Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! - பார்த்தீபன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-


06 ஏப்ரல் 2013

 


ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 


மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழர்களை அழித்துவிட்டு எஞ்சியவர்களை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டு எந்தத் தீர்வையம் வழங்காமல் எஞ்சிய மக்களையும் அழித்துக் கொண்டு ஈழமண்ணை அபகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள், சனல் 4 ஆவணப்படங்கள் முதலியனவும் வெளியாகியிருந்தன. ஜெனீவா மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் மக்களின் பிரதிநதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றத்திற்கும் மனித உரிமை மீறலுக்கும் எந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் போதாது என்று சொல்லிய மனித உரிமை ஆர்வலான சிங்களப் பெண்மணி நிமல்கா பெர்ணான்டோகூட கலந்து கொண்டார்.


என்ன சொல்லுகிறது தீர்மானம்?


இதைப்போலவே அமெரிக்கா கடந்த 2012ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தை கொண்ட இத் தீர்மானம் சில சிக்கலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் மிகவும் பலவீனமாக மாறியிருக்கிறது. அறுபதாண்டு காலமாக இலங்கையில் நடக்கும் இனப்பிரச்;சினைக்கும் முப்பதாண்டு காலமாக நடந்த போருக்கும் பின்னாலுள்ள காரணிகளை ஏற்றுக்கொள்ளாமல் அய்க்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டத்தை அடிப்படையாக முன்வைக்கிறது. 


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா போன்றவர்கள் நேரடியாகச் செய்ய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் குறிப்பிட்டுள்ளது. கொலையாளிகள் தங்களை தாங்களே எப்படி விசாரணை செய்து கொள்வார்கள்? சர்வதேச நடவடிக்கைகளை கண்டு அஞ்சிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையின் பரிந்துரைகளைகளை நிறைவேற்றவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்தத் தீர்மானம் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதியை வழங்கும்படி சொல்லுகிறது. இராணுவ ஆதிக்கத்தை நீக்குதல், சட்ட ஆட்சியைக் கொண்டு வருதல் நிலப்பிரச்சினையைத் தீர்த்தல் முதலிவிடயங்களையும் குறிப்பிடுகின்றது. 


நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!


இராணுவ ஆதிக்கத்தை குறைக்க வேண்டும், நிலப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரத்தைக் கூட்ட வேண்டும், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்ய வேண்டும் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருந்தது. முக்கியமாக நில அபகரிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இராணுவ ஆதிக்கத்தை குறைத்தல் முதலிய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை அரசு எந்த முயற்சியையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக இந்தப் பிரச்சினைகளை இன்னுமின்னும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. 


மெனிக்பாமில் இருந்த மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கேப்பாபுலவு என்ற கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்த மெனிக்பாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டு மெனிக்பாமுக்கு மூடுவிழா செய்திருப்பதாகச் அரசால் அறிவிக்கப்பட்டது. அமnரிக்கத் தீர்மானத்தின் பின்னர் இலங்கை அரச செய்த ஒரே ஒரு நடவடிக்கை இதுதான். இந்தக் காலத்தில்தான் கொக்கிளாய், முறிகண்டி முதலிய இடங்களில் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, பலலாலி, மாதகல் போன்ற பல இடங்களில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள முகாங்கள் இருக்கிறார்கள். 


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், பத்திரிகை எரிப்புக்கள், முன்னாள் போராளிகள்மீதான மீள்கைது நடவடிக்கைகள் போன்ற எல்லாவற்றையும் தாராளமாகச் செய்து கொண்டே நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு எந்தத் தீர்ப்பும் இல்லாத நிலையினால்தான் இப்பொழுதும் அந்த அநீதிகள் தொடரந்து கொண்டிருக்கின்றன.  


இலங்கையின் சண்டித்தனம்!


பயத்தோடு வாழ்ந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து அமைதியான வாழ்க்கையை பரிசளித்து தேசத்திற்கு மகுடம் சூட்டிய தனக்கு உலகம் முள்முடி சூட்ட முனைகிறது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லியுள்ளார். தான் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையால் தனக்கு எதிராக எப்பொழுது நடவடிக்கை எடுப்பார்;கள் என்று ராஜபக்ச அஞ்சிக் கொண்டிருக்கிறார். அவர் பேசும் மேடைகளிலெ;லலாம் சர்வதேச அழுத்தங்களை எதிர்த்தே பேசுகிறார். 


