Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, புலம்பெயர் தமிழர்களுடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh-premachandran-seithy-20120919-150

தமிழ் மக்களுடைய தனித்துவம், சுயநிர்ணய உரிமை, இறையாண்மை போன்ற விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்களுடைய உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்காகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் இங்குள்ள தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தர்.

  

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயம் மற்றும் ஜேர்மன் மாநாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற முக்கியஸ்தர்கள் பங்குபற்றியிருந்தனர். இம் மாநாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வுகள் பல்வேறுபட்ட சிந்தனைகளை முன்வைத்துப் பேசியுள்ளோம். குறிப்பாக எங்களது தனித்துவம்,சுயநிர்ண உரிமை,இறையாண்மை உள்ளிட்ட எல்லாவற்றையும் பிரயோகித்து தமிழ் மக்களுடைய உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்வது என்ற சிந்தனையுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசியுள்ளோம்.

 

இந்த நாடு இரண்டு தேசங்களைக் கொண்ட நாடு. இந்த நாட்டில் எவ்வாறு ஏனைய இனங்களுடன் தமிழர்களும் இணைந்து வாழ முடியும். என்பது தொடர்பாகவும் பேசியுள்ளோம். இதற்காக இம் மாநாட்டில் பல்வேறு சிந்தனைகள் தொடர்பாக கலந்துரையாடினோம்.எதிவரும் மார்ச் மாதம் அளவில் எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இங்குள்ள தமிழ் அரசியல் கட்சியினரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அமைப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக இம் மாநாட்டில் கலந்துரையாடினோம் என்றார்.

 

இதேவேளை அவர் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், இவ் விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜயம் எமக்குப் பல எதிர்பார்புகளை பெற்றுத் தந்துள்ளது. தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை சரியான தளத்தில் நகர்த்துவதற்கான ஏற்பாட்டையும் பெற்றுத்தந்துள்ளது.

 

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்க்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறான முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதில்தான் எமது முடிவு தங்கியுள்ளது. இந்த விஜயத்தினால் தென்னாபிரிக்க நாடு மாத்திரமல்லாமல் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துளைப்புகளையும் பெற்றுக்கொள்ளக்கூடுய சந்தர்ப்பம் எமக்கு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்க விஜயத்தினூடாக எமக்கு சிறந்த நன்மைகள் கிடைக்கும் என எதிபார்க்கின்றோம் என்றார்..

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75993&category=TamilNews&language=tamil

புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என பலம்வாய்ந்த அலன் கீனனும் கூறி இருந்தார். அதன் மூலமே சர்வதேச அங்கீகாரத்தை பலப்படுத்த முடியும் என கேட்டிருந்தார்.

 

அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டுமல்லாது வரலாற்று தேவையும் உள்ளதாக உணர முடிகின்றது.

 

இருந்தாலும் இந்தப்பாதையில் அவதானமாக பயணிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.