Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூடங்குள போராட்ட செய்திகள்.

Featured Replies

நாளை (03.04.2013) நடக்கும் அணு உலை போராட்டத்தை ஒடுக்க இன்றே காவல்துறை அராஜகம்

 

Tuesday 2nd April 2013 , 21:51:01

 

நாளை கூட்டப்புளி அருகில் உள்ள அணுமின் நகரியை முற்றுகையிடுவதாக அணு உலை போராட்டக் குழு முன்னதாக அறிவித்தது . அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்றே தமிழக காவ துறை ஏராளமான பேர் கூட்டப் புளி கிராமத்தை முற்றுகையிட்டனர் . அத்தோடு நின்று விடாமல் , அத்துமீறி ஊருக்குள் நுழைந்த போது, ஊர்மக்கள் அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளனர் . இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை , மக்களை கலைக்கும் நோக்கில் முதலில் தடியடி நடத்தி உள்ளனர் . பின்பு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்  . இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் காலாவதியான குண்டுகள் என்பது தான் .

கூட்டப்புளியில் காவல்துறையினரால் வீசப்பட்ட காலாவதியான (பிப்ரவரி 2013), கண்ணீர் புகை குண்டு, வீசப்பட்டு வெடித்ததின் மிச்சங்கள் . மக்களின் மீது வீசப்பட்டதினால், மக்களில் சிலருக்கு உடல் பாதிப்பு, காவல்துறை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அமைதியாக இருந்த கிராமத்தில் , பள்ளி முடியும் நேரத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அத்து மீறி நுழைந்து, ஊரின் மையப் பகுதிக்கு சென்று , தடியடி நடத்தி,வன்முறையை தூண்டி மக்களிடையே அச்சத்தையும் , பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது . அறவழிப்போராட்டத்தை  நடத்தும் மக்களை இரவிலே கைது செய்து , இதை ஒரு வன்முறை நிகழ்வாக்க , காவல்துறை முயற்சி. கிராமத்தின் எல்லையில் ஐம்பது ஊர்திகளில் காவல்துறை குவிப்பு.
காவல்துறையின் அராஜகப் போக்கு கண்டிக்கத் தக்கது. எதிர்பாராத சம்பவங்கள் அனைத்திற்கும் காவல்துறையே பொறுப்பு! காவல்துறை அமைச்சராக இருக்கும் , தமிழக முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அணு உலை எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளனர்.
 

564728_174327586053497_328550745_n.jpg

 

485256_174327329386856_1063207586_n.jpg

 

181045_174327692720153_1623186585_n.jpg

 

67930_174327616053494_1564131105_n.jpg

 

733755_174327352720187_321299749_n.jpg

 

http://newsalai.com/details/TN-police-atrocity-starts-even-before-the-protest-in-koottappuli.html#.UVuKYDeG2Qt

Edited by துளசி

  • தொடங்கியவர்

மேலும் சில படங்கள்

 

521649_174327442720178_444908498_n.jpg

 

8356_174327509386838_1818629275_n.jpg

 

64236_174327489386840_2126711325_n.jpg

 

 

 

கூட்டப்புளியில் வீசப்பட்ட காலாவதியான கண்ணீர் குண்டுகள்.

 

45507_454720181272743_10659443_n.jpg

 

545935_454720234606071_1336605936_n.jpg

 

164614_454720314606063_1958220275_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு முற்றுகை

கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பை போராட்டக்காரர்கள் கடல் வழியாக முற்றுகையிட்டுப் போராட்டம்

நடத்தினர்.

செட்டிக்குளத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பை கடல் வழியாக படகில் சென்று, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே, அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தோடு தான் இன்று ஊழியர் குடியிருப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று இடிந்தகரையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்
தெரிவித்தார்.

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்

அணுமின் நகரிய முற்றுகை, ஏப்ரல் 3, 2013

500 க்கும் அதிகமான படகுகளில் கருப்பு கொடியை ஏந்தி தங்கள் எதிர்ப்பை கூறியபடி செட்டிகுளத்தில் உள்ள அணுமின் வளாக குடியிருப்பை கடல் வழியாக சென்று முற்றுகையிட்டனர்.
 