அதுமட்டுமன்றி தன்னுடைய கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் சிங்கள இனவாத மொழியால் கடுமையாக சர்வதேசத்தை தாக்குபவர்கள். அவர்களை வைத்தும் சர்வதேசம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கிப் பேசிய விமல் வீரவன்ச தென்னிந்தியாவில் தமிழ்நாடு அமைக்கச் சொல்லியுள்ளார்.  


ராஜபக்ச மற்றும் அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச முதலியவர்கள் மீது போர்க்குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தங்கள் பிணத்தின்மீதான் அந்த நடவடிக்கை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் பௌத்த பிக்குவும் இனவாதியுமான பெங்குமுவ நாலக தேரர். பௌத்த பிக்குகளையும் அப்பாவி சிங்கள மக்களையும் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்கு எதிரான படையணியாக உருவாக்கியுள்ளார். 


போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதன்மூலம் தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்று சொல்லியுள்ளார் ராஜபக்சவின் தம்பி கோத்தபாய. இதன்மூலம் தாம் இழைத்த போர்க்குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கை அரசு தான் இழைத்த குற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்வது கிடையாது. பாலச்சந்திரனை கொலை செய்ததை ராஜபக்ச மறுத்துவிட்டு ஏன் சனல் 4 இவ்வளவு நாளும் இந்தப் படங்களை ஒளித்து வைத்திருந்தது என்று கேட்டார். அமெரிக்கா போன்ற நாடுகள் விடுக்கும் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று சொல்லும் இலங்கை அமெரிக்காமீதான போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய அந்த நாட்டுக்கு நீண்ட காலமெடுப்பதுபோலவே தங்களுக்கும் கால அவகாசம் தேவை என்றும் சண்டித்தனமாகச் சொல்லுகிறது. 


இந்தியாவின் நேசம்!


ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உள்ள பங்கு அதிகமானது. இந்தியாவுக்காகவே இந்தப் போரை நடத்தினோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. அதனால்தான் நட்பு நாடுமீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது. இலங்கை எங்கள் நட்புநாடு என்று சொல்லிக்கொண்டிருக்கிறமுது. 


இலங்கை தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை காட்டுகிறது, இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுக்கொடுப்போம் போன்ற வாக்குறுதிகளை விட்டு தமிழகத்தை சமாளிக்க முனையும் இந்தியாவுக்கு இலங்கைமீதா நேசம் மிகவும் அதிகமே. அமெரிக்கா, சீனா போன்ற வல்லாதிக்கங்களிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் அது தன்னுடைய நலன்களுக்கு பாதிப்பை தரும் என்பதற்காதகவும் இந்தியா ஈழத் தமிழர்களைப் பலியிட்டுக்கொண்டிருக்கிறது. 


கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அமெரிக்கத் தீர்மானம்மீது கருத்துச் சொல்ல நீண்ட கால அவகாசம் எடுத்த இந்தியா இறுதி நேரத்தில் அமெரிக்கத் தீர்மானத்தில் இருந்த சில சொற்களை மாற்றி தீர்மானத்தை வலுவிலக்கசச் செய்திருந்தது. இந்த ஆண்டும் தீர்மானத்திலுள்ள சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியுள்ளது. அமெரிக்காவின் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளது இந்தியா. அதனால்தான் இந்தியாவுக்கு இலங்கை தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறது. 


ஆனால் கோத்தபாய ராஜபக்சவோ இந்தியாவின் நவடிக்கை தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தாங்கள் இழைத்த போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் இந்தியா ஐ.நா அரங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தியிருக்கலாம் என்று கோத்தபாய எதிர்பார்த்திருக்ககூடும். அதேவேளை இந்தியாவும் அதை நடத்தக்கூடியே மனநிலையிலேயே இருக்கிறது. 


