Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் புதிதாக முகாம் அமைக்க அவசரமாக நிலம் கேட்கும் இராணுவத்தினர்: சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளையில் புதிதாக முகாம் அமைக்க அவசரமாக நிலம் கேட்கும் இராணுவத்தினர்: சிவசக்தி ஆனந்தன்

Sivasakthy-Ananthan.jpgமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்தியில் இராணுவ முகாம் ஒன்றை புதிதாக அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் காணியை உடனடியாக வழங்குமாறு இராணுவம் பொது மக்களை அச்சுறுத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இராணுவத்தின் இந்த முயற்சியைத் தடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதாநயகத்திடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளியவளை மத்தியில் சுமார் 70 தமிழ்க் குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்துவருகின்றன. இந்தக் குடியிருப்புக்கு மத்தியில் ஐந்து ஏக்கர் காணியை முதிய முகாம் அமைப்பதற்காக தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கொடுத்த நெருக்குதலையடுத்து இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தனிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள். நாளை புதன்கிழமைக்குள் தமக்குரிய காணி தரப்பட வேண்டும் என படையினர் அழுத்தம் கொடுத்ததையடுத்து, நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக சிவகச்தி ஆனந்தன் இன்று செவ்வாய்க்கிழமை அங்கு நேரில் சென்றிருந்தார்.

1972 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப் போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் விடுவிக்கப்பட்ட இவர்கள், வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே தங்கியிருந்தனர்.

தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில்தான் இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருப்பதாக நேரில் நிலைமைகளைப் பார்வையிட்ட சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட முடியாதவர்களாக உள்ளனர். அரசாங்கத்தினால் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது எனத் தெரிவித்துள்ள மக்கள் தமது நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போராடவும் தயாராகவிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முள்ளியவளை மத்திய பகுதியில் மக்களுடைய பிரச்சினைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்தைச் சந்தித்து இது தொடர்பில் தமது எதிர்ப்பையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டார். முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி மார்க்குடன் இது தொடர்பில் தான் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் வேதநாயகம் உறுதியளித்திருக்கின்றார். இராணுவத்தினர் தமக்கு முகாம் அமைக்க இடம் தேவை எனில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொன்னகர் பகுதிக்கும் சிவசக்தி ஆனந்தன் இன்று செவ்வாய்கிழமை நேரில் சென்றுள்ளார். பொன்னகரையும், அதனையடுத்துள்ள காடுகளையும் அழித்து பாரிய முஸ்லிம் முடியிருப்பு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் இந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது. அடிப்படை வசதிகளோ வாழ்வாதாரங்களுக்கான வாய்ப்புக்களோ இல்லாத நிலையில் வாழ்ந்துவரும் பொன்னகர் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து சிவசக்தி ஆனந்தனுக்கு விளக்கியுள்ளார்கள்.

http://tamilleader.com/?p=6869

  • கருத்துக்கள உறவுகள்
40 வருடமாக வசிக்கும் முள்ளியவளை மக்கள் வெளியேற ஒருவார அவகாசம் - முகாம் அமைப்பதற்காக காணி கேட்கும் படையினர் 
[saturday, 2013-03-09 21:57:45]
 
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவனை மத்திய பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை ஒரு வார காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கொடுத்துவந்த அழுத்தங்களையடுத்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் இம்மக்களை வெளியேறுமாறு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார்கள்.
 
முள்ளியவளை மத்திய பகுதியிலுள்ள தமிழ்க் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் அங்கு ஐந்து ஏக்கர் நலத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக இந்தப் பகுதியில் காலாதிகாலமாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை வெளியேறுமாறு அதிகாரிகளும் படையினரும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருவது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நேற்று மாலை இந்தக் கிராமத்துக்கு வந்த காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தல் பலகை ஒன்றை வைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் இதனால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
 
அரசுடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதிகளும் இந்தக் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்று மக்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். பி.பி.சி.க்கு இது தொடர்பான செய்திகளைக் கொடுத்தது யார் எனக் கேட்டே அவர்கள் எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. ஈ.பி.டி.பி.யின் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளர் கிருபன்�� சிந்துஜன்�� மற்றும் பூபதி ஆகியோரே இங்கு வந்து மக்களுடன் தகராறில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
அரசாங்கத்துடன் பிரச்சினைக்குப்போகவோ அரசாங்கத்தை எதிர்க்கவோ முற்பட வேண்டாம் எனவும் இவர்களை எச்சரித்த ஈ.பி.டி.பி.யினர் இது தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்குக் கொடுப்பதையிட்டும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்கள். இருந்தபோதிலும் ஈபி.டி.பி.யினரை எதிர்த்த மக்கள் தமக்கு உதவுவதற்காக ஈ.பி.டி.பி.யினரால் என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் கேள்வி எழுப்பினார்கள்.
 
இதனைத் தொடர்ந்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை மத்திய கிராமத்துக்கு நேரில் வந்து குறிப்பிட்ட கிராமவாசிகள் வசிப்பது காட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணி எனவும்�� அதனால் அவர்கள் அங்கிருந்து ஒரு வாரகாலத்துக்குள் வெளியேறிவிட வேண்டும் எனவும் எச்சரித்தனர். இது தொடர்பாக அறிவித்தல் பலகை ஒன்றும் அவர்களால் அங்கு நாட்டப்பட்டுள்ளது.
 
1972 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப் போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் விடுவிக்கப்பட்ட இவர்கள்�� வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே தங்கியிருந்தனர்.
 
தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில்தான் இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.
 
இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட முடியாதவர்களாக உள்ளனர். அரசாங்கத்தினால் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி வழங்கப்படவில்லை.
 
இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது என கூறியிருக்கின்றார்கள்.
 
-வன்னிச் செய்தியாளர்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.