388651_454951014582993_238943140_n.jpg

 

480873_454951077916320_1633249536_n.jpg

 

523447_454951097916318_1276092713_n.jpg

 

480029_454951164582978_434878368_n.jpg

 

644204_454951217916306_397499127_n.jpg

 

524627_454951264582968_1855950846_n.jpg

 

551429_454951321249629_1474254856_n.jpg

 

8978_454951527916275_1957131482_n.jpg

 

537450_454951571249604_2080374963_n.jpg

 

536257_454951647916263_1983535890_n.jpg

 

150122_454951741249587_673859805_n.jpg

 

544607_454951877916240_474734807_n.jpg

 

532033_454952051249556_1745250776_n.jpg

 

579760_454952097916218_1857073505_n.jpg

 

66802_454951867916241_1650315537_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

அணு விஜய் நகரியம் முற்றுகைக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

 

65323_281001762034572_359441954_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

அடுத்த போராட்டம் குறித்து 7-ந்தேதி ஆலோசனை: உதயகுமார்.

கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணுவிஜய்நகரை முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. பின்னர் 12 மணிக்கு போராட்டம் முடிந்தது.

இதையடுத்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் வைத்து பேசியதாவது:-

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம். இன்றுடன் எங்களது போராட்டம் 597-வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அணுமின்நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறுகிறது.

டயர்கள் எரித்த நாற்றம் வீசுகிறது. இரவில் பயங்கர சத்தம் கேட்கிறது. இது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணுமின்நிலையம் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களை போலவே அங்கு குடியிருக்கும் மக்களை காப்பாற்றவும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

அணுமின்நிலைய கட்டுமானப்பணியில் ஆற்றுமணலுக்கு பதில் கடல் மணல் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் பலமுறை மறு சீரமைப்பு பணிகள் நடந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணுமின்நிலையம், வீடுகளுக்கு ஆபத்து உள்ளது.

அணுமின்நிலைய கட்டிட பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவை. டர்பனை அளவிடுவதற்காக வரவழைக்கப்பட்ட கருவி தரமற்றது. அணுஉலையின் மையப்பகுதியில் வெல்டிங் மற்றும் பல்வேறு பிரச்சினை உள்ளது என்பதை அங்குள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.

அணுமின்நிலையத்தை போலவே அங்குள்ள உயர் அதிகாரிகளும் தர மற்றவர்கள். அணுமின்நிலையத்தின் மையப்பகுதியில் மாற்றம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள். அவரவர் விருப்பம்போல் மாற்றம் செய்கிறார்கள். கூட்டப்புளியில் அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது தேவையற்றது.

நாங்கள் இந்த மண்ணில்தான் வசிப்போம். பாராளுமன்ற தேர்தலில் எந்த அணுகுமுறை கடைபிடிப்பது என்பது குறித்தும் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் வருகிற 7-ந்தேதி இடிந்தகரையில் ஆலோசனை நடத்தஉள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல தரப்பு மக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,சமூக இயக்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

அறவழியில் போராடும் மக்கள் அனைவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என திட்டமிட உள்ளோம். தமிழர்கள் சோரம் போனவர்கள் அல்ல. யார் வந்தாலும் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். இன்று நடந்த போராட்டம் யாரையும் அச்சுறுத்த அல்ல. எங்கள் எதிர்ப்பை காட்டவே போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது புஷ்பராயன், முகிலன், மைபாஜேசுராஜன், ஜெயகுமார், சுசிலன், மில்டன், கெபிஸ்டன் உள்பட மீனவர்கள் பலர் உடனிருந்தனர்.

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கூடாது என்றும், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான சூழ்நிலை அங்கே உருவாக முயற்சிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,:" "கூடங்குளம் அணுஉலையில் சோதனை ஓட்டம் வெற்றி" என்ற தலைப்பில் 2-4-2013 அன்று வெளி வந்துள்ள செய்தியில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனையோட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும், இச்சோதனையின்போது சுற்றுச்சூழலுக்கோ, பொது மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் ஏதும் வெளியேறவில்லை என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்துள்ள அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்து வரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பை 3-4-2013 புதன்கிழமையன்று கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்து, அதனை நடத்தியிருக்கிறார்கள். மேலும் அங்கே உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறுகிறது

கூடங்குளம் பிரச்னையில் 13-9-2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பெரும்பாலான பகுதிகள் இன்றைக்கும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அளவிற்கு இருக்கின்ற காரணத்தால், மீண்டும் அதை நான் நினைவுபடுத்துகின்றேன்.

"கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது அவர்களை அலட்சியப்படுத்த கருதுகிறது. அணு உலை பிரச்சினையில், முதலில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வதற்காக, அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். ஆரம்பத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களிடம், "அந்த ஆலையினால் ஆபத்து இல்லை, ஆபத்து வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும், ஆபத்துக்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்" என்றெல்லாம் போராட்டக் குழுவினரிடம் விளக்கியிருந்தால், இந்த அளவிற்கு நிலைமை முற்றியிருக்காது.

மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு,

மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார். இப்படி யெல்லாம் கூடங்குளம் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார். இப்படி முதலில் ஒன்றும் பிறகு ஒன்றும் எனக் கருத்தை மாற்றிச் சொல்வது "மெஜாரிட்டி" ஜெயலலிதா அரசுக்கு வாடிக்கையான ஒன்று

தானே?

இதைத் தான் "இந்து" நாளிதழுக்கு உதயகுமார் அளித்த பேட்டியில் "எந்த ஜெயலலிதா இந்தப் போராட்டத்தை முன்பு ஆதரித்தாரோ, அவரே இன்றைக்கு சத்தியாகிரக வழியில் போராடும்

போராளிகளை கை விட்டு விட்டார்"" என்று குற்றஞ்சாட்டினார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த திட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களும் நானும் ஜெயலலிதாவைச் சந்தித்து கூறிய போது, அவர் அதனை அமைதியாகக் கேட்டு ஆதரவு தெரிவித்தார். அதன் காரணமாக மக்களின் உணர்வைப் புரிந்த ஒருவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பிய நேரத்தில், ஜெயலலிதா உடனடியாக அவருடைய நிலையை மாற்றிக் கொண்டு, இந்த முக்கியமான நிகழ்வில் மக்களைத் தூக்கியெறிந்து விட்டார்" என்று

தெரிவித்தார்.

இதிலிருந்தே போராட்டம் எதனால் இந்த அளவிற்கு முற்றியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தற்போது நிலைமை போராட்டக்காரர்களைத் தாண்டி பொதுமக்கள் கைக்குச் சென்று விட்ட நிலையில், பிரச்சினையை அமைதியாகத் தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமே தவிர, அதிகாரம் இருக்கிறது என்ற நினைவோடு செயல்பட்டாலோ, கருத்து தெரிவித்தாலோ அது பிரச்னையைத் தீர்க்க உதவாது. எப்படியோ இது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதைப் போல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா பிறகு முதலமைச்சரைச் சந்திக்க வந்த போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச மறுத்தது தவறு. மத்திய அரசும், மாநில அரசும்

போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப்பேச வேண்டும்.

ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவன செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப் போல இந்த அரசு நினைக்கக்கூடாது. போராட்டம் நடத்துவோரும் பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த "மெஜாரிட்டி" அரசு தங்களிடம் காவல் துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக் கூடாது" என்று நான் அந்த அறிக்கையிலே தெரிவித்ததைத் தான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் போராட்டக்காரர்களையும், பொதுமக்களையும் அடக்கி ஒடுக்க எண்ணாமல், இந்த முக்கியமான நேரத்தில் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து வைத்து பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான சூடிநநிலை அங்கே உருவாக முயற்சிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13559

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணு உலையை இயக்க வேண்டாம்: கோபாலகிருஷ்ணன்.

 

kudankulam.png

 

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை அதனை இயக்கக் கூடாது என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான எரிசக்திக்கான மக்கள் கமிட்டி சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, அணு உலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் தரமானவையாக இல்லை என்றால், அணு உலையின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள். அணு உலையை இயக்க ஓராண்டு தாமதமானாலும் அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

http://puthiyathalaimurai.tv/do-not-run-the-kudankulam-reactor-say-gopalakrishnan

Edited by துளசி

  • தொடங்கியவர்

533884_456119281132833_1620100775_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

கூடங்குளம் பிரச்சனை குறித்த கருணாநிதி அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அணு உலை போராளிகள்.