தமிழகத்தில் வரலாறு காணாத மாணவர் எழுச்சி ஏற்பட்டது. மாணவர்கள் அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைத் தராது இந்தியாவே ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார்கள். தமிழக முதல்வர் முதல் அனைத்துக் கட்சிகளும் அமெரிக்கத் தீர்மானத்தில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்து இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இலங்கை இந்தக் குற்றச் செயல்களுக்காக தன்னை எப்படித் தண்டித்துக்கொள்ளாதோ அதைப்போலவே இந்தியா தன்னையே போர்க்குற்றவாளி என்று எப்படி தீர்மானம் போடும்? 


அமெரிக்காவின் மிரட்டல்!


அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சொல்லுகிறது இலங்கை. அமெரிக்காவுக்கு அப்படி என்னதான் அக்கறை? மனித உரிமைமீதும் இனப்படுகொலை மீதும் போர்க்குற்றம்மீதும் அமெரிக்க காட்டும் கரிசனை எதற்கானது? எப்படியானது என்பதைக் குறித்து நம்முடைய மக்கள் அறிவார்கள். மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படும் பொழுது அதைத் தடடிக் கேட்கும் பொறிமுறையாக ஐ.நா  உருவாக்கப்பட்டது. அதில் உலக நாடுகளும் இணைந்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் நலனை அடிப்படையாகக் கொண்டே ஐ.நா செயற்படுகிறது. முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த பொழுது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும்பொழுது ஐ.நா முதற்கொண்டு எல்லா மனித உரிமை அமைப்புக்களும் பார்த்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கொலைகளை தடுத்து நிறுத்தாமல் அதன் கணக்கை வைத்து தம்முடைய காரியத்தைச் சாதிக்க முற்படுகின்றது உலகம். 


அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் காலக்கெடு வித்தித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியமானது என்று அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளார் ரொபார்ட் ஒ பிளக் தெரிவித்துள்ளார். இவர் இலங்கையின் அமெரிக்காத் தூதுவராகவும் செயற்பட்டவர். இலங்கை சுகந்திர விசாரணையைச் செய்யத் தவறினால் சர்வதேசம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும், சர்வதேசத்தின் பொறிமுறை கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அமரிக்காவுக்குத் தெரியும். எல்லாக் குற்றங்களையும் இழைத்த பின்னரும், அதை இன்னமும் செய்து கொண்டே அமெரிக்காவின் மிட்டலுக்கு சண்டித்தனமாகப் பதில் சொல்லுகிறது இலங்கை.


ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!


ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.நா எப்பொழுது நியாயமாகச் செயற்படும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் தீர்மானம் கொண்டு  வரப்பட்ட பொழுது எங்கள் இனப்பிரச்சினை சர்வதேச தளத்திற்கு சென்றுவிட்டது என்று ஒரு ஆறுதலை மக்கள் அடைந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்தியா மீண்டும் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது போன்றவை மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியுள்ளன. காலம் காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு அழிப்பு நடவடிக்கைகளை செய்து வரும் இலங்கையிடமே நீதியை பெறுங்கள் என்றே இந்த ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 


இலங்கை அரசாங்கம் நடத்திய போரில் ஈழத் தமிழர்கள் இழந்தவை ஏராளம். பாலச்சந்திரன்களும் இசைப்பிரியாக்களுக்கும் இந்த உலகம் இந்த பதிலைத்தான் வழங்கியிருக்கிறது. புலித்தேவன்களுக்கும் ரமேசுகளுக்கும் புதுவை இரத்தினதுரைகளுக்கும் இன்னுமின்னும் இலட்சம் சனங்களுக்கும் இலங்கையிடம் நீதியைப் பெறச் சொல்லியிருக்கிறது ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். 


அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள விடயங்களை இலங்கை அசராங்கம் ஒரு பொழுதும் நிறைவேற்றாது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு  நீதியாகவும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாவும்  அமெரிக்காவும், மேற்குலகும், ஏன் உலக நாடுகளும் ஐக்கியநாடுகள் சபையும் அடுத்து என்னதான் செய்யப்  போகின்றன?


பார்த்தீபன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90459/language/ta-IN/article.aspx

 

ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!

 

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள விடயங்களை இலங்கை அசராங்கம் ஒரு பொழுதும் நிறைவேற்றாது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு  நீதியாகவும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாவும்  அமெரிக்காவும், மேற்குலகும், ஏன் உலக நாடுகளும் ஐக்கியநாடுகள் சபையும் அடுத்து என்னதான் செய்யப்  போகின்றன? 

