Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசையே விசாரணை நடத்தக் கோருவது முரணானது! - அக்சன் பெய்ம் கருத்து!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசையே விசாரணை நடத்தக் கோருவது முரணானது! - அக்சன் பெய்ம் கருத்து!!    

 

பிரான்ஸ் தொண்டு நிறுவனமான அக்சன் பெய்ம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரை சுட்டுப் படுகொலை செய்தவர்களை கண்டறிந்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

 

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் Pauline Chetcuti ரொய்ட்டஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

'இப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது.

 

இலங்கையில் உண்மையான அமைதி, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் நீதி ஆகியவை தேவை என்றால், எந்தவொரு விசாரணைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

 

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அக்சன் பாம் வரவேற்கின்றது.

 

ஆனால் இத்துடன் இது முடிந்து விடாது. ஏனெனில் சிறிலங்கா மீதான தீர்மானம் கடுமையானது அல்ல.

 

சில விவகாரங்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை.

 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகரமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தும்படி சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருவது முரணானது.

 

மூதூர் படுகொலைகள் குறித்து சிறிலங்காவின் மூன்று விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் போன்ற காரணங்களால் இவ்விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் இழுபறியாகவே இருக்கின்றது' என Pauline Chetcuti மேலும் தெரிவித்துள்ளார்.

 

2003ஆம் ஆண்டு பாக்தாத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், மனிதாபிமானத்தின் மீதான மோசமான தாக்குதலாக மூதூர் படுகொலைச் சம்பவம் கருதப்படுகிறது.

 

இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாக விலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=c3095a53-40ce-49e2-8b94-7d420d2c6d29

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.