Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அடிபணியாத தேசம்

Featured Replies

இலங்கை அடிபணியாத தேசம் யாரும் எம்மை கட்டுப்படுத்த முடியாது; வன்னி கட்டளைத் தளபதி

 

இலங்கை அடிபணியாத தேசம் யாரும் எம்மை கட்டுப்படுத்த முடியாது. எமது பிரச்சனையை ஜெனீவாவால் தீர்க்க முடியாது நாட்டை பிரிக்கமுடியாது பிரிக்கவும் இடமளியோம் என வன்னி கட்டளைத் தளபதி பெனிகஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

வவுனியா இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. இறுதி மனிதபிமான நடவடிக்கை காரணமாக மூன்ற இலட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தனர்.

 

இதேவேளை யுத்தங்களின் காரணமாக நான்க இலட்சம் முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்ததடன் சிஙகள மக்களம் இடம்பெயர்ந்தனர். பாதிப்புக்கள் எல்லொருக்கும் ஏற்பட்டது எனவே இனியும் இழப்புக்கள் வேண்டாம் யுத்த எண்ணத்தை கைவிட்டு எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும்.

 

இலங்கை அடிபணியாத தேசம் யாரும் எம்மை கட்டுப்படுத்த முடியாது. எமது பிரச்சனையை ஜெனீவாவால் தீர்க்க முடியாது நாட்டை பிரிக்கமுடியாவு பிரிக்கவும் இடமளியோம்.

 

இந்தியா கூட நாடு பிரிக்கப்படுவதை அனுமதிக்காது. தமிழ் மக்கள் புத்தியுள்ளவர்கள். உலகில் உள்ள மக்களில் நன்றாக அறிவுள்ளவர்கள் அவர்களை முட்டாளாக்க முடியாது.


தமிழ் மக்களுக்கம் சிங்கள மக்களக்கும் காலாசார தொடர்பகள் நிறையவே உள்ளன. எனவே நேருக்கு நேர் சந்தித்து பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 

இதேவேளை ஓமந்தை சோதனை சாவடி ஏன் இன்னும் அகற்றப்படவில்லை என  ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, வடக்கில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு வருவதால் அதை தடுப்பதற்காகவும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்ற வெளிநர்ட்டு சக்திகள் இப்பாதையை பயன்படுத்துவதால் அதை கண்காணிக்கவுமே இன்னும் அகற்றப்படவில்லை.

 

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக கேட்கப்பட்டபோது. சில காணிகள் நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது உண்மை தான் ஆனால் அவர்களுக்கு பதிலாக வேறு காணிகள் வழங்கப்படும் இதில் பிழை இல்லை என அவர் தெரிவித்தார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=487801902716210032

Edited by akootha

  • தொடங்கியவர்

'காணாமல் போனவர்கள் இராணுவ முகாம்களில் இல்லை'

 

'காணாமல் போனவர்கள் எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என்பதனை இராணுவ உயரதிகாரி என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும்' என வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று வன்னிக் கட்டளைப் பீடமான ஜோசப் முகாமில் நேற்று இடம்பெற்றது.

 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 

'சுலோகங்களை ஏந்தியவாறு காணாமல் போனோர் தொடர்பில் போராடுவதாலும் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்துவதாலும் இதற்கு தீர்வு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

 

யுத்தத்தின்போது முல்லைத்தீவு முகாமில் சுமார் 1300 இராணுவத்தினர் காணாமல் போனார்கள். அவர்களது பெற்றோர்கள் கோவில்களுக்கும் பள்ளிகளுக்கும் விகாரைகளுக்கும் போய் தனது பிள்ளை வருவார் வருவார் என வழிபட்டு வருகின்றார்கள். ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் வராவிட்டால் இறந்து விட்டதாக கருதுகின்றார்கள்.

 

யுத்தம் இடம்பெறும்போது இராணுவத்தில் 6000 பேர் வரையில் இறந்தார்கள். அதுபோல் விடுதலைப் புலிகளிலும் தலைவர்கள் உட்பட பலர் இறந்திருக்கின்றார்கள். அவர்களை படம் பிடித்து காட்ட முடியவில்லை.

 

யுத்தத்தின்போது ஒரு இராணுவ சிப்பாய் இறந்துவிட்டால் அவருக்கு அருகில் இருக்கும் இராணுவ வீரருக்கு அவர் இறந்துவிட்டாரா உயிருடன் இருக்கின்றாரா என்பதை கூற முடியாது. அதேபோல் விடுதலைப் புலிகளிலும் ஒரு போராளி இறந்துவிட்டால் அவர் இறந்துவிட்டாரா இல்லையா என அதன் தலைவர்களுக்கே தெரியும்.

 

அந்த வகையிலேயே காணாமல் போனவர்கள் எந்த இராணுவ முகாமிலும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

 

அத்துடன் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது வடக்கில் 3 இலட்சம் மக்கள் வரையில் இடம்பெயர்ந்தார்கள். 'இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவில்லை.அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவில்லை' என் வெளிநாடுகள குற்றம் சுமத்தியிருந்தன. ஆனால் நாம் இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியமர்த்தி வருகிறோம்.

 

இந்த மீள்குடியேற்றம் தாமதமாகுவதற்கு காரணமாக இருப்பது கண்ணிவெடிகள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/60826-2013-03-16-06-44-50.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.