Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொமன்வெல்த் நெருக்கடியை சமாளிக்க புது முயற்சி - பங்களாதேசை வளைத்துப் போட 5 பில்லியன் ரூபா

Featured Replies

கொமன்வெல்த் நெருக்கடியை சமாளிக்க புது முயற்சி - பங்களாதேசை வளைத்துப் போட 5 பில்லியன் ரூபா [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 00:31 GMT ] [ கார்வண்ணன் ] Sri-Lanka-Bangladesh.jpgகொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, பங்களாதேசின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அந்த நாட்டை வளைத்துப் போட உடனடியாக 25 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்களை அங்கிருந்து கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. 

சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக கனடா உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வரும் ஏப்ரலில் லண்டனில் கூடவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. 

கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மூலம், இந்தக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்து சிறிலங்கா விவகாரத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் பங்களாதேசின் காலைப் பிடித்துள்ளது. 

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ள பங்களாதேசுக்கு இரண்டு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அந்த நாட்டின் பிரதமர் சேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். 

நேற்று அவர், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் திபு மொனியை சந்தித்துப் பேசியுள்ளார். 

இந்தச் சந்திப்புகளின் போது, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரத்தைச் சேர்த்துக் கொள்வது நீதியற்றது என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு பங்களாதேஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 

இந்தப் பின்னணியில், பங்களாதேசை வளைத்துப் போடும் இன்னொரு முயற்சியாக, சிறிலங்கா அரசாங்கம் அந்த நாட்டுக்கு 25 பில்லியன் ரூபா வர்த்தக வாய்ப்பை வழங்கவும் முன்வந்துள்ளது. 

சிறிலங்கா அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடுகளை போக்கும் வகையிலும், பங்களாதேசுக்கு வர்த்தக வாய்ப்பை வழங்கும் வகையிலும், உடனடியாக 5 பில்லியன் ரூபா பெறுமதியாக மருந்துப் பொருட்களை டாக்காவில் இருந்து இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆண்டில் மருந்துக் கொள்வனவுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பங்களாதேசிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய உடனடியாக 5 பில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு சிறிலங்கா சுகாதார அமைச்சு திறைசேரியிடம் கோரியுள்ளது. 

இந்தியாவில் இருந்தே பெரும்பகுதி மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்து வந்துள்ளது. 

இந்தநிலையில், கொமன்வெல்த் மாநாட்டை இலக்கு வைத்தே திடீரென பங்களாதேசிடம் இருந்து பெருமளவு மருந்துகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20130216107788

கிட்டத்தட்ட இருநூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் பணத்திற்கு ஒப்பந்தம் செய்து பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவியை வளைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

 

இதை ஆங்கிலத்தில் உரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும். காரணம் இது கூட பொதுநலவாய நாடுகளின் பண்பிற்கு முரணானது.

 

 

  • தொடங்கியவர்

ஒழுங்காக கேள்வி தொடக்கி நல்ல ஒரு இடத்தில் குறந்த கேள்வி விலையில் ஒரு அனல் மிசார நிலையத்தை கட்டியிருக்கலாம். அதன் மற்ற கட்டத்திற்கு போவதை சம்பந்த பட்ட பொறியியலாளர் எதிர்க்கிறார்கள். இயந்திரங்கள் பழையது. மின்சாரம் ஒழுங்காக உற்பத்திசெய்ய முடியவில்லை. அதையும் கடனுக்கு சீனா பறித்தெடுக்கிறது. 

 

இந்த நிலையில் அம்பாந்தோட்டையில் பொதுநலவாயத்திற்கு ஆட்கள் வருவார்கள் என்று பல கட்டங்களை சீனா கட்டிக்கொண்டிருக்கிறது. கூட்டம் அம்பாந்தோட்டையில் ந்டந்தாலும் சீனாவுடனான கொந்துராத்தில் பல அவலங்களை எதிர் பார்க்கலாம். நடக்காவிட்டால் என்னவோ தெரியாது. இதற்குள் வங்காளாதேசத்திற்கும் ஒரு பங்கு. இதில்  வங்காள தேசம் இலவச மருந்து இலங்கைக்கு கொடுத்து முடிய எப்படி சுகாதார அமைச்சின் கம்பியூட்டர்களை கையாளுவது என்பதை சீனாவில்த்தான் போய் படித்திட்டு வரவேணும்.( இன்று மாலை ஒபாமாவின் பேச்சையும் அதி குறிப்பிட்ட கணனி இரகசிய திருட்டுக்கு ஆனா பாதுகாப்பு சட்டத்தையும் பற்றி PBSல் விவாதிக்கும் போது, சீனா தொடர்ந்து கட்டுப்பத்த முடியாத அளவில் அமெரிக்க கம்பனிகளின் கணனிகளில் புகுந்து தொழில் துறை இரகசியங்களை திருடுவதாக கூறினார்கள்.)  

 

 

  • தொடங்கியவர்
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்த ஆதரவளிக்கப்படும் - பங்களாதேஷ்
15 பெப்ரவரி 2013 bangadesh_CI.jpg

 

இலங்கையில் வெற்றிகரமான முறையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பங்களாதேஷ் அறிவித்தள்ளது.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ளார்.
 
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.இந்த மாநாடு தொடர்பில் அமைச்சர் பீரிஸ், பங்களாதேஷ் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.


செஞ்சோற்றுக்கடன் பீரிசுக்கு இப்படியெல்லம் உழைக்க வேண்டியிருப்பது.

சிங்கள இனவாதத்திற்கு முன்னால் உள்ள இலக்கு -
எமது நாடு வங்குரோத்தானாலும் தமிழர்கள் இனவுணர்வு அழிக்கப்பட வேண்டும்.
 
அதற்காக கட்சி பேதமின்றி அயராது உழைக்கும் ஒரு சிங்கள தேசியவாதி - பீரிஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.