Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் - திரை விமர்சனம்


Recommended Posts

பதியப்பட்டது

சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் - திரை விமர்சனம்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்... இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது.... 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது.... பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்.... சுமார் ஆறரை அடி உயரம்... செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்....

படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்.... வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்.... சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்.... சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்.... அப்போதே ஆரம்பித்து விடுகிறது பூச்சுற்றல்....

இந்தப் படத்தில் மெலிதாக இழையோடும் காதல், பாசம் படத்துக்குப் பெரிய பலம்.... ஜூனியர் சூப்பர்மேன் அழகாக இருக்கிறான்.... சூப்பர்மேன் (முன்னாள்) காதலியும் சூப்பராகவே இருக்கிறார்...

கிரிப்டன் கிரகத்தில் பிறந்த சூப்பர் மேன் 4 வயதிலேயே தன் கிரகத்தை விட்டுப் பிரிந்து பூமியில் வாழவேண்டிய சூழ்நிலை.... பூமியில் இருக்கும் எந்த சக்தியாலும் சூப்பர்மேனை அழிக்க முடியாது.... கிரிப்டன் கிரகத்தின் கிரிஸ்டல் போன்ற ஒரு தாது கொண்டு மட்டுமே சூப்பர்மேனை அழிக்கமுடியும் என்று தெரிந்து கொண்ட வில்லன் அந்த தாதுவை கொண்டு மேலும் சில விசித்திர ஆய்வுகளைச் செய்து ஒரு புதிய கண்டத்தை உருவாக்க நினைக்கிறார்.... அந்தக் கண்டம் உருவானால் அமெரிக்கா முழுவதுமே அழிந்து விடும்....

அந்தக் கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும்போது சூப்பர்மேன் முட்டுக்கட்டையாக வருகிறார்.... இறுதியில் சூப்பர் மேனே அந்தக் கண்டத்தை தூக்கிக் கொண்டு போய் (அட்ரா.... அட்ரா....) விண்வெளியில் தூக்கிப் போட்டு விடுகிறார்.... அந்தக் கண்டம் கிரிப்டன் கிரகத்தின் தாது கொண்டு உருவாக்கப்பட்டதால் சூப்பர்மேன் உயிரிழக்கிறார்...

உயிரிழந்தாலும் முன்போலவே வந்து காதலியைச் சந்தித்துக் கொஞ்சுகிறார்.... மகனிடம் (ஆனா இவனுக்கு சூப்பர் மேன் இனிஷியல் இல்லே.... அதற்கு ஒரு இளிச்சவாயன் இருக்கிறார்) பாசம் காட்டுகிறார்.... சூப்பர்மேன் ஆச்சே... நம்பித்தான் தீரணும்.....

பின்னணி இசை மிரட்டுகிறது.... ஆனாலும் சூப்பர்மேனின் ட்ரேட் மார்க் இசை பழைய பாகங்களில் இருந்ததுபோல இல்லை.... ரொம்பவும் மைல்ட் ஆக இருக்கிறது..... படத்தின் டைட்டிலுக்கு போடப்படும் பின்னணி இசை நிஜமாகவே பயமுறுத்துகிறது.... படத்தில் மிஸ் செய்யக்கூடாத விஷயம் டைட்டில்.... மிகப் பிரம்மாண்டமான கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாத 3டி அனிமேஷன்....

பலகாட்சிகளில் எது கிராபிக்ஸ் சூப்பர்மேன்? எது ஒரிஜினல் சூப்பர்மேன் என்று கொஞ்சம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியம்.... வில்லனாக வரும் மொட்டை சூப்பராக நடித்திருக்கிறார்.... அவரது செட்டப்பும் கலக்கி இருக்கிறார்.....

படம் முடித்து வெளியே வரும்போது எங்குமே பூக்கடைகளைக் காண முடியவில்லை.... காரணம் படம் பார்த்தவர்களின் காதுகளில் தியேட்டர்காரர்களே சொருகி அனுப்புவது தான்.... :-)

சூப்பர்மேன் - அசத்துகிறார்....

(www.madippakkam.blogspot.com)

Posted

நன்றி லக்கி :P

எனக்கு மிகவும் பிடிச்ச காரக்டர் சுப்பர்மான் தான் :wink:

சின்ன வயதில சுப்பர்மான் லக்கிலூக் (நீங்க இல்லை காமிக்ஸ் லக்கி) அப்புறம் ஸ்பைடமான் இவையெல்லாம் ஏன் சிங்கள ஆமியோட சண்டை பிடிச்சு தமிழீழத்தை வாங்கி தரக்கூடாது என்ற அபத்தமான ஆசையெல்லாம் வரும் :oops: :P

Posted

சின்ன வயதில சுப்பர்மான் லக்கிலூக் (நீங்க இல்லை காமிக்ஸ் லக்கி) அப்புறம் ஸ்பைடமான் இவையெல்லாம் ஏன் சிங்கள ஆமியோட சண்டை பிடிச்சு தமிழீழத்தை வாங்கி தரக்கூடாது என்ற அபத்தமான ஆசையெல்லாம் வரும் :oops: :P

நீங்க ஆசைப்பட்டா இந்த லக்கிலுக்கே... ஜாலிஜம்பரில் வந்து சிங்கள ஆர்மிய நிழலைவிட வேகமா சுட்டுத்தள்ளட்டா? :lol:

Posted

எனக்கு பான்டம்....மாயாவி :lol:.... புத்தககடை சென்றால் முதலில் பார்ப்பது பான்டம் புத்தகங்கள் தான்.....

தாயகம் சென்ற நேரங்களில் தமிழிலும் (மாயாவி) சிலதை படித்திருக்கின்றேன்...

Posted

ஆர்ச்சி காமிக்ஸ் (அமெரிக்கால வெளியிடப்படுவது) வாசிக்கிறேல்லையா பபா செம கொமடிப்பா அது

Posted

ம்ம்ம் நாளைக்கே கடையில் போய்பார்க்கிறேன்...எந்த பப்ளிகேசன்??

Posted

பார்த்த போலவும் இருக்கு..பார்க்காத போலவும் இருக்கு..

இதே போல இங்கு வேறு ஒரு கதை இருக்கு...என்னிடம் புத்தகங்கள் இருக்கு...ஸ்கான் பண்ணி பார்க்கிறேன்

நன்றி நித்தி

Posted

நன்றி லக்கி.. தங்கள் ப்ளொக் நன்றாக இருக்கு...பதிவுகளுக்கு பாராட்டுக்கள்...

Posted

நன்றி இணைப்புக்கு லக்கி

எனக்கு தமிழ் காமிக்ஸ் பற்றி அவ்வளவு தெரியாது தகவலுக்கு நன்றி

நான் இந்தியால படிச்ச போது பாடசாலையில கூட தமிழ் பேச விடமாட்டாங்க மீறினா பைன் கட்டணும் அதால இந்தியால படிச்ச போது கூட தமிழில காமிக்ஸ் வாசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை

உங்கட பதிவுகள் நல்லாயிருக்கு கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லாட்டிலும் கூட எழுதும் முறையை பாராட்டலாம் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.