Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை குற்றத் தடுப்பு பொலிஸாரும் சிவஞானம் சிறிதரனும் மூன்றரை மணி நேர விசாரணையும் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை குற்றத் தடுப்பு பொலிஸாரும் சிவஞானம் சிறிதரனும் மூன்றரை மணி நேர விசாரணையும் ...
18 பெப்ரவரி 2013
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது மூன்றரை மணி நேர விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 
 
எனினும் கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இவ்விசாரணைகளின் போது சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் மற்றும் ஜ.தே.க பிரதி தலைவர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோருடன் இளநிலை சட்டத்தரணியான சயந்தனும் நேரில் சமூகமளித்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
தனது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் மற்றும் குறுந்தகடுகள் இராணுவ தகவல்கள் தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்றதாக சிறீதரன் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். 
 
குறிப்பாக ஏற்கனவே  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் தனிப்பட்ட செயலாளர் பொன்காந்தன் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணைகளது தொடர்ச்சியாகவே இன்றைய விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். 
 
குறிப்பாக தமது அலுவலகத்தில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் குறுந்;தகடுகள் உள்ளிட்டவை பற்றி தாம் முற்றாக நிராகரித்ததாக தெரிவித்த அவர் தமது உதவியாளர்களும் விசாரணைகளின் போது அதனை நிராகரித்திருந்ததாக அறிந்து  கொண்டதாக தெரிவித்தார். 
 
எனினும் தம்மீதான விசாரணைகள் இடம்பெற்ற போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் தனிப்பட்ட செயலாளர் பொன்காந்தன் ஆகியோரது நிலை தொடர்பாகவோ அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்களோ ஏதும் தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
அண்மையில் கிளிநொச்சியிலுள்ள சிறீதரனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் தேடுதலொன்றின் போது ஆணுறைகள் ஆபாச குறுந்தகடுகள் மற்றும் பெண்களது புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் அரச ஊடகங்களினில் பரபரப்பாக வெளியிடப்பட்டதுடன் சிறீரதனும் எந்நேரமும் கைதாகலாமென பரபரப்பு காட்டப்பட்ட போதும் அது நீர்த்துப்போன ஒன்றாக இப்போது ஆகியிருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

மக்களால்  தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி, ஊடகவியலாளர் போன்றோர்களை கொலைசெய்யும் இந்த அரசிடம் எதை எதிர்பார்ப்பது??

கொழும்பிலுள்ள சிங்களப் பயங்கரவாத குற்றச் செயல்களை முன்னெடுக்கும் கும்பலால் சிறிதரன் மிரட்டப்பட்டார் என்று தலைப்புக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

ஏன்  இரனிலை ( யாழில் இராணுவம் ஆயுதக்குழுக்களை வைத்துள்ளது) அழைத்து விசாரணை செய்யக்கூடாது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.