசனைத் திட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்து சொல்ஹெய்ம் உறுதியாக எதனையும் குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். புலிகள் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது பற்றிய உறுதிமொழிகள் இன்றி இலங்கை அரசாங்கத்தை தீர்மானம் எடுக்குமாறு சொல்ஹெய்ம் கோரியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டாட்டினால் இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தின் மீது ஏனைய தரப்பினர் அதிகளவான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தூதுவர் லான்ஸ்டாட் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களினால் மட்டுமே புலிகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் எனவும், அமெரிக்க புலம்பெயர் தமிழர்களுடன் நிiமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகுமாறு ஜயந்த தனபால அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.
 
யுத்த நிறுத்த உடன்படிக்கைகளுக்கு புலிகள் உரிய முறையில் மதிப்பளிப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோயில் பகுதியில் யுத்த நிறுத்த விதிகளை மீறி முன்னரங்கப் பகுதிகளை புலிகள் விஸ்தரித்து வருவதாக ஜயந்த தனபால தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 

எனினும், இந்த யோசனைத் திட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்து சொல்ஹெய்ம் உறுதியாக எதனையும் குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். புலிகள் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது பற்றிய உறுதிமொழிகள் இன்றி இலங்கை அரசாங்கத்தை தீர்மானம் எடுக்குமாறு சொல்ஹெய்ம் கோரியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதை அரசாங்கம் சொன்னபடியால் எற்றுக்கொள்ளபட்டு தரவாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைபடுகிறது. புலிகள் சொல்லியிருந்தால் அதை பிழை என நிரூபிக்க ஜெயராஜா சிறைக்குள் இருக்கும் குமரன் பத்மநாதனை பேட்டி காணுவார். வேலிக்கு ஓணான் சாட்சி. சொல்லெயும் வன்னியில் வேவு பார்த்து விபரங்களை அரசுக்கும், அமெரிக்காவுக்கும் கொடுத்தார். அரசு அந்த நன்றியை தன்னும் சொலெயுமுக்கு காட்டவில்லை.

சில சில சிக்கல்கள் இருந்திருந்தாலும் சிங்களமும் சொல்ஹ்ஹெமும் ஒன்றாகவே பயணித்தனர். அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்.

 

ஆனால் எதை சிங்களம் விரும்பியதோ அதை நோர்வையை வைத்து சாதித்த பின்னர் நோர்வேயை ஏமாற்றிவிட்டது சிங்களம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.