 

1365169277.jpg

 

இன்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் :

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூடங்குளம் பிரச்சினை பற்றிய தனது பழைய அறிக்கை ஒன்றினைத் தூசி தட்டி, தேதி மாற்றி வெளியிட்டுள்ளார். இந்த “மறு ஒளிபரப்பு” பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும், தி.மு.க.வின் வெற்று அரசியலை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

ஒட்டு மொத்தத் தமிழகமே தனது வாழ்வாதாரங்கள் பற்றியும், வருங்கால தலைமுறைகளின் நல்வாழ்வு பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் மட்டுமல்லாமல், கல்பாக்கத்திலும், கலைஞர் அரசு அனுமதி வழங்கிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனி மாவட்டத்திலும் தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழர் எதிர்கொண்ட இனப்படுகொலை, தமிழீழத்தின் தேவை போன்றவற்றுக்காகப் போராடுகிற மாணவர்கள் இங்குள்ள தமிழர் எதிர்கொண்டு நிற்கும் “மெல்லக் கொல்லும் இனப்படுகொலையாம்” அணு உலைகளையும் எதிர்த்துப் பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மக்களின் நலன்களை மனதில் நிறுத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தனது கட்சியின் நிலையை, கொள்கைகளை அதற்கேற்றவாறு மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் மாற்றியமைத்து உண்மைத்தன்மையுடன் கருத்து சொல்வதற்குப் பதிலாக கலைஞர் அவர்கள் வழக்கம்போல அ.தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.

அறுநூறு நாட்கள் உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம் என்று அலைந்து திரிந்து, மிகப் பெரிய மன அழுத்தத்துக்குள்ளாகி, கடுமையானப் பொருளாதார இழப்புகளை சந்தித்து, அசிங்கமான அவதூறுகளுக்கு ஆட்பட்டு, காவல்துறையின் அடக்குமுறைகளால் அவதியுற்று, உயிர்ப்பலி கொடுத்து, சிறைச்சாலைகளிலும், நீதிமன்றங்களிலும் உழன்று கொண்டிருக்கும் மக்களைத் தேற்றும் வகையில், உதவும் வகையில் உருப்படியான ஆலோசனைகள் சொல்வதற்குப் பதிலாக தமிழக ஆளுங்கட்சியுடனான தனது அரசியல் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள எங்களை, எங்கள் போராட்டத்தை உபயோகிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இன்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அணுசக்தி பிரச்சினை பற்றிய தனது கட்சியின் நிலையைத் தெளிவுபடுத்தி, தமிழ் மக்களுக்கு எப்படி உதவுவோம் என்று விளக்குவதற்குப் பதிலாக, மதில்மேல் பூனை போல தொட்டும் தொடாமலும் பேசிவிட்டு, எதிர்தரப்பையேக் குறை சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டபோது நாங்கள் அதைக் கடுமையாக எதிர்த்தோம். அன்றைய தினம் முதல் மத்திய அரசுடன், தமிழக அரசையும் எதிர்த்தே போராடிவருகிறோம்.

தமிழக முதல்வர் தனது நிலையினை மாற்றிக்கொண்டதுதான் மிகப் பெரிய பிரச்சினை என்பது போலப் பேசுவது, சித்தரிப்பது அரசியல் நேர்மையற்றத் தன்மையையேக் காட்டுகிறது. “கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு, நெய்க்காக ஊரெல்லாம் அலைகிறார் முதல்வர்” என்றும், உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கவேண்டும் என்றும் முன்பு கருத்து சொன்ன கலைஞர் அவர்கள் இந்த அறிக்கையில் அப்படி எதுவும் சொல்லவில்லையே? தான் செய்தால் சாணக்கியம், மற்றவர் செய்தால் சண்டாளத்தனமா?

தமிழரின் வாழ்வாதாரங்களை அழிக்கிற, வாழ்வுரிமையை மறுக்கிற, தரமற்ற உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, தொழில்நுட்ப பிரச்சினைகள், சிக்கல்கள் நிறைந்த கூடங்குளம் அணு உலை தமிழகத்தில் வேண்டாம் என்றுதான் போராடிக்கொண்டிருக்கிறோம். “ஆபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது, உத்தரவாதம் அளிப்பது, ஆவன செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது” என்று டெசோ-பாணி அரசியல் செய்து தமிழ் மக்களை இன்னும் உபயோகிக்கலாம் எனும் மனப்பான்மையை, அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்ய தி.மு.க. முயலட்டும்.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும், ஐந்து முறை தமிழக முதல்வராக பணியாற்றியவரும், நடுவண் அரசில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ந்து பங்கேற்றக் கட்சியின் தலைவருமான கலைஞர் அவர்கள் அணுசக்தி பற்றிய தனது கட்சியின் நிலை என்ன என்பதை தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தட்டும். தி.மு.க. தலைவர் மகள் நாடாளுமன்றத்தில் 2008-ம் ஆண்டு அவரது கன்னிப் பேச்சில் தெரிவித்ததுதான் தி.மு.க.வின் தற்போதைய கொள்கையா என்பதை அறிவிக்கட்டும். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் பூர்வமான எங்கள் வாதங்களை புறக்கணித்து, அணு உலை இயங்கப் போவதாக மத்திய அரசும், அணுசக்தித் துறையும் சொல்லும் உண்மைக்குப் புறம்பான தகவலை நம்பும் கலைஞர் “இந்த முக்கியமான நேரத்தில்” பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று சொல்கிறார். இந்த முக்கியமான தமிழ் மக்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அவர் சொல்வதற்கு எது தடையாக இருக்கிறது?

