Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய ஐ.நா நிபுணர்குழு இலங்கை வருவது நிச்சயம்! - ரில்வின் சில்வா எச்சரிக்கை!

Featured Replies

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய ஐ.நாவின் சிறப்பு நிபுணர்குழு நிச்சயமாக இலங்கை வரவுள்ளது. அதை இந்த அரசால் தடுக்கமுடியாது. தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை.

 

வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த அரசால் ஒருபோதும் முடியாது. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் அமெரிக்காவிடம் நாட்டை மண்டியிட வைத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இம்முறை கூட்டத் தொடருக்கு அனுப்பியதில் எந்தப் பயனும் இல்லை.

 

இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கோ, இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவை அதற்காக இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் இல்லை.

 

இலங்கை அரசால் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பகடைக்காயாகக் கொண்டு, இவை தத்தமது நிகழ்ச்சி நிரல்களை இலங்கையில் செயற்படுத்த முயற்சிக்கின்றன. இதனூடாக நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட அவை எத்தனிக்கின்றன.

 

சர்வதேசத்தின் இந்த மாபெரும் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளாத அரசு, தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் நாட்டில் மனித உரிமை மீறல்களையும், ஜனநாயக விரோத செயல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

 

வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. சர்வதேச நாடுகளின் தலையீட்டுக்கு இதுவும் ஒரு காரணம். மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதனூடாக நாட்டு மக்களின் உரிமைகளை அது இல்லாதொழித்திருக்கிறது.

 

இலங்கையில் மனித உரிமைகளை அரசு மீறி வருவதாலும் நாட்டில் சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு வழிவகுப்பதாலும் முழுமையாகப் பாதிக்கப்படுவது நாட்டுமக்களே. இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆனால் இந்த அரசினூடாக நாட்டில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்கவும் ஒருபோதும் முடியாது.

 

ஐ.நா. நிபுணர் குழு வருவது நிச்சயம்

 

ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய ஐ.நாவின் சிறப்பு நிபுணர் குழுவொன்றை இங்கு அனுப்பத் தீர்மானிக்கப்படும். இதற்கமைய ஐ.நா.நிபுணர்குழு இலங்கை வருவது நிச்சயம். அதை இந்த அரசால் தடுக்க முடியாது.

 

கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவிடம் நாட்டை தோற்கடிக்கச் செய்தவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கதான். இந்நிலையில், இம்முறை கூட்டத் தொடருக்கு அவரை அனுப்பியதில் எந்தப் பயனுமில்லை என ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=e9c575df-7bf0-4a44-9ba7-e820e4c00d6e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.