 

தமது நலன்களுக்காக மகிந்தா குடும்பத்தை எதிர்ஜ்த்து மேற்குலகமும் இந்தியாவும் இன்று எதுவும் செய்யமுடியாமல் உள்ளன.

ஒருகட்டத்தில் அந்த நாடுகள் போர்குற்றங்களை முன்னெடுப்பதை தவிர வேறு ஒரு வழியும் இல்லை என முடிவு எடுத்தால் மட்டுமே அந்த வழியால் எமக்கு கதவு திறக்கும்.

 

எம்மை பொறுத்தவரை மகிந்த கூட்டம் தொரடந்தும் பலமாக இருப்பதே நல்லது.

பார்த்திபனின் கட்டுரை பிச்சைக்காரனின் சத்தி போல உபயோகம் இல்லாத பல கலந்ததாகவே இருக்கிறது. அதை எதிர்ப்பதை விட நமக்கென நாம் சில கேள்விகளை கேட்டு பதில்களை அளிக்கலாம்.

 

கேள்வி:அமெரிக்கா ஏன் இலங்கையில் தலையிடுகிறது?

பதில்: தன்னை சர்வதேச பொலிஸ்காரனாக காண்பதால்.

 

கேள்வி: அது நமக்கு நன்மையா தீமையா? சர்வதேசம் ஏன் இலங்கையில் தலையிடுகிறது. உதவுவதாக தமிழரை நம்ப வைத்து அழித்துவிடவா?

பதில்:நெருப்பு சுட்டால் கையை எடுப்பதும், தேன் இனித்தால் சுவைத்து அருந்துவதும் நமது தொழில்ப்பாட்டால் மட்டும்தான் நிகழும். நன்மையை  ஏற்றுக்கொண்டு தீமையை தள்ளிவிடப் பழகவேண்டும் . வாழாவிருந்துகொண்டு குற்றம் காண்பதை நிறுத்த வேண்டும். சர்வதேசம் தமிழரை அழிக்க முயல்கிறது என்ற  குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவர்கள் சிங்களம் அல்ல. புலிகளை அழிக்க மட்டும்தான் சர்வதேச நாடுகள் உதவின. புலிகளின் அழிவில் தமிழரின் அழிவு தங்கியிருக்கு என்ற உண்மையை ஆராய அக்கறை காட்டாமை அவர்கள் விட்ட பிழை. அதை நாம் கடந்த காலமாக கொள்ள வேண்டும். புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் தமிழரை அழித்ததின் தனிப்பொறுப்பு இலங்கை அரசுக்கு மட்டுமே. இதில் இந்தியாவின் பங்கு இருக்கு. இந்தியா மட்டும்தான் தமிழர் அழிவது குற்றம் இல்லை என்றிருந்தது.

 

கேள்வி: தமிழரை அழிக்க சர்வதேசம் உடந்தை இல்லை என்றால்  எதற்காக சிங்கள அரசின் குணங்களை நன்கு உணர்ந்த பின்னரும் வலுவில்லாத பிரேரணைகளை மட்டும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவருகிறார்கள். பிரேரணையின் வலு எதைக் காட்டுகிறது. பிரேரணயின் வலுவில் அமெரிக்காவின் பங்கு என்ன? இந்தியாவின் பங்கு என்ன? சர்வதேச பங்கு என்ன.

பதில்:கூட நியாயமான நாடுகளான கனடா, மெக்சிக்கோ பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதில்  தோல்விகண்ட பின்னர் பின் தாம்  வாங்கின. அமெரிக்கா தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் பழக்கப்பட்ட நாடு. சமகால(இன்றைய) பிரேரணை அமெரிக்காவின் தனி முயற்சி. நாடுகளின்  நலன்களும்,  பொது கொள்கையாக ஒன்று சர்வதேசத்திடம் குறைவாக இருப்பதால் நாடுகளின் ஆதரவின்மையும் பிரேரணையின் பலவீனத்திற்கு காரணம். போர் முடிந்து நான்கு ஆண்டுகளின் பின்னரும் அதை விசாரிக்க கொண்டுவரும் பிரேரணை நலிந்ததாக இருப்பது அதைக்கொண்டுவர அமெரிக்காவும் நல்ல தெரிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்தியா பிரேணைகளின் முழு எதிரியாக செயல்ப்படுவது மட்டுமின்றி அதை திரை மறைவில் மட்டுமே இன்றுவரை செய்து வந்து தமிழ்நாட்டை இருட்டில் வைத்திருந்தது. மாணவர் எழுச்சி, பிரேரணை சம்பந்தமாக இந்திய அரசை குழப்ப நிலையில் போட்டுவிட்டது. பிரேரணையின் சாதாரண எதிரிகள் சீனா, ரூசியா, கியூபா, ஆபிரிக்க, தென்கிழக்கசிய நாடுகள். காரணம், பிரதானமாக பொருளாதார நலன், அடுத்து அமெரிக்காவுடனான கொள்கை மாறுபாடு, மிகச் சிறிய அளவில் அவர்களின் பாதுகாப்பும் தங்கியிருக்கு.