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://www.newsalai.com/details/anti-nuclear-activists-slams-karunas-statement-on-koondankulam-protest.html#.UWB090qG2Qs

Edited by துளசி

  • தொடங்கியவர்

இடிந்தகரையில் நேற்று (07.04.2013) நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

 

483537_456636971081064_190490217_n.jpg

 

604022_456637231081038_983842522_n.jpg

 

579835_456637047747723_1270641451_n.jpg

 

533819_449311175155045_1851747214_n.jpg

 

525348_456638234414271_1157612010_n.jpg

 

531837_456638451080916_1619855292_n.jpg

 

 

 

இடிந்தகரை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அனைத்து கல்லூரி மாணவர்கள்.

 

59258_456638477747580_797085431_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

இடிந்தகரையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உதயகுமார் அவர்களின் பேச்சு.

 

  • தொடங்கியவர்

ஏப்ரல்- 20,2013 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு கூடங்குளம் – கல்பாக்கம் அணு உலைகளை இழுத்து மூட வலியுறுத்தி மாணவர் - மீனவர், அணு உலை எதிர்ப்பு அமைப்புகளும் இணைந்து “கன்னியாகுமரியிலிருந்து... கூடங்குளம் நோக்கி முற்றுகைப் பயணம்”

தோழமை மிக்க மீனவர்களே! மாணவர்களே! அணு உலை எதிர்ப்பாளர்களே!
சிங்கள அரசின் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசு, தமிழ்நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் அணு உலைப் பூங்காக்களை அமைத்து தமிழின அழிப்புச் சதியில் ஈடுபடுகிறது. மனிதகுலப் பேரழிவை உண்டாக்கும் அணு உலைகளுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இந்திய அரசுக்கு எதிராகவும், துணை போகும் தமிழ் இனத் துரோகிகளுக்கு எதிராகவும் ஒன்றிணைந்து போராடுவோம்!


கூடங்குளம் நோக்கி.....ஏப்ரல் 20 அன்று குமரி முனையில், காந்தி மண்டபம் எதிரில் ஒன்று கூடுவோம்!

ஒருங்கிணைப்புக் குழு,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி துளசி.. ஈழப்போராட்டம் அடக்கப்பட்ட விடயம் எவ்வாறு தென் தமிழகத்தையும் பாதித்து வருகிறது எனபதற்கு இந்த அணு உலை விவகாரம் ஒரு நல்ல உதாரணம்..

  • தொடங்கியவர்

479889_524247497637331_1300625562_n.jpg

 

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

கூடங்குளம், அணுஉலைக்கு தரம் குறைந்த பொருட்களை விநியோகம் செய்த ரஷ்யர்கள் மாஸ்கோ வில் ரஷ்ய போலீசாரால் கைது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

“ஊழலும் லஞ்சமும் மலிந்துவிட்ட இன்றையச் சூழலில் இவர்களால் வெற்றிகரமாக ஓர் அணு உலையை அமைக்க முடியாது”
– இந்திய அணு சக்தித் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன். கோபாலகிருஷ்ணன்  -

(முகநூல்)
 

 

  • தொடங்கியவர்

644584_528602710535143_535312627_n.jpg

 

(முகநூல்)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

அறிவிப்பு! அழைப்பு!!

அன்பரீர், வணக்கம்! ஏப்ரல் 7, 2013 அன்று இடிந்தகரையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்ற முன்வந்த தோழர்கள்...

ஏப்ரல் 20, 2013, சனிக்கிழமை, கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளம் நோக்கி நடக்கும் முற்றுகைப் பயணப் போராட்டம் முடிந்த பிறகு

ஏப்ரல் 21, 2013, ஞாயிறன்று இடிந்தகரை வந்து நமது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி!

