Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மாணவருக்கு அநீதி! சாதனைகளுக்கு தோள்தட்டிக் கொடுக்க யாருமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

175827079school.jpg

மலையக மாணவருக்கு அநீதி! சாதனைகளுக்கு தோள்தட்டிக் கொடுக்க யாருமில்லை

கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்களுள் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் பாலச்சந்திரன் சாய்பிரசாத் எவ்வித ஊக்குவிப்புகளும் இன்றி ஒரம் கட்டப்படுவதாக தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். lg-share-en.gif

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்தின் சொந்த நிதியீட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கிவைக்கும் நிகழ்வு (10-02-2013) நுவரெலியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. 

இன, மொழி பாகுபாடு இன்றி சுமார் 800 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன. கல்வி அமைச்சின் மேற்பாiர்வை அமைச்சராக கடமையாற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மெகான்லால் கிரேரு பிரதம அதிதியாக கலந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தொழிலாளர் தேசிய முன்னணி செயலாளர் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

´இந்தக்காட்டில, எந்த மூங்கில், புல்லாங்குழல்´ என்கிற ஹைக்கூ கவிதை கவிதை ஆழமான அர்த்தங்களை எடுத்துச்சொல்கிறது. ஒரு காட்டில் வளரும் அனைத்து மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை. ஒரு சில மூங்கில்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது போலத்தான் இந்த மாவட்டததில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய இந்த பரீட்சையில் நீங்கள் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறீர்கள். 

வெற்றியைப் பெற்றுக்கொள்வது போன்றே அதனை தக்கவைத்துக் கொள்வதும் முக்கியத்துவமுடையது. சிலர் ஒருதடவை வெற்றியின் மமதையுடன் அந்த வெற்றியின் மூலம் பெற்ற பயனை இழந்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் மாணவர்கள், பெற்றொர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டும். 

இம்முறை நுவரெலியா மாவட்டம் புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தைப்பெற்றுக் கொண்டுள்ளது. முதலாவது இடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை ஹட்டனைச் சேர்ந்த பாலச்சந்திரன் சாய்பிரசாத் எனும் மாணவன் 192 புள்ளிகளைப்பெற்று சாதனைப்படைத்துள்ளார். ஆனாலும், ஒரு அரச வங்கியின் அனுசரனையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ´புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகட்ச புள்ளிகளைப்பெற்ற´ மாணவர்களுக்கான பாராட்டு விழாவுக்கு இந்த மாணவன் அழைக்கப்படவில்லை. அழைக்காததன் காரணம் அந்த மாணவன் புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட வங்கியில் சேமிப்பு கணக்கினை பேணவில்லை எனும் காரணம் சொல்லப்பட்டுள்ளது. இது கல்வித்தகுதியை விட பணரீதியான தகுதியே பாராட்டுக்கான வாய்ப்பாக அமைகின்ற தவறான உதாரணத்தை சமூகத்திற்கு வழங்குகின்றது. 

தவிரவும் ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தின் சார்பில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற ஆறு மாணவர்களுக்கு ´ஜப்பான்´ நாட்டுக்கு புலமைச்சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. எல்லா இன மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்வாங்கப்படும் இந்தக் குழுவில் இந்திய வம்சாவளி மலையக மாணவனான சாய்பிரசாத் 192 புள்ளிகளைப்பெற்றும் உள்வாங்கப்படாமை வேதனையளிக்கிறது. 

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் கல்வி அமைச்சின் மேற்பார்வை அமைச்சர் மொகான லால் கிரேரு இந்த விடயத்தை கல்வி அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அந்த மாணவனுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பாராயின் அது இங்கே கூடியிருக்கும் மாணவர்களுகக்கும் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் வழங்கும் கௌரவமாக அமையும் என தெரிவித்தார். இவரது உரை தமிழ் மற்றும் சிங்களம் இரண்டு மொழிகளிலும் அமைந்திருந்தது. 

விழாவில் உரையாற்றிய கல்வி அமைச்சின் மேற்பார்வை அமைச்சர் மொகான லால் கிரேரு தாம் தமிழில் உரையாற்ற முடியாமைக்காகவும் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவனுக்கு உரிய நீதி கிடைக்காமைக்காகவும் மனவருத்தம் அடைவதாகவம் தெரிவித்தததோடு முதலாம் இடத்தைப்பெற்ற மாணவனுக்கு தனது சொந்த பணத்தில் 10000 ரூபாவை பரிசாக உடனடியாக வழங்கிவைத்தார். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.