Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநாவை நோக்கிச் செல்லும் "தமிழ் வான் " - இரண்டாம் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Tamil-van-to-UNO-130213-150.jpg

ஈகைப் பேரொளி முருகதாஸ் அவர்களின் 4 ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியா Harrow நகரில் ஆரம்பமாகிய நீதி கேட்டு ஐநாவை நோக்கிச் செல்லும் "தமிழ் வான்" இரண்டு நாட்களை கடந்து இன்று அதிகாலை 1:30 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்திருன்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக Harrow , London நகரங்களில் " தமிழ் வான்" நடமாடும் கண்காட்சி ஊடாக ஈழத்தமிழர்களின் மீது சிங்கள இனவெறி அரசு முன்னெடுக்கும் இனவழிப்பை பிரித்தானியா மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஆரம்பித்திருந்தது.

  

சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கும் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி வைக்கப்பட்டு , காணொளி ஊடாக தமிழ் இன அழிப்பு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது .

 

"தமிழ் வான்" னின் நடமாடும் கண்காட்சியை பார்வையிட்ட மக்கள் , கண்ணீர் வடித்து தமது ஆதரவை தெரிவித்தது இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்திருந்ததாக குறிப்பிடிருந்தார்.

 

மூறாவது நாளான 14.2.2013 அன்று "தமிழ் வான்" பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற முன்றலில் சென்றடைய உள்ளது . அங்கு பிரான்ஸ் தமிழர் பேரவை கவனயீர்ப்பு நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளார்கள் . அத்துடன் அங்கு கண்காட்சி வைக்கப்பட்டு பிரான்ஸ் மொழியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது . அத்தோடு அரசியல் பிரமுவர்களுடனான சந்திப்புகளும் நடைபெற உள்ளது.

பிரான்சு பாராளுமன்றம் முன் 14/02/2013 அன்று நீதி கேட்டு ஒன்றுகூடுவோம்.

நேரம்: மாலை 3.00 மணி

 

Metro: Assembl�e Nationale (Ligne 12)

எதிர்வரும் நாட்களில் தமிழ் வான் Holland ,Belgium ,Luxemburg ,Germany , Austria , Italy , Swiss , நாடுகளை ஊடறுத்து ஜெனீவா ஐநாவை சென்றடைய உள்ளது .

 

இறுதி நாளான 4.03.2013 அன்று மாபெரும் மக்கள் போராட்டம் ஐநா வளாகத்தில் ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றது ..ஐ.நா வில் நடைபெறவிருக்கும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை தமிழீழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.

 

சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 65ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது.

 

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா?

 

இன்று மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடந்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.

 

உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும்.

 

நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும்.

 

நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .

 

புலத்தில் பிரித்தானியாவில் இருந்து அன்று சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் பல்வேறு தமிழின உணர்வாளர்களின் பல்வேறு போராட்டங்களை கடந்து இன்று மீண்டும் சிவந்தன் அவர்களின் "தமிழ் வான்" னின் நடமாடும் தமிழ் இன அழிப்பின் கண்காட்சி போராட்டம் ஐநாவை நோக்கிச் செல்கின்றது.

 

இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

 

இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 22 வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்தே ஐநாவை நோக்கி தமிழ் வான் பயணிக்கின்றது.

 

நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.

 

நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

 

நன்றி

தொடர்புகட்கு :

info@tamilvan.com

http://tamilvan.com/

http://walk-for-justice.org/

 

Tamil-van-to-UNO-130213-(3).jpg

 

 

Tamil-van-to-UNO-130213-(4).jpg

 

 

Tamil-van-to-UNO-130213-(5).jpg

 

 

Tamil-van-to-UNO-130213-384-(2).jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tamilvan-seithy-2-20130216-150.jpg

