Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதியில் ஆயிரக் கணக்கான இலங்கையர் வெட்டவெளியில் நிர்க்கதி!

Featured Replies

சவூதியில் ஆயிரக் கணக்கான இலங்கையர் வெட்டவெளியில் நிர்க்கதி!

by Editor on 15th-April-2013
 

jeddah05.jpg

தொழில்வாய்ப்புக்களைப் பெற்று சவூதி அரேபியா சென்றுள்ள சுமார் 1200இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்த நிலையில், தங்குவதற்கு இடமின்றி, உண்ண உணவின்றி, மலசல கூட வசதியின்றி வெட்டவெளியில் கைவிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது ஜித்தா பிரதேசத்தின் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர். சவூதி அரேபியாவிலுள்ள பாலம் ஒன்றின் கீழ் தங்கியிருந்த தாம், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பொலிஸார் தம்மை அங்கிருந்து கலைத்ததாகக் கூறினர்.

இவ்வாறு வெட்டவெளியில் தங்கியுள்ள இவர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவைப் பெற்றுக்கொள்வதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பாலத்திற்கு கீழ் இருந்த பொலிஸார் எம்மை பேருந்துகளில் ஏற்றிவந்து, இந்த வெட்டவெளியில் விட்டுச் சென்றனர். எமக்கு கடந்த சில தினங்களாக உண்ணுவதற்கு உணவு இல்லை. மலசலகூடத்திற்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக ஒரே உடையுடனே இங்கு தங்கியுள்ளோம். எமக்கு எங்கும் வேலை தர மறுக்கின்றனர். எம்மை எவ்வழியிலாவது இலங்கைக்கு அனுப்பிவையுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 லட்சம் இலங்கையர்கள் வரை பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/archives/4935

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.