Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவி அவசியம் - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவி அவசியம் - அரசாங்கம்
05 மார்ச் 2013
செனல் 4க்கு உதவும் இலங்கையர்கள் குறித்து தகவல் தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை
 
துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவிகள் அவசியமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக் கொடுக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
 
நாட்டுக்கு துரோகம் இழைக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கோரியுள்ளார்.தனிப்பட்ட நன்மைகளுக்காக சில நபர்கள் நாட்டுக்கு பாரியளவில் துரோகம் இழைப்பதாகவும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து சதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் வருடாந்தம் செனல்4 ஊடகம் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
செனல் 4க்கு உதவும் இலங்கையர்கள் குறித்து தகவல் தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை
 
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சிக்கு உதவி வரும் இலங்கையர்கள் இருப்பார்களாயின் அவர்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
சிலர், பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக பிறந்த நாட்டை மறந்து விட்டு, செனல் 4 தொலைக்காட்சிக்கு பல்வேறு வகையில் உதவி வருகின்றனர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப்படியானவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்தால், அதனை தாமதமின்றி அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாடு எப்படியான கனவுகளை கண்டு கொண்டிருந்தாலும் அந்த கனவு நனவாக போவதில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் சட்டப்படியான குற்றம் ஏதாவது இருக்கிறதா அல்லது இவர்கள் பொன்னரின், ரணிலின் ஆதரவாளர்களைக் களையெடுப்பதற்காக இப்படி ஒரு கதையா?

எதிர்க்கட்சிகள் என்று யாராவது கோமாளிகள் இலங்கையில் இருந்தால் "ஏன் அந்த புகைப்பட்டங்கள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது" என்பதை தட்டிக்கேட்க மாட்டர்களா?

Edited by மல்லையூரான்

இந்த பொது மக்கள்என்ற பெயரில் உலாவும் திருடர் கூட்டம், ஒரு காலத்தில் வேண்டாத தமிழரின் காணிகளை, கடைகளை கைப்பற்ற அவர்களை புலிகள் என அறிவித்தார்கள். இப்போது மகிந்தாவுக்காக நேர்மையாக போராடிய பல எதிர்க்கட்சியினரின் உடமைகளை கைப்பற்ற அதே திருட கூட்டபொது மக்கள் அவர்களை நாட்டு துரோகிகளாக காட்டிக்கொடுக்க போகிறார்கள். அவ்வளவுதான்.

Edited by மல்லையூரான்

மூத்த அமைச்சரையே மகிந்த கூட்டம் [ மகிந்தா, கொத்தா, பசில்]  ஒதுக்குகின்றது.

அப்படி இருக்கையில் இவர்களுக்கு யாரை பார்த்தாலும் ' துரோகியாகவே' தெரியும்.

 

அதுவே இவர்களுக்கு சமாதி கட்டவும் உதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
செனல்4 திரைப்படங்களை தயாரிக்க இலங்கையில் வசிக்கும் யாரும் உதவி செய்யவில்லை: கெல்லம் மேக்ரே
 By General 
2013-03-06 09:25:06
 
செனல்- 4 தொலைக்காட்சி தமது “மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களம்” திரைப்படத்தை தயாரிக்க இலங்கையில் வசிக்கும் யாரும் உதவி செய்யவில்லை என்று செனல் 4 தொலைக்காட்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.
 
இந்த காணொளிக்கு இலங்கையில் ஆதாரங்கள் வழங்கியவர்களை கைது செய்யப்போவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கெல்லம் மேக்ரே இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,.
 
இலங்கையில் வசிக்கும் எந்த பொது மகனும் செனல்- 4வுக்கு ஆதாரங்களை வழங்கவில்லை. அத்துடன் இந்த ஆதாரங்களை திரட்டுவதற்கு செனல்- 4 தொலைக்காட்சி யாருக்கும் நிதி வழங்கவும் இல்லை.
 
இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த காணொளியின் உண்மைத்தன்மையால் உலக நாடுகளின் கண்கள் தற்போது இலங்கையின் மீது கவனம் செலுத்தியுள்ளன. பொதுநலவாய நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்கிறது என்றும் மெக்ரே தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த காணொளி தொடர்பில் கருத்துரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ' நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை" என்று தெரிவித்திருந்தமையையும் மெக்ரே மேற்கோள்காட்டியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.