Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Featured Replies

லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமும் அதிகரித்தது!
 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமானது தான் விநியோகம் செய்யும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரித்துள்ளது.
 
எனினும் டீசலின் விலையை அந்நிறுவனம் அதிகரிக்கவில்லையெனத் தெரியவருகின்றது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3166

  • தொடங்கியவர்

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு
 
90, 95 ஒக்டைன் பெற்றோல்களின் விலை 3 ரூபாவினாலும் சாதாரண டீசலின் விலை 6 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்யின் விலை 4 ரூபாவினாலும் இன்றுமுதல் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
 
அதிகரிக்கப்பட்டுள்ள விலையின் படி - 90 ஒக்டைன் பெற்றோலின் புதிய விலை ரூபா 162, 95 ஒக்டைன் பெற்றோலின் புதிய விலை ரூபா 170, டீசலின் புதிய விலை ரூபா 121, சுப்பர் டீசலின் புதிய விலை ரூபா 145 ஆகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59437-2013-02-23-02-16-02.html

  • தொடங்கியவர்

தனியார் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கும்?

 

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பஸ்கட்டணங்களும் அதிகரிக்கும் என்று அகில இலங்கை தனியார் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

 

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் இது தொடர்பில் கூட்டறிக்கையொன்று வெளியிடப்படும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59450-2013-02-23-07-56-13.html

  • தொடங்கியவர்

எரிபொருள் விலையானது  மிதக்கப்பட வேண்டும் என்றது சர்வதேச நாணய நிதியம். அதை இலங்கை மறுத்தது, கடனை சர்வதேச நாணய நிதியம் மறுத்தது.

 

கஜானாவில் பணம் இல்லாத நிலையில் விலையை மானியத்தால் வழங்க முடியாது. இப்பொழுது எரிபொருள் விலையை கூட்டியுள்ளது. வாழ்க்கை செலவும் கூடும்.

 

ஊழல் நிறைந்த அரசால் மக்களே அதிகம் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதுவே மக்கள் போராட்டத்திற்கும் உதவும்.

போராட்ட வெளிக்கிட்டால் முள்ளிவாய்க்காலில் நடந்தது போல   சிங்கள மக்களும் குடலை குடலைகளாகத்தான் தூக்கிகொண்டு போவார்கள். அம்னீசியாவல் அந்தரப்படும், விமலை கேட்டால் ஞாபகப்படுத்தி சொல்வார். 

 

எரிபொருள் விலையேறினால் வயித்தை இறுக்கிக் கட்டிகொண்டு போட்டுக்கட்டவேண்டியதுதான். விதைத்ததை அறுத்தாகத்தான் வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மானியமான எரிபொருள் கிடையாது - அரசாங்கம்

 

மானிய அடிப்படையில் தொடர்ந்தும் கனிய எரிபொருட்களை வழங்க முடியாது என்று கனியவளத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதுபற்றி அறிவித்துள்ளார்.

 

கனியவளக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை குறிப்பிட்ட அளவு சமநிலை செய்துகொள்வதற்கே இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

 

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வாடகை வாகனங்களினதும், முச்சக்கரவண்டிகளினதும் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

முதல் ஒரு கிலோமீற்றருக்கான 50 ரூபா கட்டணம் தற்போது 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு தொடக்கம் பெற்றோலின் விலையை இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனமும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் 3 ரூபாவினால் அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு;ள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்தார். டீசலின் விலை 6 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

இருந்தபோதும், பொதுமக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சேவைக்கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதி மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ஜே.எஸ்.ஜயருக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனிடையே, மீனவர் அமைப்புகளின் ஒன்றியம், தமக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை நிறுத்தி கடந்த 2012 ம் ஆண்டு பெப்ரவரி 12 ம் திகதிக்கு முன்னர் நிலவிய விலைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.

 

இந்தநிலையில், ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, மற்றும் முற்போக்கு சோசலிச கட்சி என்பன எரிபொருள் விலையேற்றம் குறித்து அரசாங்கத்தின் திறனற்ற தன்மையை சுட்டிக்காட்டி குற்றம்சுமத்தியுள்ளன.

 

http://www.hirunews.lk/tamil/53989

  • தொடங்கியவர்

Sri Lanka's state-run Ceylon Petroleum Corporation which lost 89 billion rupees in 2012 is hoping to reduce losses this year and break-even in two years, petroleum minister Anura Yapa said.

 

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=574363735

 

89 Billions SLR = 685 Millions USD

மான் நம்ம பொஸ் யாப்பா பாப்ப சிராணியை போட்டு ஒரு உருட்டு உருட்டுனதோடை நல்ல வளந்திட்டார் போல.

  • தொடங்கியவர்

அதேவேளை எரிபொருள் விலையேற்றம் சகல பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கும். ஏற்கனவே சம்பளம் அதிகரித்து தர கேட்கும் மக்கள் ....வீதிகளில் இறங்குவார்கள்

 

 இதனிடையே, மீனவர் அமைப்புகளின் ஒன்றியம், தமக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை நிறுத்தி கடந்த 2012 ம் ஆண்டு பெப்ரவரி 12 ம் திகதிக்கு முன்னர் நிலவிய விலைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.

 

 

மானியங்கள் நீக்கப்பட்டால் இவர்கள் வாழ்வு மிக மிக கடினமாக இருக்கும்.

  • தொடங்கியவர்

cartoon_24_02_2013.jpg

An upgrade to Sri Lanka's 50,000 barrels refinery a day involving doubling of is capacity and boosting light distillate yields could cost up to 1.5 billion US dollars, officials said.

 

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=1932445249

When crack margins (the gap between crude and refined products) narrow it is sometimes saves money for the country to shut the refinery and import refined products direct.

சீனா CP யயும் L I.O.C யை மூடிவிட்டு  தன்னிடம் வாங்கும் படி கேட்கிறார்களாக்கும். இந்திய இறக்குமதியான டிசல் தரக்கூறைவு என்று  திருப்பப்பட்டது. இப்போ தம்மால் தரமாக காய்ச்சிவடித்தல் செய்ய முடியவில்லை என்கிறார்கள். சீனாவிலிருந்து வரும் போது கமிசனுடன் வரும். பிறகேன் தாமதம். இறக்குமதி ஆரபிக்கமுதல், சீனாவிடமிருந்தான கொள்விலையிலும் சற்று கூடாவாக உள்நாட்டு விலையை  கொண்டு வந்துவிடவேண்டும். அப்போதுதான் அந்த பட்டாவும் கையில் வந்து சேரும். 

Edited by மல்லையூரான்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

cartoon2(361).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.