Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்கள் நிராகரிப்பு சரியா? - உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்கள் நிராகரிப்பு சரியா? - உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு! 
[Friday, 2013-04-12 10:00:52]
 
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது. 1993-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் ஒரே கோரிக்கை தொடர்புடைய வழக்காகக் கூறி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதனால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும்வரை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
 
இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த பிப்ரவரி மாதம் நிராகரித்தார். இதையடுத்து இவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று கோரி மறுஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களின் கோரிக்கை புல்லர் விடுத்த கோரிக்கைக்கு ஒத்து இருப்பதால் அதன் தீர்ப்பு வெளியாகும்வரை வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் தடை விதித்தது.
 
இந்த நிலையில் தேவேந்தர் பால்சிங் புல்லரின் மறுஆய்வு மனுவை விசாரித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் காந்தி கொலையாளிகள், சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் ஆகியோரின் மறுஆய்வு கோரிக்கைக்கும் பொருந்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.http://seithy.com/breifNews.php?newsID=80276&category=IndianNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்
புல்லருக்கு தூக்கு உறுதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு

 

 

புதுடெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தனது கருணை மனு மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட புல்லரின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், அவரது தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் ஒரே கோரிக்கை தொடர்புடைய வழக்காகக் கூறி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதனால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாத்தையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி கடந்த பிப்ரவரியில் நிராகரித்தார். இதையடுத்து இவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று கோரி மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களின் கோரிக்கை புல்லர் விடுத்த கோரிக்கைக்கு ஒத்து இருப்பதால், அதன் தீர்ப்பு வெளியாகும் வரை வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் தடை விதித்தது.

இந்த நிலையில், தேவேந்தர் பால்சிங் புல்லரின் மறு ஆய்வு மனுவை விசாரித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு, அவரது மறு ஆய்வு மனுவை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

புல்லரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முகாந்திரம் இல்லை என்றும், கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கால தாமதத்தை காரணம் காட்ட முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=13757

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.