Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்காளியின் மருத்துவ தன்மைகள்

Featured Replies

  தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.

மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.

நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டானி அளவு பருமன் கொண்டிருக்கும்.

தக்காளி பழம் மற்றும் தக்காளிப் பழத்தின் ஜூஸ் இவைகள் உடல்நலத்துக்கு பல வகையிலும் நன்மை அளிக்கிறது.

இந்த உண்மை ஏற்கனவே பல கண்டுபிடிப்புக்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது என்று மருத்துவர்கள் தக்காளி பழம் சாப்பிட சிபாரிசு செய்கின்றனர்.

இதை எல்லாம் விட, தக்காளியால் ஆன மாத்திரை ஒன்றை இதய நோயாளிகளுக்கு இதயத்தைப் பலப்படுத்தும் வகையில் கண்டு பிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். அடெரொனொன் கேப்சூல் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை ரத்தக் குழாயினுள் கொழுப்புகள் படிவத்தை எதிர்த்து, ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தை சீராக ஓட வைக்கும். இதன் மூலம் இதய நோயாளிகளுக்கு 50 சதவிகிதம் நிவாரணம் கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இந்த மாத்திரை மூட்டுவலி, சர்க்கரை நோய், புற்றுநோய் இவைகளைத் தவிர்க்கவும் வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பரிசோதனை ஆய்வில் இருக்கும் இந்த மாத்திரை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கிறது தக்காளி.

தக்காளிக் கூழை சாப்பிடுவதால் சூரிய ஒளியால் சருமம் வயதானதைப் போல காணப்படுவதைத் தடுக்கலாம் என்று நியுகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைகொபேன் என்னும் இயற்கை நிறமி தான் நம் சருமம் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. லைகொபேன் சமைத்த தக்காளியிலும், கெச்சப், சூப், ஜூஸ் ஆகிய தக்காளியை வைத்து செய்யப்படும் பொருட்களிலும் அதிக அளவில் காணப் படுகிறது.

இந்த ஆராய்ச்சிக்காக 20 (21 வயதிலிருந்து 47 வயதுள்ள) பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பாதிப் பேருக்கு தினமும் 5 மேசைக்கரண்டி தக்காளிக் கூழும் (55gms) 10g ஆலிவ் எண்ணையும் 12 வாரங்களுக்கு கொடுக்கப் பட்டது. மற்ற பெண்களுக்கு வெறும் ஆலிவ் எண்ணெய் மட்டும் கொடுக்கப்பட்டது.

சோதனைக்கு முன்னும் பின்னும் எல்லா பெண்களும் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டனர். அவர்களது சருமத்தின் மாதிரிகளும் எடுக்கப்பட்டன.

இரண்டு குழுவிலுள்ள பெண்களின் சருமமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. தக்காளி சாப்பிட்டவர்களின் சருமத்தில் சூரியனின் புற ஊதக் கதிர்களின் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ளும் சக்தி 33% அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ப்ரோ கொலாஜென் (procollagen) என்ற சருமத்தின் கட்டமைப்புக்கு உதவும் மூலக்கூறுகளின் அளவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.

சரும வல்லுநர் ப்ரொபசர் திரு பிர்ச்-மாசின் கூறுகிறார்: “தக்காளி சாப்பிடுவதால் கூடுதலான சருமப் பாதுகாப்பு கிடைக்கிறது”. தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டி என் ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது. தக்காளியின் இந்தப் பாதுகாப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட தக்காளியினால் செய்யப்படும் கெச்சப், சூப், ஜூஸ் முதலியவற்றில் லைகோபென் அதிக அளவில் இருக்கிறது; இது நம் உடலால் மிக எளிதில் கிரகித்துக் கொள்ளப் படுகிறது.

லைகோபென் என்னும் அற்புத இரசாயனப் பொருள் :

சருமத்தில் சுருக்கம் விழுவதை குறைக்கிறது;

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அளவுக்குமீறி லைகோபென் உட்கொள்ளுவதும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்; அமெரிக்காவில் ஒரு பெண்மணி எக்கச்சக்கமாக தக்காளி ஜூஸ் குடித்ததால் அவரது சருமம் ஆரஞ்சு நிறமாக மாறிவிட்டது.

லைகோபென்னின் மூலக்கூறுகள் நீரில் கரைவதில்லை அதனால் தக்காளிக் கரை துணியிலோ, சமையலறை தரையிலோ பட்டால் எளிதில் அகற்ற முடியாது.

சீனாவில் கிடைக்கும் Gac என்னும் ஒருவகை இனிப்பு பூசணி வகையில் அதிகபட்ச லைகோபென் (தக்காளியைவிட 70% அதிகம்) இருக்கிறது. பப்பாளியிலும், rosehips இலும் கூட லைகோபென் இருக்கிறது.

பச்சை தக்காளியை விட சமைத்து உண்ணுவது அதிக பலன் அளிக்கும்.

லைகோபென் சூடக்கப்படும் போது அதன் கட்டமைப்பு மாறுகிறது; அதனால் இரத்த ஓட்டத்தில் எளிதாக எடுத்துச் செல்ல படுகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குவதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது.

இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டொக்டர் மைக்லே டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கெதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

285648_483441245048866_1889110324_n.jpg
525633_483441278382196_1852423068_n.jpg
223437_483441328382191_1234375154_n.jpg
68928_483441391715518_1778912742_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 நன்றி முக நூல்

  • கருத்துக்கள உறவுகள்

Quote:"மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டானி அளவு பருமன் கொண்டிருக்கும்."

 

இதன் அருமை முன்னர் தெரியவில்லை, நன்றி பகர்வுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.