 

கேள்வி: நல்ல நாடுகள் தோற்றுவிட்டன. அமெரிக்கா நல்ல தெரிவில்லை. பின்னர்  யார்தான் இதற்கு தெரிவு?

பதில்: இந்தியாதான் நல்ல தெரிவு. துரதிஸ்டவசமாக இந்தியாவே பிரேரணையின் முழு எதிரியாகவும் இருந்துவிடுகிறது. இந்தியா பிரேரணையை கொண்டு வந்தால் பொருளாதார நலன் கருதி எதிர்க்க சீனா மட்டும்தான் மிஞ்சியிருக்க முடியும். மற்றைய நாடுகள் எதுவும் எதிர்க்க தமக்குள் ஒரு காரணத்தை காண மாட்டா. அமெரிக்கா இறங்காத வரைக்கும் சீனா, ரூசியா போன்றவற்றுக்கு  இருக்கும் பிராந்திய பாதுகாப்பு பற்றிய பயம் போய் விடும். கியூபா, ஆபிரிக்கா, தெங்கிழக்காசிய நாடுகளுக்கு சொந்த நாட்டு கொள்கை சம்பந்தமான பயம் போய்விடும்.

 

கேள்வி: முழு எதிரியான இந்தியா பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்பது யதார்த்தமா?

பதில்: நாம் எமது சிந்தனைகளில் சில முட்டுக்கட்டைகளை போட்டுவிட்டு மட்டும்தான் எப்போதுமே சிந்திக்கிறோம். உதாரணமாக, சோனியா, காங்கிரஸ், இந்தியா, அமெரிக்கா, புவிசார் என்றெல்லாம் அடைமொழிகள் ஏற்றிக்கொள்கிறோம். ஆனால் அமெரிக்க ராஜதந்திரத்தை பார்த்தோமானால் அவர்கள் அவ்வாறில்லை.  அவர்கள் USSR என்று ஒரு நாட்டையோ அல்லது ஸ்ரலின், குருசேவ்  பிரஸ்நோவ் என்ற நபர்களையோ வைத்து எதையும் செய்யவில்லை.  இதனால் USSR இன்று இல்லை. இலங்கையில் அவர்கள் ராஜபக்ஷாகளைக் கண்டு கொள்வதில்லை. ராபக்ஷாகளை எப்படியாவது கையாண்டுவிடுவதுதான் அவர்களின் ராஜதந்திரம். நாம் மட்டும் சோனியாவோ, அல்லது, காங்கிரசோ, அல்லது இந்தியாவோ என்று கூறிக்கொண்டு சூடுகண்ட பூனை மாதிரி நடந்து கொள்கிறோம்.   இந்தியாவே நமது இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆரம்பித்து வைத்தது. இந்தியாவே இரசாயன ஆயுதங்களை இலங்கை அரசுக்குக்கு கொடுத்து முடித்து வைத்தது. 2009 இந்தியாவே, இலங்கைக்கு எதிரான பிரேரணை வரப்போகுது என்றவுடன் அதை மாற்றி  இலங்கைக்கு ஆதரவான பிரேரணையாக ஆக்கியது. இந்தியாவே இதையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையாகவும் பிரேரிக்க முடியும்.

 

கேள்வி: இந்தியா பிரேரிப்பது நல்லதாக இருக்கலாம். பூனைக்கு மணிகட்டுவது யார்?

