Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி மக்கள் வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் - கரு ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல் மூலம், வடபகுதி மக்கள் வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் வேறு நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உரிமையான மீண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அண்மைய உதாரணமாகும்.

இனந்தெரியாத வன்முறையாளர்கள் தடையின்றி சென்று, தாக்குதல் நடத்தி விட்டு, தப்பிச் செல்லக் கூடிய சூழ்நிலை யாரால் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி இங்கு எழுகிறது.

கடந்த ஜனவரி மாதம் உதயன் பத்திரிகை மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டது. இனந்தெரியாத வன்முறையாளர்கள், யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் விநியோகஸ்தரை தாக்கிய, அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு, பத்திரிகைகளை தீயிட்டு எரித்து விட்டு,தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் நடந்து மூன்று மாதம் கடந்துள்ள போதிலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. ஒருவரது நிலைப்பாடுகளை தாம் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ, ஒருவர் தனக்குரித்தான நிலைப்பாடுகளை கொண்டிருக்கு உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். இது உண்மையான ஜனநாயகத்தின் குணாதிசயம் எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90389/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.