பிரித்தானியாவில் இருந்து 12.02.2013 அன்று ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி ஐநாவை நோக்கி பயணிப்பதுக்கு ஆரம்பித்த "தமிழ் வான் " அதன் நடமாடும் கண்காட்சியுடன் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் முன்றலில் தரித்து நின்று பிரான்ஸ் மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டது. காலநிலை சீரான முறையில் அமைந்திருக்காத நிலையில் கூட இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் இனவழிப்பை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி மற்றும் காணொளி ஊடாகவும் கவனயீர்ப்பை நடாத்தியதோடு மற்றும் பிரான்ஸ் மொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

  

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட தளபதி கேணல் பரிதி அண்ணாவின் விடயம் கண்காட்சியில் சுட்டிக் காட்டப்பட்டதை பிரான்ஸ் மக்கள் பார்வையிட்டு தமது நாட்டு அரசாங்கம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். 5 நாளாக இன்று 16.02.2013 பிரான்சில் தமிழ் வான் தொடர்ந்து பின்வரும் இரு இடங்களில் Parvis de Droite de L'Homme et Place de Saint Michel தனது கண்காட்சியை தொடர இருக்கிறது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழ் வான் ஹோல்லாந்து நாட்டை நோக்கி பயணிக்க இருக்கிறது .

இலங்கைத்தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக உலகத்தமிழினம் ஒன்றுகூடுகின்ற ஐ.நா முன்றலுக்கு தமிழ் வான் இறுதி நாளான 4.3.2013 அன்று சென்றடைய உள்ளது. மனிதவுரிமை அமர்வுகள் தொடங்க இருக்கும் நாளான அன்றில் இருந்து ஐ.நா சபையின் முன்றலில் பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்று தமிழ் இன அழிப்பு கண்காட்சியை செய்வதுக்கு திரு கஜன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.

தமிழ் வான் நடமாடும் கண்காட்சி பயணம் ஐநா முன்றலில் 4.3.2013 அன்று முற்றுப்பெறுகிறது. அன்றைய நாள் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லவும் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூட உள்ளனர். பிரான்ஸிலிருந்து புகையிரதத்திலும், யேர்மனியிலிருந்து பேரூந்துகளிலும், பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் மற்றும் பேரூந்துகளிலும், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பேரூந்துகளிலும் விமானங்களிலும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியூடன் திரண்டுவர இருக்கின்றனர். தமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது. இந் நிலையில் ஐநா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் திரு.சிவந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

 

tamilvan-seithy-1-20130216-800.jpg

 

 

tamilvan-seithy-2-20130216-800.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76171&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

EU-tamil-van0news190213-150.jpg

ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி ஐநா செல்லும் நடமாடும் கண்காட்சி வண்டி "தமிழ் வான் " இன்று புருசலில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைந்தது . பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 7 ஆவது நாளாக "தமிழ் வான்" புருசலில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல அங்கத்துவ நாடுகளின் அதிகாரிகளுடன் தனது சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது .

  

இச் சந்திப்பில் கலந்துகொண்ட சிவந்தன் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் 65 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை எடுத்துரைத்ததோடு , அங்கு சிங்கள அரசால் பல்வேறு வடிவங்களில் அரங்கேறும் இன அழிப்பை விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது .

சிறப்பாக போர்க்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்றம் , இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரச அதிகாரிகளை, ராணுவ தளபதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டது .

தமிழ் வான் நாளைய நாள் 19.02.2013 அன்று தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனான சந்திப்புக்களை மேற்கொள்ள காத்திருகின்றனர் . அத்தோடு இன்றைய நாளில்அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக கனடா தேசத்தில் இருந்து கனடிய தமிழர் தேசிய அவை ஊடக பேச்சாளர் தேவா சபாபதி அவர்கள் தமிழ் வானுக்கான தமது ஆதரவை தெரிவித்துள்ளதோடு மார்ச் மாதம் 4 திகதி உலகத்தமிழினம் ஐநா நோக்கி பொங்கி எழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது .

தொடர்புகட்கு :

info@tamilvan.com

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76374&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.