Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்

Featured Replies

ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர் lg-share-en.gif face.jpg By V.Priyatharshan 

2013-03-12 23:23:35  

ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை. பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் ஹலாலுக்கு எதிராக செயற்பட்டுவரும். பௌத்தர்களும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.

ஹலாலை நிறுத்துவதாக ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தது. ஆனால் அது பொய்யாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவின தலைமையகமான சம்புத்தத்வ ஜெயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியால் நியமித்த அமைச்சரவை உப குழு தனது முடிவினை அறிவிக்க முன்னர் ஜம்இய்யதுல் உலமா சபை ஏன் இந்த முடிவுக்கு வரவேண்டும்? இன்று நாட்டில் பௌத்த மதத்துக்கு எதிராக சிலர் செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட போன்றவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பணத்தை பெற்றுக்கொண்டு பௌத்த மதத்துக்கு எதராக முன்னின்று செயற்படுகிறார்கள். அதில் ஒரு சில தேரர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள்.

ஜம்இய்யதுல் உலமாவின் நேற்றைய முடிவின் படி உள்நாட்டில் ஹலால் இல்லை. எனினும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியாயின் உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை மாத்திரம் இருக்காது. ஏனைய சகல ஹலால் நடைமுறைகளும் உள்ளடக்கப்படும். ஹலால் சான்றிதழ் என்பது ஹலால் விடயத்தில் உள்ள இறுதிப்படிமுறையாகும்.

நாம் வேண்டிக்கொள்வது ஹலால் சான்றிதழை மட்டும் விலக்கிக் கொள்வதையல்ல. சகல ஹலால் படிமுறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் சூட்சுமமான முறையில் ஹலால் சான்றிதழை மாத்திரம் விலக்கிக்கொண்டு பௌத்தர்களுக்கு ஹலால் உணவுகளை உட்கொள்ள சதி செய்கிறார்கள்.

இந்தநாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் ஹலால் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதுபற்றி தெளிவுபடுத்தியது பொதுபல சேனா அமைப்புதான். ஆனால் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் உலமா சபை சில பிக்குகளை அழைத்துச்சென்று முன்னிலைபடுத்தி தமது முடிவுகளை வெளியிட்டது.

இதேவேளை, அந்த பிக்குகள் சொல்கிறார்கள் 'எடுத்திருக்கும் முடிவு நாட்டுக்கு கிடைத்த வெற்றியென்று'. ஹலாலுக்கு எதிராக அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த தேரர்களை கொண்டு முன்னிலைப்படுத்துவதற்கு உலமா சபைக்கு எவ்வாறு அதிகாரம் வந்தது. உலமா சபை மேலும் ஆடினால் அதனுடைய கொட்டத்தை எவ்வாறு அடக்குவது என்பது பற்றி எமக்கு நன்கு தெரியும் என்றார்.

(படம்:ஜே.சுஜீவகுமார்)

halaal10.jpg

halaal09.jpg

halaal08.jpg

halaal07.jpg

halaal06.jpg

halaal04.jpg

halaal03.jpg

halaal02.jpg

halaal01%5D.jpg

http://www.virakesari.lk/article/local.php?vid=3448

  • தொடங்கியவர்

ஹலால் இலச்சினை மீதான தடை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! - மனோ கணேசன் குற்றச்சாட்டு!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் இலச்சினை வழங்க இணங்கும் அரசாங்கம், உள்நாட்டில் ஹலால் இலச்சினையை தடை செய்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு ஹலாலை வழங்கிவிட்டு உள்நாட்டு முஸ்லிம் சகோதர சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இதுதான் நடந்துள்ள உண்மை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளே விற்பனை செய்யப்படும் பொருட்களில் ஹலால் இலச்சினை இருக்காது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் இலவசமாக ஹலால் சான்றிதழ் வழங்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இணங்கியுள்ளது.

இதன்மூலம் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. முஸ்லிம் மக்களின் மத ரீதியான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைவர்கள் இந்த உடன்பாட்டுக்கு உடன்படுவார்களானால், இந்த முடிவு நடைமுறையாகட்டும்.

இதுபற்றி முஸ்லிம் சமூகம்தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இதையடுத்து வெகு விரைவில் முஸ்லிம் பெண்கள் உடை அணியும் ஹபாயா தொடர்பிலும் புதிய பேரினவாத எதிர்ப்பு கோஷங்களை இந்நாடு எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை நான் இந்த வேளையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஹலால் இலச்சினையை இலங்கையில் ஏற்றுகொள்ள முடியாவிட்டால் ஹலால் இலச்சினை கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் தமது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி பொதுபல சேனைக்கு அரசாங்கம் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

அதை செய்யாமல் இந்த மத அனுஷ்டான உணவு முறைமை இன்று முழுமையாக உள்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் பொருட்களுக்கு வர்த்தக நோக்கில் இந்த இலட்சினை பொறிக்கப்படுகிறது.

அதையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை கொண்டே அரசாங்கம் மேற்கொள்ள போகிறது. இது அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கும் சிங்கள - பௌத்த தீவிரவாத சக்திகளின் சாணக்கிய நிலைப்பாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி. இந்த நாட்டில் அநீதிகளுக்கு தலை வணங்கி உடன்படுவதா அல்லது அநீதிகளை எதிர்த்து ஜனநாயக ரீதியாக போராடுவதா, இல்லையா என முஸ்லிம் சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்நாட்டு தமிழர்களின் மத்தியில் அநீதிக்கு இணங்கி தலைவணங்கி உடன்படும் ஒரு சிறு பிரிவினர் இருக்கும் அதேவேளையில், அநீதிக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக போராடும் வல்லமை கொண்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்' என இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3/12/2013 2:51:57 AM

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=2eadabbb-b415-4c31-8f2b-5a41c33308fa

முஸ்லீம்கள் தனி அலகு கேட்டுத்துதான் பிக்குகளிடம் நெருப்பை மூட்டினார்கள். அரசில் இருந்துகொண்டு  முஸ்லீம்களின் தனி அலகு கேட்கும் இந்த கொள்கை மீது சந்தேகப்படுகிறார்கள். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.