Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் இருப்பது இரண்டு நாட்களே ! இந்தியாவினைக் கோருவோம் அனைத்துலக விசாரணைக்கு!! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Transitional_150news.jpg

தமிழகமெங்கும் உணர்வெழுர்ச்சியுடன் ஓங்கி ஒலித்து வரும் குரல்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு, இந்திய மத்திய அரசு ஆவணசெய்ய வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், உலகத் தமிழர்களையும் இதில் இணைந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

 

எதிர்வரும் மார்ச் 21ம் நாள் வியாழக்கிழமை சிறிலங்கா தொடர்பிலான பிரேரணை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வரவுள்ள நிலையில், இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் விடுத்துள்ளது.

  

தமிழர்கள் மீது நடந்தேறிய இனப்படுகொலை - போர்குற்றங்கள் - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியான அனைத்துலக விசாரணையொன்றினை வலியுறுத்தியும் , இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு அனைத்துலக பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டியும் இந்தியாவினைக் கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நோக்கியதாக இந்த http://www.ipetitions.com/petition/international-investigation-of-sri-lanka-now/ இணையவழி இணைப்பின் ஊடே மின்னொப்பம் இட்டுக் கொள்ளக் கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்த eam@mea.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு கீழ் இணைக்கப்பட்டுள்ள கடித்தினை அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

 

His Excellency Manmohan Singh 

Prime Minister

Republic of India

South Block, Raisina Hill,

New Delhi, India-110 101.

 

Re: International Investigation of Sri Lanka Now.

 

Dear Prime Minister,

I am urgently writing to you about the current UN Human Rights Council Session in Geneva.

I respectfully urge India to take the leadership role and propose an amendment to a U.S. sponsored Resolution, to call for an Independent International Inquiry for Sri Lanka, at the current UN Human Rights Council session.

 

I also urge you to use India's important influence to create an International Protection Mechanism to safeguard Tamils in that Island. I am confident that as the head of an emerging international power and the only major power in South Asia, and with the well-being of a People of risk at heart, you will consider our request favorably.

Thank you.

Sincerely,

 

இதேவேளை வரும்நாட்களில் , புலம்பெயர் தேசங்களில் உள்ள இந்தியத் தூதுவராலயங்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மனுக்களை கையளிக்கவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.com/breifNews.php?newsID=78453&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.