Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால்; கிழக்கு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளது பங்களிப்புடன் கற்றல் உபகரணம் வழங்கிய கூட்டமைப்பினர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-Mullivaikkal-150313-seithy-150.jpg

யுத்தத்தால் சேதமடைந்து தற்போது கல்விச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 14.03.2013 அன்று இடம் பெற்றது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் உதவியில் இப்பாடசாலைக்கு புத்தகப்பை அப்பியாசப் புத்தகங்கள் வரை கருவிகள் உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் வினோரோகநாதலிங்கம; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் திரு. பவான் எழுத்தாளர் சண் மாஸ்ரர் சேருவாவில பிரதேசசபை உறுப்பினர் திரு. சிவலோகேஸ்வரன் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. ருவிகரன் ஆகியோ கலந்து சிறப்பித்தனர்.

  

 

இந்நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. கு.சிவசுப்பிரமணியம் தெரிவிக்கையில்:

இப்பாடசாலை 150 க்கு மேற்பட்ட மாணவர்களுடனும் இரண்டு வகுப்பறைகள் அலுவலகம் உட்பட கட்டடத்தொகுதியுடனும் இயங்கி வந்தது. அகோர யுத்தத்தின் விளைவாக கட்டடங்கள் முற்றாகச் சேதமடைந்தன. தற்போது ஐம்பத்தியிரண்டு மாணவர்களுடன் தற்காலிக கொட்டகையில் 01.10.2012 முதல் கல்வி நடவடிக்கையைத் தொடரும் எமக்கு மலசலகூடங்கள் இல்லை. இயற்கை உபாதையை வெளியேற்ற காட்டிற்கே செல்லவேண்டியுள்ளது.

 

யுத்தத்தின் இறுதிச்சண்டை இடம்பெற்றிருந்த இடம் இது. பாடசாலைச் சுற்றாடலில் மனித எச்சங்களும் வெடிக்காத வெடி பொருட்களும் வெற்று மருந்துக் குப்பிகளும். அதிக பங்கர்களும் நிறைந்து காணப்படுகின்றன. எமது மைதானம் சிதைந்துள்ளது. கிணறும் முற்றாக தூர்;ந்து போயுள்ளதால் குடிநீர் பெற அரைக்கிலோமீற்றரிலுள்ள வீடொன்றிற்கே செல்லவேண்டியநிலையில் கற்பித்தலை மேற்கொள்கின்றோம்.

 

அவசரமாக புதிய கிணறும்�� பாடசாலைக்கட்டடம் அலுவலக அறை மலசலகூடங்கள் மற்றும் இரண்டு ஏக்கர் மைதானம் முதலானவை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் வேண்டியுள்ளது. அயலிலுள்ள மக்களை 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புதுக்குடியிருப்பிலுள்ள 'சிம்பிலி' என்கின்ற ஊரில் குடியேற்றியுள்ளனர். தற்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட 215 குடும்பங்களை இச்சுற்றாடலில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றன. அதனால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பாடசாலையை கட்டித்தரவும் பிறவசதிகளைப் பெறவும் வலயக் கல்விப் பணிமனையைக் கோரியுள்ளதாகவும் அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

 

இப்பாடசாலையின் தற்போதைய நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கையில் கடந்தகால யுத்தத்தால் வடமாகாணத்தில் இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்காதுள்ளன. ஆனால் வன்னி மாவட்டத்தில் வலிந்து குடியேற்றப்பட்டுள்ள சிங்களப் பகுதி உள்ளிட்ட சிங்களப் பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளின் நிர்மாண புனரமைப்பிற்கு 400 மில்லியன் ரூபாய்கள் மாகாணக் கல்லி அமைச்சு வழங்கியுள்ளது.

 

முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலையின் தேவை சொற்பளவே. இப்பாடசாலையில் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் கற்பதோடு காலை உணவிற்கே வழியில்லாமல் கற்க வருகின்றனர். வேறு இடங்களில் உள்ள வசதியான பாடசாலைகளின் அபிவிருத்திகள் அதிகரிக்கப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவில் இறுதிக்கட்டப் போரால் மோசமாகப் பாதிப்படைந்த தமிழ் பாடசாலைகளின் புனரமைப்பு பாராமுகமாகவே கிடப்பில் விடப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

-Mullivaikkal-150313-seithy-(1).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(2).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(3).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(4).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(5).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(6).jpg
-Mullivaikkal-150313-seithy-(7).jpg

 

 

-Mullivaikkal-150313-seithy-(8).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78175&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.