Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதைபோன்று இன்னும் எத்தனை குடும்பங்கள்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1357630516emelda.jpg

இதைபோன்று இன்னும் எத்தனை குடும்பங்கள்..? (படங்கள்)

யாழில் போரின் வடுக்களை தாங்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு சமூக சேவைகள் அமைச்சால் மாதாந்தம் ஊக்குவிப்பு உதவி தொகையாக 3 ஆயிரம் ரூபாயும் சுயதொழில் கடனும் வழங்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். 

இன்று (09) காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களை பார்வையிட்ட சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர், அவர்களுக்கு மூன்று மாத கொடுப்பனவாக 9 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை நிலையினை இலத்திரனியல் ஊடகம் ஒன்றின் ஊடாக எமது அமைச்சர் பார்வையிட்டு அந்த குடும்பத்துக்கு உடனடியாக உதவிகளை செய்ய முன்வந்தார். 

அக் குடும்பத்தினருக்கு உடனடியாக உதவித் தொகையாக மாதாந்தம் 3 ஆயிரம் ரூபாயினை பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வாழ் நாள் முழுவதும் வழங்கும் படியும் அவர்களுக்கு வீடு ஒன்றினையும் அமைத்து கொடுக்கவும் பணித்திருந்தார். 

ஆனால் இக் குடும்பத்தினருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதனால் நாம் இவர்களுக்கு கிணறு மற்றும் மலசல கூடம் என்பனவற்றை கட்டிக் கொடுக்கவுள்ளோம். இன்று அமைச்சர் இக் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாக இருந்தார் ஆனால் அவருக்கு இன்று காலை தீடிரென சுகவீனம் ஏற்பட்டதனால் அவர் நேரில் வரவில்லை. 

அதேநேரம் அவயங்களை இழந்த இக் குடும்ப உறுப்பினர்களுக்கு செயற்கை அவயங்களை பொருத்தவும் முயற்சி எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட J / 89 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள உதயபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனியாண்டி ராமையா குடும்பமே போரின் வடுக்களை சுமந்து வறுமையில் வாழ்கின்றனர். 

1996 ம் ஆண்டு நாச்சிகுடா பிரத்தேசத்துக்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்த வேளை 1996 ம் ஆண்டு பங்குனி மாதம் 16ம் திகதி காலை குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்த வேளை இராணுவத்தினர் ஹெலியில் இருந்து சுட்டதிலேயே (பைட்டர் அடித்ததில்) இக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 

இச் சம்பவத்தில் பழனியாண்டி ராமையாவின் மருமகன்கள் இருவரும் (மகளின் கணவன்மார்) உயிரிழந்ததுடன் அவர், அவரது மனைவி, இரு மகள்மாறும் படுகாயமடைந்திருந்தனர். 

இதில் அவரது மனைவியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. ஒரு மகளின் ஒரு கண்ணும் கையும் அகற்றப்பட்டுள்ளது. மற்றைய மகளின் கை ஒன்றும் அகற்றப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இவர்களின் மூத்த மகன் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளார். 

பின்னர் இவர்கள் 1997 ஆம் ஆண்டு யாழில் மீள குடியமர்ந்து தற்காலிகமாக பல இடங்களில் வசித்து 2011 ஆம் ஆண்டு தமது சொந்த இடமான உதயபுரம் கிராமத்தில் குடியமர்ந்தார்கள். 

இவர்கள் வீட்டில் இருந்து உணவகங்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே தமது வாழ்கையை நகர்த்தி கொண்டு இருந்தார்கள். 

இவர்களின் இந் வறுமை நிலையையும் இவர்கள் போரினால் இவ்வாறு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் இலத்திரனியல் ஊடகம் ஒன்று வெளிகொண்டு வந்ததன் மூலம் இன்று சமூக சேவைகள் அமைச்சின் ஊடாக உதவிகள் கிடைக்க பெற்றுள்ளன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.