Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக்கில் அடுத்தடுத்து 32 தாக்குதல்கள் மூலம் தொடர் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி : 200 பேர் காயம்

Featured Replies

news_16-04-2013_6iraq.jpg

 

ஈராக்கின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 32 தாக்குதல்கள் மூலமான தொடர் குண்டு வெடிப்பில் 31 பொது மக்கள் கொல்லப் பட்டும் 200 இற்கும் அதிகமானோர்கள் காயமடைந்தும் இருப்பதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு ஈராக்கின் பக்தாத், கிர்குக், பக்குபா, டுஷ்குர்மாட்டோ மற்றும் ஹில்லா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதில் 2 குண்டு வெடிப்புக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிகழ்ந்துள்ளது. இதில் அதிகமான தாக்குதல்கள் பக்தாத்தின் ஷைட்டி முஸ்லிம்களின் பிரதேசங்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ளன. சுன்னி முஸ்லிம் முற்போக்கு வாதிகளின் உதவியுடன் ஈராக்கில் அல் கொய்தா இயக்கம் சமீப மாதங்களாக அங்கு நிகழ்ந்து வரும் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று வந்துள்ளதால் இன்றைய தாக்குதல்களும் அவர்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது.

இத்தாக்குதலின் பிரதான இலக்குகளாக பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகள், ஷைட்டி முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் ஆகியவை விளங்கியுள்ளன. இதேவேளை இன்னும் 5 தினங்களில் ஈராக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால் வாக்களிப்பு நிலையங்களில் தாக்குதல்கள் நிகழலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. இதனால் பொது மக்கள் வாக்களிக்க வராமல் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுவார்களோ என அரசியல் வாதிகளும் கவலை கொண்டுள்ளனர்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzMjQ0Nzgw.htm#.UW0ktEqC9S0

 

ஈராக் இன்று நிரந்தர யுத்த பூமியாக மாறியுள்ளது. எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் ஈராக்குக்கு எப்படி பயங்கரவாதத்தை அழிக்கவேண்டும் என்று பாடம் எடுக்கவேண்டும் போலுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.