Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் மஹிந்த சமரசிங்க! - பதிலுரை மட்டுமே நிகழ்த்துவார்!!

Featured Replies

 

ஜெனிவாவில் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் மஹிந்த சமரசிங்க! - பதிலுரை மட்டுமே நிகழ்த்துவார்!!
                                             7dfbc906-72df-4e9a-8794-24172d8286b21.jp

                                        

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஜெனிவா விரைந்துள்ள மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அங்கு இராஜதந்திர மட்டத்திலான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் எனத் தெரியவருகின்றது.

எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இம்முறை அவர் பதிலுரையை மாத்திரமே நிகழ்த்துவார் என்றும் அறியமுடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவென ஜெனிவா சென்றிருந்த இலங்கை இராஜதந்திரக் குழுவை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த அழைப்பை சாதகமாகப் பரிசீலிக்கத் தவறிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்த விடயத்தை அரசு மேல்மட்டத்திற்கு அறிவிக்காமல் சந்திப்பில் கலந்துகொள்ளாதிருக்க முடிவெடுத்தார். இதனால் இலங்கைப் பிரதிநிதிகள் எவரும் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க¬வின் இந்த தன்னிச்சையான முடிவால் இலங்கை அரச உயர்மட்டம் அதிருப்தியடைந்து, நாடு திரும்பிய அமைச்சர் சமரசிங்கவிடம் இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே ஜெனிவா விவகாரங்களைக் கையாள்வதற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளை இலங்கை அரசு மீளப்பெற்றுள்ளது என்றும், அவை ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் அனைத்துலக இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளுக்கு ரவிநாத் ஆரியசிங்கவே தலைமை வகிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இந்த விடயத்தை இலங்கை அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேவேளை, ஜெனிவாவிலிருந்து நாடு திரும்பிய அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மீண்டும் ஜெனிவா அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை அரச உயர்மட்டம் பரிசீலித்துவந்த நிலையில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஜெனிவாவுக்கு விரைந்தார்.

கடந்த தடவை இலங்கையின் சார்பில் அறிக்கை சமர்ப்பித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையை நிகழ்த்தியிருந்தார். எனவே, அதற்கு இம்முறை பதிலளிக்கவேண்டிய கடப்பாடு அவருக்குண்டு. இதன் பிரகாரமே அவரை இலங்கை அரச உயர்மட்டம் மீண்டும் ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது எனத் தெரியவருகின்றது.

அவர் ஜெனிவா விரைந்தாலும் பதில் உரையை மாத்திரமே நிகழ்த்துவார். இதர இராஜதந்திர செயற்பாடுகளில் அவர் பங்கேற்கமாட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15ஆம் திகதி) இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் உரையாற்றுவார். இதற்காக அவருக்கு 20 நிமிடங்கள் வழங்கப்படும் என ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பூகோளக் காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பெறப்பட்ட அறிக்கையை நவநீதம்பிள்ளை இந்த வாரத்துக்குள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3/12/2013 4:41:45 PM

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7dfbc906-72df-4e9a-8794-24172d8286b2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.