Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன் கொலைக்குக் கண்டனம்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thamiltheesiyamakkal%20munnani.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய மகன் பாலச்சந்திரன் அவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்படங்கள் பாலச்சந்திரன் மோதல் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவில்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரன் போராளியல்ல அவர் ஒரு பொது மகன் என்பது உலகம் அறிந்த விடயம். 
 
கைதியாக உள்ள ஓரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இருக்கும் நிலையில், தாம் கைது செய்து வைத்திருந்த பொது மகனை அதுவும் 12வயது சிறுவனை கொலை செய்துள்ளனர். இது மிக மோசமான யுத்தக்குற்றமாகும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக சனல் 4 உட்பட பல சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்களும் இணையத்தளங்களும் பெருமளவு ஆதாரங்களை கடந்த காலத்தில் வெளியிட்டு இலங்கை அரசின் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தியிருந்தன. 
 
இந்நிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை ஆதாரங்கள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொடூரங்களை மேலும் நிரூபிக்கும் வலுவான சான்றாகவும் அமைந்துள்ளது. இப்படுகொலையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 
 
இவை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள். அது மட்டுமன்றி யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழினத்தை இல்லாது அழிக்கும் நோக்கில்  கட்டமைப்புசார்(structural) இன அழிப்பு பல்வேறு கோணங்களில் திட்டமிட்டு அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே பாலச்சந்திரனுடைய படுகொலை உட்பட நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல் அந்த இலக்கை அடைய முடியாது. இந்த இரண்டு விடயங்களையும் செயற்படுத்துவதற்கும் ஏற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் சிறீலங்கா அரசியல் அமைப்பிற்கு வெளியில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்படல் வேண்டும். 
 
அவ்வாறான நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக குறிப்பாக மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப் படுகெலை தொடர்பாக ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்குத் தேவையான சாட்சியங்களைத் திரட்டுவதற்குமுரிய பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும். அத்துடன் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற கட்டமைப்பு சார் இனஅழிப்பையும் தடுக்க முடியும்.  
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                            செல்வராசா கஜேந்திரன் 
தலைவர்                                                                            பொதுச் செயலாளர் 


 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.