Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

23 வருடங்களாக முகாம்களில் வாழும் வலிகாமம் மக்கள் ‍- காணொளி இணைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

602015_482318605150621_344861045_n.jpg

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் விடயங்கள் தொடர்பாக  வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவரும் வலிகாமம் வடக்கு பிரதேச

சபையின் உதவித் தவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவனை தொடர்புகொண்டு வினவிய போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் வருமாறு…..

தற்போதைய நிலையில் வலிகாமம் வடக்கில் உள்ள மீள்குடியேற்ற நிலைமைகள் எவ்வாறு உள்ளன? அரசாங்கம் கூறுவது போன்று மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டார்களா? வீடுகள் இடித்து அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றனவே….இவை பற்றி?

]

அரசாங்கம் கூறுவது போன்று வலி வடக்கில் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள் எனக் கூறப்படும்; மீள்குடியேற்றப்பட வேண்டிய பிரதேசங்களில் மூன்றிலொரு பகுதியான இடங்களிலேயே மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளன. மேலும் இருபத்து மூன்று வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இடம்பெறவேண்டியுள்ளது. இது இவ்வாறிருக்க உயர்பாதுகாப்பு வலய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுகின்றன. இவ்வாறான இடித்தழிப்புக்கள் விமான நிலைய விஸ்தரிப்புக்கு என அரசாங்கத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அரசாங்கம்இ சட்டத்தினையும் ஒழுங்கினையும் மதித்து எந்த நடவடிக்கையிலும் இறங்கவேண்டும். இதைவிடுத்து “தமிழ் மக்களின் நிலங்கள் தானே” என்ற போரில் வென்ற மமதையுடன் சுவிகரிப்புக்களை மேற்கொண்டால் நாட்டில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.

இன்னமும் இப்பகுதியில் ஏழாயிரத்து இருநூற்றி மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தாறாயிரத்து இருநூறுக்கு மேற்பட்ட எண்ணிகை;கையான மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவேண்டிய அவலநிலை காணப்படுகின்றது. இவ்வாறாகக் குடியேற வேண்டிய இந்த மக்கள் தமக்கான மீள்குடியேற்ற அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். எனினும் தற்போதைய நிலைமைகளை அவதானிக்கையில் ஏமாற்றகரமான நிலைமைகளே நிலவுகின்றன.

வலிகாமம் வடக்கில் யுத்தத்தின் பின்னரான மூன்றாண்டுகள் கடந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. தற்போது  இவ் வேலிக்குள் உள்ள பிரதேசங்களில் வீடுகள் அழிக்கப்படுகின்றன. இது மக்களின் மீள்குடியேற்றத்தினை எவ்வாறாகப் பாதிக்கும் என கருதுகின்றீர்கள்?

வலிகாமம் வடக்கில் உள்ள ஒட்டகப்புலத்தில் இருந்து வயாவிளான் ஊடாக தெல்லிப்பளைச் சந்தி வரையான பகுதிகள் வரையில் பாதுகாப்பு வேலியினை படையினர் அமைத்துள்ளார்கள். இவ் வேலிக்கு உட்பட்ட பகுதிகளில் இருபத்தி மூன்று கிராம சேவகர் பிரிவுகள் காவுகொள்ளப்பட்டன. இவ்வாறு கிராமங்கள் காவு கொள்ளப்படுவதனால் ஏழாயிரத்து இருநூற்றி மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தாறாயிரத்து இருநூற்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதே வேளை படைத்தரப்பினரால் மக்கள் வெளியேற்றப்பட்ட இப்பகுதிகளில் தொழில்துறைகளை ஆரம்பிப்பதும் மக்களின் வீடுகளை அழிப்பதும் மக்கள் மனங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. மீள்குடியேற்றத்திற்கான நம்பிக்கையினை சகலவகையிலும் இவ்விடயங்கள் பாதித்துள்ளன.

உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள் காரணமாகவும் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலையில் தமது பிரதேசங்களுக்குத் திரும்ப முடியாது இடம்பெயர்ந்தோர் முகாம்களிலேயே இருபத்து மூன்று வருடங்களுக்கு மேலாக வாழ்க்கையை நடத்துகின்றனர். இந் நிலையில் மக்களுக்கு அரசாங்கம் என்ன உதவிகளை வழங்கியது? அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எவ்வாறுள்ளன?

முதலில் உலருணவு நிவாரணத்தினை வழங்கினார்கள். தற்போது இரண்டு வருடங்களாக அவ்வாறு வழங்கப்பட்ட நிவாரணங்கள் கூட மக்களுக்குக் கிடைப்பதில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளைச் செய்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வடக்கில் பணியாற்றவதற்குள்ள வரையரைகள் மட்டுப்பாடுகளுக்குள்ளாக தங்களால் இயன்றதைச் செய்கின்றனர். மக்களின் கஷ்ட நிலை என்பது அதிகமாகவுள்ளது.

இருபத்து மூன்று வருடகாலப்பகுதிக்கு மேலாக மக்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசதிவாய்ப்புக்கள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகையில் அதன் சமூகத் தாக்கம் எவ்வாறுள்ளது. மிக மோசமான விளைவுகளை எவ்வாறு இவ்வாறான நீடித்தகால இடைத்தங்கல் முகாம் வாழ்வு ஏற்படுத்துகின்றது?

இவ்வாறாக தசாப்தக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழவேண்டிய சூழ்நிலையின் அவலங்களை நாம் கண்டுகொண்டு தான் இருக்கின்றோம். சில வீடுகளில் ஆறு அல்லது ஏழு குடும்பங்கள் கூட தங்கியிருக்க வேண்டிய கஷ்ட நிலைமை உள்ளது. இது நீடிக்கப்பட்டுள்ளதனால் ஏற்படத்தக்க சமூகத்தக்கங்கள் பாரியளவில் வெளிப்பட்டுள்ளன. மேலும் முகாம்களில் மக்கள் பலவருடங்களாக வாழ்கையில் அவர்களது தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படாததொன்றாகவே உள்ளன. இதனால் முகாம் வாழ்க்கையின் ஆரோக்கியமற்ற தன்மைகளின் பாதிப்புக்களை நாம் அவதானிக்க முடிகின்றது

கலாச்சாரரீதியான பிறழ்வுகளை முகாம் வாழ்க்கை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியைத் தொடர சந்தர்ப்பங்களும் வசதிவாய்ப்புக்களும் அற்ற சூழ்நிலையே முகாம்வாழ்க்கையில் உள்ளன.

சாதாரணமாக மக்கள் இங்கு மனிதர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாகவே உள்ளனர். இவ்வாறான முகாம் வாழ்க்கையில் இருந்து மக்கள் திரும்பினாலும் இம் முகாம் வாழ்க்கை ஊடாக மக்களுக்கு ஏற்பட்ட அவல வாழ்வின் தாக்கங்கள் பின்தொடரவே போகின்றன என்பதைக் கவலையுடன் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது.

இந்த இடத்தில் முகாம் மக்கள் சில சமயங்களில் ஏனையவர்களால் ஒதுக்கங்களுக்கு உள்ளாகும் துரதிஸ்டவசமான நிலைமைகளும் சமூகத்தினிடையே உள்ளது. முகாம்களில் இருக்கக் கூடிய எமது மக்களைஇ அவர்கள் தொடர்ச்சியாக யுத்தத்தினால் எதிர்கொண்ட பாதிப்புக்களால்  இருந்து மீட்டுச் செல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பும் எமக்கு உள்ளது.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளக் கூறி பல ஜனநாயகவழி போராட்டங்கள் நடைபெற்றுள்ளனவே. நீதிமன்றத்தில் இது பற்றிய வழக்கு ஒன்றும் உள்ளது. இந் நிலையில் இவற்றிற்கான அரசாங்கத்தின் செவிசாய்ப்பு தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

போராட்டங்கள் தொடர்பில் காத்திரமான பார்வையைச் செலுத்துவதற்கு மாறாக அரசாங்கம் அவற்றை அடக்கிவிட வேண்டும் என்றே விரும்புகின்றது. இதற்கான தக்க சான்றாக முன்னர்; ஒழுங்கு செய்திருந்த போராட்டங்கள் மீது கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை நாம் கேடிட்டுக்காட்ட முடியும்.நீதித் தீர்ப்புக்களையும் அரசாங்கம் சரியாக உள்வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.