போராட்டக்குழு,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்

நண்பர்களே, நாங்கள் வரும் மே மாதம் 5 ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் இடிந்தகரை செல்ல திட்டமிட்டு உள்ளோம்.

பயணத் திட்டம்

1) காலை ஆறு மணி அளவில் முதல் அணி துறையூரில் (காமநாயக்கன்பட்டி) இருந்து கிளம்பி 6:30 மணிக்கு சொக்கலிங்கபுரம் (கடம்பூர்) வந்தடைந்து , அங்குள்ள குழுவினரோடு சேர்ந்து கயத்தார் நோக்கி புறப்படும்.
2) ஏழு மணிக்கு கயத்தாறில் இருந்து கிளம்பி திருநெல்வேலி சென்றடையும்.
3) எட்டு மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சரியாக 10 மணிக்கு இடிந்தகரை சென்றடையும்
4) திரும்புவது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் அல்லது அவரவர் விருப்பதிற்கே விட்டுவிடுகிறோம்
5) இடைப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அவரவர் பகுதியில் இருந்து இணைந்து கொள்ளலாம்.
6) நண்பர்கள் இச்செய்தியை மற்ற தோழர்களிடம் பரப்பவும்.
7) இந்த முயற்சி கட்சி சார்பற்றது, அனைவரும் கலந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு vvv_vv_1985@yahoo.co.in (any time)
8098015141 (Call only from April 26)
9959884113 (any time)
Guys in facebook can contact me via https://www.facebook.com/profile.php?id=100000011056138
(சு.விஜய பாஸ்கர்)

அன்புடன்
சு.விஜய பாஸ்கர்

வெல்லுக நம் மக்களின் நீண்ட நாள் போராட்டம். தமிழினத்தை காப்போம், தமிழரின்
வாழ்வாதாரத்தைய பாதுகாப்போம்.

(முகநூல்)

 

  • தொடங்கியவர்

கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளை மூடக் கோரி நடைபயணம்- கொளத்தூர் மணி கைது.

 

சென்னை: தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மூடக் கோரி இன்று கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளத்துக்கு நடைபயணம் நடத்த முயன்ற கொளத்தூர் மணி உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடை பயண அறிவிப்பை வெளியிட்டதும் கன்னியாகுமரி நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நெல்லை-கன்னியாகுமரி, நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் டி.எஸ்.பி. பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்தநிலையில், காலை 11.30 மணி அளவில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 100 பேர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு குவிந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து கூடங்குளம் நோக்கி நடைபயணத்தை தொடங்கினர்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில், தமிழர் தேசிய இயக்க மாநில பொது செயலாளர் பரந்தாமன் மற்றும் தமிழர் தேசிய பொதுவுடமை கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை இயக்கம் உள்ளிட்ட 15 இயக்கங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

எதிர்ப்பாளர்கள் நடைபயணமாக புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் போலீசார் அவர்களைதடுத்து நிறுத்தி கைது செய்தனர். கொளத்தூர் மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரியும், முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம், புதுக்கிராமம், வாவத்துறை மீனவ கிராமங்களைச் சேர்ந்த கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

 

http://tamil.oneindia.in/news/2013/04/20/tamilnadu-protest-against-kknp-kolathur-mani-100-others-arrested-173810.html

 

  • தொடங்கியவர்

கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளம் நோக்கி நடைபெற்ற முற்றுகைப் பயணம்

 

கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை மூடக்கோரியும், போராடும் மக்கள் மீது பதிந்துள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரியும், அணு உலையை முற்றுகையிடுவதற்காக, 20-04-2013 காலை 11அளவில், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து, கூடங்குளம் நோக்கி முற்றுகைப் பயணம் துவங்கியது. அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக, தோழர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்பட்ட சுமார் 200 பேரையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்து, கொட்டாரம் பகுதியில் உள்ள என்.என்.சி.ஆர் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

 

923526_459730837439158_639322840_n.jpg

 

 

536867_459730890772486_1206202876_n.jpg

 

 

544272_459730917439150_1293133663_n.jpg

 

547092_459730980772477_905863717_n.jpg

 

554650_459730777439164_178845448_n.jpg

 

417794_459730734105835_92416423_n.jpg

 

399723_459731040772471_173313641_n.jpg

 

407116_459731054105803_1427685038_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

கல்பாக்கம் கூடங்குளம் அணு உலைகளை மூடக்கோரி நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூத்தங்கழி மக்கள் பேரணி.

