Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தமாதம் மத்தால ராஜபக்ச விமான நிலையம் திறப்பு – ஓடிஒளியும் இந்திய விமான நிறுவனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maththala-Airport.jpg

சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. 

எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

மார்ச் 18 தொடக்கம் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், வாரத்தில் மூன்று தடவைகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மத்தால வழியாக றியாத் செல்லவுள்ளது. 

அதேவேளை, அன்று தொடக்கம் சீனாவின் ஈஸ்ரேன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கொழும்பு – பெய்ஜிங் இடையிலான விமான சேவையும் மத்தால வழியாக இடம்பெறவுள்ளது. 

கட்டுநாயக்கவில் இருந்து மாலேக்கு இடம்பெறும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையும், மத்தால வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது. 

மிகின் லங்கா விமானம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத்தால வழியாக புத்தகயாவுக்கு சேவையை நடத்தவுள்ளது. 

மத்தால அனைத்துலக விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடத்த அனைத்துலக விமான நிறுவனங்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. 

இதனால், சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. 

விமான நிறுவனங்களை கவர்வதற்காக திறந்த வான்கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

விமானங்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

தரையில் பொருட்களை கையாள்வதற்கான கட்டணத்தில் 50 வீத சலுகையும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது. 

எமிரேட்ஸ், கட்டார் எயர்வேஸ், எடிஹாட், எயர் அரேபியா, சீனாவின் சிசுவான் எயர்லைன்ஸ், கொரியன் எயர்லைன்ஸ், போன்றன மத்தாலவுக்கு சேவை நடத்த இணங்கியிருந்தன. 

எனினும் அவை உடனடியாக சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக இல்லை. 

இதனால், சிறிலங்கா அரசாங்கம் இந்த நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. 

அதேவேளை, இந்தியாவின் எந்தவொரு விமானசேவை நிறுவனமும், மத்தால விமான நிலையத்தின் ஊடாக சேவையை நடத்த முன்வரவில்லை. 

இந்தியாவில் இருந்தே சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் மத்தால விமான நிலையத்தைப் புறக்கணிப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கட்டுநாயக்கவுக்கும், இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கும் இடையில் எயர் இந்தியா, ஜெட் எயர்வேய்ஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமானசேவைளை நடத்தி வருகின்றன.

அம்பாந்தோட்டை, மத்தாலவில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய அனைத்துலக விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 209 மில்லியன் செலவில் கட்டிமுடித்துள்ளது,

அத்துடன் மத்தால ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை அனைத்துலக மற்றும் உள்நாட்டு போக்குவரத்து விமான நிலையமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை, சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நிமலசிறி வெளியிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130213107774

இந்தியாவில் இருந்தே சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் மத்தால விமான நிலையத்தைப் புறக்கணிப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆம் இந்தியா புறக்கணிக்க தொடங்கிவிட்டது ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.