Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை, போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி தமிழகம் பற்றி எரிகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajapakse.jpg

பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும், பொதுமக்களும், மாணவர்களும் இலங்கைக்கெதிராக தமிழகத்தில் போர்க்கோலம் பூண்டு நிற்கின்றனர் என்பதை இன்றும் கடந்த இரண்டு மூன்று நாட்கள் நிகழ்வுகளும் காட்டுகின்றன.

பா.ஜ.க. கண்டனம்:

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

’’தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமை தொடர்கதையாகவே நீண்டு  கொண்டிருக்கிறது. இலங்கை வாழ் தமிழர்களைத்தான், வாழவிடாமல் வஞ்சிக்கிறது என்ற நிலையில் தமிழக மீனவர்களையும் அடிக்கடி பிடித்து வைத்துக் கொள்வதும் அவர்களது உடமைகளை பறிப்பதுமான தன் அட்டூழியத்தை தொடர்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்துவிட்ட நிலையிலும்கூட, அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணத்தில் இத்தகைய வெறிச் செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்பாவி மீனவர்கள் மீதான வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நமது கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கக்கூட உரிமை இல்லையாவென தமிழக மீனவர்கள் குமுறி கொந்தளிக்கும் நிலை உருவாகியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மீனவ நண்பர்களும் பலமுறை கவலை, கண்டனம் தெரிவித்தபோதும் கூட மத்திய அரசு மௌனமாக வாளாவிருக்கிறது.

கோவை : சிங்களருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல்:

கோவை ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையில் உள்ள, சிங்களருக்கு சொந்தமான லங்கா பர்னிச்சர் கடையை ஈழ ஆதரவாளர்கள் கல் மற்றும் முட்டை வீசி தாக்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பழ.நெடுமாறன் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை: 

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட 5 கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்படன.

சிதம்பரம் : மாணவர்கள் ராஜபக்சே உருவ பொம்மை எரித்து ஆர்பாட்டம்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் கலை புல மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து, ஐ.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் இந்த வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம்:

சேலத்தில் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத் தினர்.  இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை உலகமே அறியும் - சு.சாமிக்கு பாரதிராஜா கண்டனம்:

இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளதற்கு திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் என்ன நடந்தது என்று அனைவரும் அறிந்த ஒன்று. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதால்தான், இலங்கை மீது அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. இந்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலைபாட்டை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆவலுடன் எதிர்பாத்துள்ளனர். இனப்படுகொலை நடந்தது என்பதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் உள்ளன என்றார். 

இலங்கை விசயத்தில் பிரதமர் என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை - ராஜ்நாத் சிங்:

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதுக்குரிய தலைமைப்பண்பு காங்கிரசுக்கு இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ராஜ்நாத்  சிங் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் தில்லியில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியபோது,  சமீபத்தில் ஹைதராபாதில் நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பயங்கர வாதத்தை தடுக்க என்.சி.டி.சி.யை (தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்) அமைக்க மத்திய அரசு ஆர்வம்  காட்டி வருகிறது.

என்.சி.டி.சி. நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதுகிறோம்.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை மத்திய அரசு மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தது தவறு இந்த விஷயத்தில் பிரதமர் என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. எனவே. பிரதமர் தன் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

முற்றுகைப் போருக்குத் தயாரா? - கருணாநிதி சொரணை வந்து அறிக்கை!

இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகம் உணரச் செய்வதற்காக, மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை டெசோ இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடுகின்ற அறப்போராட்டமும், அதே நாளில் இந்திய தலைநகர் டெல்-யில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. 

தான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல என்று இன்னமும் நிமிர்ந்து பேட்டி கொடுக்கும் ராஜபக்சேவுக்கு தமிழினம் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை மெய்பித்துக் காட்டுவதற்காக நடைபெறும் முற்றுகைப்போராட்டம் இது. 

இலங்கையிலே இன்னமும் நாதியற்றவர்களாக செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராகிவிட்டீர்களா?

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19323:2013-03-04-09-49-13&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.