 

526579_10201234950462680_1043730113_n.jp

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி போராட்டம்: 50 பெண்கள் உட்பட 200 பேர் கைது

 

கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிடுவதற்காக கன்னியாகுமரியில் இருந்து பேரணியாக புறப்பட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற கோரியும் இந்த முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை பேரணி தொடங்கியது. எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ அமைப்புகள் மற்றும் மாணவ அமைப்புகள் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இடிந்தக்கரை பகுதியில் உண்ணாவிரதம் நடைபெற்றது. கூத்தங்குளி, செட்டிக்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானவை என இதுவரை கூறிய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், தற்போது 4 வால்வுகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/arrested-200-people-including-50-women-struggle-reactors-mutakkori

  • தொடங்கியவர்

அணு உலையில் பாதிக்கப்பட்ட 4 வால்வுகள் மாற்றப்பட்டன: அணு உலை கண்காணிப்பு குழு

 

 April 20, 2013

 

20-kudankulam-nuclear-planet-3.jpg

 

கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையில் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வால்வுகள் மாற்றப்பட்டுவிட்டதாக அணு உலை கண்காணிப்புக்குழு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள அணு உலைகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது அதில் சில வாழ்வுகள் பழுதடைந்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை நீக்கிவிட்டு மாற்றப்பட்டு விட்டன. புதிதாக வால்வு பொருத்தப்பட்டு அவை சரி செய்யப்பட்டுவிட்டன. அவை பொருத்தமான வால்வுகளாக உள்ளன. இவை திருப்தி அளிப்பதாக என்.பி.சி.ஐ.எல் சான்று அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி பழுது

கூடங்குளம் அணு உலையில் பலமுறை வால்வுகள் பழுதடைந்துள்ளன. சில முறை வால்வுகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் 4 பழுதடைந்த வால்வுகள் மாற்றப்பட்டுள்ளன. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமற்றதாக இருக்கின்றன எனவே கூடங்குளம் அணு உலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அணு உலைக்கு எதிரானவர்கள் கேட்கின்றனர்.

முற்றுகைப் போராட்டம்

இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தரைவழி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அணு உலைக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமையில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கூடங்குளம் நோக்கி பேரணியாகச் சென்று, அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 அப்போது பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தரமற்ற உபகரணங்களும், உதிரிபாகங்களும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தரமற்ற பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அணுஉலையை இயக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகமே இந்த பேரணி நடத்தப்படுவதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

 

http://tamil.oneindia.in/news/2013/04/20/tamilnadu-four-valves-found-deficient-at-kudankulam-being-replace-173798.html

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணுஉலையை திறக்கக் கூடாது ~ ராமதாஸ் வலியுறுத்தல்

 

20th April 2013

 

கூடங்குளம் முதல் அணு உலையில் உற்பத்தி தொடங்குவதையும், 2 ஆவது உலையில் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலையை அமைப்பதில் நடந்த ஊழல்கள், தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ரஷ்ய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூடங்குளம் அணுஉலையை இயங்கச் செய்வதற்கான முயற்சியில் இந்திய அணுசக்தித் துறை இறங்கியிருப்பதாக ராமதாஸ் குறை கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக ஊழல் நடந்திருப்பதை, 'கூடங்குளம் பிரச்னைகளைத் தீருங்கள்' என்ற தலைப்பில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.கோபாலகிருஷ்ணன் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருப்பதை ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, கூடங்குளம் ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி முடிக்கும் வரை, கூடங்குளம் பணிகளை தொடரக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.newsalai.com/details/dont-open-kudankulam-nuclear-plant-ramadoss-demand.html#.UXRIaUqC9S0

 

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

கூடங்குளம் அணுஉலையை உடனடியாக மூட வேண்டும் ~ வைகோ

 

கூடங்குளம் அணுஉலையை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்துடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்கக்கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

 

கூடங்குளம் அணு உலைகளை திறப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு காரணம் தரக்குறைவான பொருட்களாக இருக்கலாம் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கூறியிருப்பதையும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதனால், தரக்குறைவான பொருட்கள் அணுஉலையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதோடு அல்லாமல், மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.newsalai.com/details/kknpp-should-be-shutdown-says-vaiko.html#.UXRIAkqC9S0

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.