பதில்: பல வழிகள் இருக்கலாம். ஆனல் இன்று (4/8/2013 இல் அன்று) இந்த கேள்வியைக் கேட்டால் அதற்கு தமிழக மாணவர் என்பதுதான் பதில். அவர்கள் தான் இதை சிந்தித்தவர்கள் அவர்கள் தான் இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இதற்கு ஒரு விடை காணும் வரை நாம் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். அடுத்த பிரேணையாக இருந்தால் அது இந்திய தேர்தலின் பின்னர் தான் வரும் சந்தர்ப்பம். தமிழக கட்சிகள் மாணவர்களின் பின்னல் நின்றால் 40 பிரதிநிதிகள் மத்திய  அரசை ஆக்கும் கட்சியை நிச்சயமாக கடமைப் பட வைக்க முடியும்.

 

கேள்வி: வெற்றிகரமாக ஒரு சரவதேச பிரேரணையை நிறைவேற்றிவிடால் தமிழருக்கு என்ன நன்மை? இந்தப் போர்க்குற்றத்தை விசாரித்துவிட்டால் இன்னொரு போர்குற்றம் வராதா? பிரேரணைகளில் தீர்வு பற்றி தெளிவாக ஒன்றும் இது வரையில் பேசப்படவில்லையே?

பதில்: அது முழு உண்மை. நாடுகளும் அதை கடைக்கண்ணால் கண்டும் இருக்கின்றன. ஆனால் யாரும் எதுவும் செய்ய முன்வரவில்லை. காரணம் இந்தியாவும், அதனது 13ம் திருத்தமும். இந்தியா தீர்வு பற்றிய பேச்சுக்களை இதுவரை ஐ.நாவில் முடக்கியே வந்துள்ளது. நாம் இது வரை சோனியா காங்கிரசிடம் ஒன்றையே கேட்டு வந்ததால் நாமும் அதில் எந்த முன்னேற்றமும் காணவில்லை. ஆனால் இப்போ தமிழ்நாட்டில் சில முன்னெடுப்புகள் சில அரசியல் வாதிகளால் எடுக்கப்பட்டதால் அங்கே நமக்கு தி.மு.க மட்டும்கதி என்ற நிலைமை மாறியிருக்கு.  தமிழ் நாட்டில் நமக்கிருந்த முதல்த்தர தடை நமது முதல்த்தர பலமாக மாறியிருக்கு. நாம் இந்த மாற்றங்களை நம்பப் பழக வேண்டும். ஆதரிக்க வேண்டும். ஆர்வப்படுத்தி முன்னேற்ற வேண்டும். அதனால் மட்டுமே இந்தியா கடந்த நவெம்பரில் 13ம் திருத்தத்தை தீர்வாக பிரேரிகிக்க முயன்றது போன்ற ஒரு முயற்சியை நிறுத்த முடியும்.

 

வட்டுக்கோட்டை மகாநாடு வடக்கு-கிழக்கு தமிழருக்கு  இலங்கையில் ஒருங்கிணைந்த தீர்வொன்றுக்குகான சாத்தியங்கள் எல்லாம் பரிசீலிக்ப்பட்டு முட்டிந்துவிட்டன(exhausted)  என்பதை SJV, பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், தொண்டைமான், போன்றவர்கள்  ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதைதான் காட்டியது. இதில் மூளை நவரத்தினம் போன்றோர் தமது சிந்தனைகளை பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து விலத்தி அவர்களுக்கு சற்று முன்னதாக முன்னெடுத்திருந்தார்கள். இந்த வாக்கெடுப்பு, தமிழர்கள் எல்லோரும் தீர்வு தனி நாடுதான் என்பதை எற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதைக் காட்டியது. சிங்களத்துக்கு எதிராக சென்று மட்டும்தான் தமிழர் தீர்வைப் பெறலாம் என்பதுவே நிறுவப்பட்டிருக்கு. வட்டுக்கோட்டை மகாநாடு தமிழருக்குள் மிதவாதிகள் என்றொரு  பகுதி இருப்பது ஒன்றும் உண்மை இல்லை என்பதையே எடுத்துக்காட்டியது. இந்த உண்மையை வைத்துதான் இந்தியா மூலம் ஐ.நா.வில் புதிய ஒரு தீர்வை பிரேரிக்க வைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.