அவற்றில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் என்பதிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக உள்ளது. இதனாலேயே அவலம் தொடர்ந்து நீடிக்கின்றது.

நாம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அவசியம் பற்றியும் தேவை பற்றியும் அதிகாரிகளுடன்; பேசுகையில் அவர்கள் தமது முடிவுக்கு எட்டிய விடயமான இப்பிரச்சினை அமையவில்லை என்கின்றனர். புதிது புதிதாக அரச அதிபர்கள் நியமனம் பெறும் போதெல்லாம் நாம் எமது மக்களின் அவலங்கள் பற்றிப்பேசுகின்றோம். தெரியப்படுத்துகின்றோம். அவ்வாறாக அரச அதிபர்களாக நியமனம் பெறுவோரை சந்தித்து சந்தித்து நாம் பேசும் போதெல்லாம் தாம் இது பற்றி உயர் மட்டத்தில் பேசுவதாகக் கூறுகின்றார்கள். ஆனால் இவை எதுவும் மக்களுக்கான சுபீட்சத்தினை வழங்கியதாக இல்லை.

கடந்த ஒருதடவை நாம் மீள் குடியேற்ற அமைச்சரைச் சந்தித்து வலி வடக்கில் உள்ள எமது மக்களின் நிலைபற்றி பேசியிருந்தோம். அவரும் தன்னால் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதெனவும் சில மேற்பட்ட சக்திகளுடன் இது பற்றி பேசவேண்டியிருப்பதாகவும் கூறினார். இவ்வாறாக தங்களால் இயன்றதைச் செய்கின்றோம் எனத் தான் பதில் தருகின்றனர்.

வலி வடக்குப் பிரதேசசபை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுக்காக என்ன சேவைகளை ஆற்றுகின்றது?

பிரதேச சபையூடாக நாம் கழிவு ஆகற்றல் மற்றும் குடிதண்ணீர் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை இடம் பெயர்ந்தோர் முகாம்களில் ஆற்றிவகின்றோம். சுண்ணாகத்தில் இருக்கின்ற இடம்பெயர்ந்தோர் முகாம் வலி வடக்குப் பிரதேச சபைக்கு உள்ளாகக் காணப்படாத போதும் எமது மக்களின் நலன் கருதியும் வலி வடக்கின் மக்களின் நிலை அறிந்தும் எமது பிரதேச சபை தனது சேவைகளை செய்தே வருகின்றது.

மக்கள் இருபது வருடங்களுக்கு மேலாக தங்கள் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதற்காக அரசாங்க நிர்வாகத்தினுடாக பாதுகாப்புத்தரப்பினரின் பாவனையில் உள்ள வீடுகளுக்கு எதாவது வாடகை மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றனவா?

இல்லை. எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்படியேதும் வழங்கப்படவில்லை.

இவ்வாறாக உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடற்தொழிலில் ஈடுபட்டவர்கள் கடற்றொழிலில் ஈடுபட கடல் இல்லை. விவசாய முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் விவசாயம் மேற்கொள்ள தொழில் இல்லை என்ற நிலையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடவேண்டியவர்கள் எவ்வாறு என்ன செய்வது?

இங்கு வருமானத்திற்கான தொழில் இன்றி மக்கள் பெரிதும் திண்டாடுகின்றனர். மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளத்தக்க வழிமுறைகள் என சகலதையும் இழந்து விட்டனர். இந் நிலையில் இப்புகுதியில் இளையவர்கள் ஆவது சூழ்நிலைகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளை பெறவேண்டியுள்ளது. எனவே தொழில் பயிற்சி நிலையங்களின் தேவை இடம் பெயர்ந்தோர் முகாமில் அவசியத் தேவையாகவுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.