Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ முன்வருமாறு யோகேஸ்வரன் எம்.பி அழைப்பு.

Featured Replies

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ முன்வருமாறு யோகேஸ்வரன் எம்.பி அழைப்பு.
                  


[Thursday, 2013-02-28 19:14:32]

            
                         yogeswaran-help-seithy-2-20130228-150.jp
                                 


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கடந்த காலத்தில் ஏற்பட்ட
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில் கனடா நாட்டின் தொண்டர்
பாலா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவியை
கொண்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மேலதிகமான நிதியையும்
சேர்த்து வாகரைப் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு
குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழும்பும் முகமாக சுயதொழில்
நடவடிக்கைக்காக இரண்டு தையல் இயந்திரங்களை வழங்கி உள்ளது.

   

இவ்வகையில் வாகரை மத்தி கிராம அதிகாரி பிரிவைச் சேர்ந்த பாலசிங்கம்
பிரியதர்சினி மற்றும் ஊரியன்கட்டு கிராமத்தை சேர்ந்த அ.துஸ்யந்தி ஆகிய
இருவருக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் யுத்தத்தின் போது உடல் உறுப்புக்கள்
பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவ் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்
பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான
சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டு
வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலக சமூக சேவை பிரிவு
நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.


இவ்வேளை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிகமான
குடும்பங்கள் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தும்,
அங்கங்களை இழந்தும், குடும்ப உறுப்பினர்களை இழந்தும், வறுமையில்
வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் கஷ்ரப்பட்டுக் கொண்டிருப்பதால்
இம்மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நற்பணிகளுக்கு உதவ முன்வரும்
புலம்பெயர் எமது உறவுகள் கீழ்வரும் வகையில் தொடர்புகளை மேற்கொண்டு உதவ
முடியும் எனவும், இவற்றுக்கான புகைப்படம், பற்றுச்சீட்டு, நன்றி நவிலல்
உட்பட்ட ஆவணங்கள் விபரங்கள் தங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என மட்டக்களப்பு
மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.


தாங்கள் வழங்கும் இவ் உதவிகள் எமது இனத்துக்கு தாங்கள் புரியும் மாபெரும் பணியாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.


தொலைபேசி இலக்கம் : 0094652228273, 0094652228018, 0094776034559, 0094653656608

தொலைநகல் இலக்கம் : 0094652228273

மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com

வங்கி சார்பான தகவல் : மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின்
(Federation of young men's Hindu Association) என்ற பெயரில், மட்டக்களப்பு
கொமர்ஷல் வங்கி (commercial bank) கணக்கு இலக்கம் 1105040264. SWIFT CODE
:CCEYLKLX Bank code: 7056-105 இதில் பணங்களை அனுப்பிவைக்கலாம். அத்தோடு
உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தல்
அவசியமானதாகும்.

batti-280213-yogeswaran-001.jpg


 


batti-280213-yogeswaran-337-001.jpg

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=77038&category=TamilNews&language=tamil



எல்லோர் முகத்திலும் விரக்தி தென்பட்டாலும் சிறுமி யோகேஸ்வரனின் வரவை கொண்டாடுகிறாள். :)

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.