Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழவாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்: மகிந்த ராஜபக்சவின் அச்சமும் தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கமும் !

Featured Replies

ஈழவாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்: மகிந்த ராஜபக்சவின் அச்சமும் தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கமும் !

 

http://tamil24news.com/news/?p=62921

 

20130426-061049.jpg

ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர்.தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

இவ்வாறு சமீபத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் உதிர்த்த இந்த வார்தைகள் செய்தியூடகங்களில் பத்தோடு பதினொன்றாக கடந்தவிட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச கூறிய கூற்றின் உள்ளுள்ள சிங்களப் பேரினவாத்தின் அச்சம் குறித்து தமிழர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக உருவாகி வருகின்ற தமிழீழ சாசனத்திற்கான முன்னெடுப்புக்கள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை சிங்கள பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவத்தின் குரலாக மகிந்த ராஜபக்சவின் கூற்று வெளிவந்துள்ளது.

 

ஈழவாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர் என மகிந்த ராஜபக்ச உடைத்து கூறியிருப்பதன் ஊடாக உருவாகிவரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தான சிங்கள தேசத்தின் அச்சம் மீண்டுமொரு தடவை வெளிப்பட்டுள்ளது.

 

தமிழீழ சுதந்திர சாசனத்தினை உலகப் பரப்பெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புக்களின் கூட்டொத்துழைப்புடன் உருவாக்கி வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது சிங்களப் பேரினவாதம் ஏற்கனவே பலதடவை தனது அச்சத்தினையும் சீற்றத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

2012ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த காலப்பகுதியில் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் வெளிவிகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் இருக்கின்ற வி.உருத்திரகுமாரனினால் வழிநடத்தப்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமெரிக்கா தடை செய்யவேண்டும் என்று அன்றைய அமெரிக்க இராஜாங்கச் வெளிவிவகாரச் செயலர் கில்லரி கிளின்டன் அம்மையாரிடம் முன்வைத்திருந்த கோரிக்கை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

 

இதேபோன்று சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட அமெரிக்கத் தூதுவரிடமும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச இதே கோரிக்கையினை முன்வைத்திருந்ததாக விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளிக் கொணர்ந்திருந்தது.

 

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் உயிர்களை மட்டுமல்ல அவர்களது பெருவிருப்பான தமிழீழ்தினையும் குழியில்புதைத்துவிட்டதாக சிங்களம் யுத்த வெற்றிமிதப்பில் இருந்த வேளை தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்ற தமிழர்களின் பெருவிருப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வடிவமாக வெளிக்கிளம்பியது சிங்கள தேசத்திற்கு அச்சத்தினையும் சீற்றத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

 

தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை வெறும் பயங்கரவாதப் போராட்டமாக உலகின் சித்தரித்து அனைத்துல அரங்கில் தமிழீழப் விடுதலைப்புலிகள் மீதான தடைகளுக்கு சிங்களம் அச்சாரம் இட்டுக் கொண்டிருந்தது.

இத்தடையானது ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் போராட்ட முன்னெடுப்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

 

தமிழர் தரப்பு – சிங்களத் தரப்பு – இந்தியா உட்பட மேற்குலகம் முக்கோண நிலையில் தமிழர் தரப்பின் குற்றங்கணா முனைந்த ஓரு தரப்பின் போக்கினை தனக்கு சாதகமாக பாவித்த சிங்களம் ஒட்டுமொத்த தமிழின அழிப்பினை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றியிருந்தது.

 

ஆனால் முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் சூழல் மாறிவிட்ட நிலையில் தமிழர் தரப்பின் குற்றங்கணா முனைந்தவர்கள் இன்று சிங்களத்தின் மீது குற்றங்காண்பதனை சமகாலத்தில் காணமுடிகின்றது.

 

தமிழர்களின் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமென சித்தரித்து தடைகளையும் பலாபலன்களையும் அனுபவித்திருந்த சிங்களத்தினால் இன்று சனநாய வழிமுறையூடான வடிவமாக தோற்றம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்கத்தின் மீது தடைகளை அனைத்துலக அரங்கில் தோற்றுவிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டுள்ளது.

 

1977ம் ஆண்டு வட்டுக்கோட்மைத் தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் என்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டினை வெறும் முழக்கமாவோ அல்லது வெறும் காகித அறிக்கையாகவோ அல்லாமல் அதற்கு வடிவம் கொடுக்கும் முகமாகவே ஆயுதப் போராட்டம் தொடர்சிகண்டது.

 

வெறும் கரந்தடிப் போராக அது நீடிக்காமல் அது மரபுரீதியான போர்முறையாக மாற்றங்கண்டு தமிழர்களின் நிலங்களை சிங்க பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டது மட்டுமல்லாது தக்கவைத்து அதில் ஓர் நடைமுறைத் தமீழீழ அரசும் நிறுவப்பட்டிருந்தது.

 

நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது நீண்டு செல்லும் பட்சத்தில் பலத்தின் அடிப்படையில் அதற்கான முழு அங்கீகாரம் அனைத்துல அரங்கில் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இன அழிப்பு போர் ஒன்றினை நடத்தி தமிழர்களின் உயிர்களை மட்டுமல்ல நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினையும் அழித்தொழித்தது சிங்களம்.

 

ஓர் அரசுக்குரிய இனம் தமிழினம் என்பதனை உலகின் முன் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசு பறைசாற்றியிருந்தது மட்டுமல்லாது தமிழகம் – மலேசியா என உலகப் பரப்பெங்கும் விரிந்துள்ள தமிழர்களின உறுதியான அரசியல் இருப்புக்கும் அது நம்பிக்கை சமைத்திருந்தது.

 

இந்நிலையில்தான் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்தொழிப்பதன் ஊடாக தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை அழித்துவிடலாம் என சிங்களம் நினைத்திருந்த வேளை தமிழர் தரப்பு முன்னிறுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஈழத் தமிழர்களின் சனநாயகப் போராட்ட வடிவம் பெருந்தலையிடியாக சிங்களத்தின் தலைகளில் வந்திறங்கியது.

 

இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துல அரங்கில் கிடைத்துள்ள அரசயில் வெளியில் சனநாயகபூர்வமாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற உயர்அரசியல் பீடமாக அது தேங்கிவிடாது நாளை மலரும் தமிழீழம் எத்தகைய வடிவத்தினைக் கொண்டது என்பதனை வெளிக்காட்டும் பொருட்டு தமிழீழ சுதந்திர சாசனத்தினை உருவாக்கி வருகின்றது.

 

உலகப் பரப்பெங்கும் உள்ள தமிழர்களின் கருத்துக்கள் ஊடாக உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனமானது 1977ம் ஆண்டு வட்டுக்கோட்டடைத் தீர்மானம் தொடக்கம் 1986ம் ஆண்டு காலப்பகுதயில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கை செயற்திட்ட வரைவாக இருந்த சோசலீச தமிழீழம் உள்ளடங்கலாக 2003ம் ஆண்டு சமாதான காலத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி வரைபு வரை யாவற்றையும் உள்ளடக்கியதான கேள்விக் கொத்தினை மக்கள் முன்வைத்து மக்கள் தீர்மானிக்கின்ற ஓர் வடிவமாக தமிழீழ சுதந்திர சாசனம் உருவாகி வருகின்றது.

 

சனநாயகபூர்வமாக உருவாகிவரும் இந்த சுதந்திர சாசனமானது சனநாயக போதகர்களாக விளங்குகின்ற சர்வதேசத்தின் முன் ஓர் ஆவணமாக முன்வைக்கும் போது எவருமே நிராகரித்து

விடமுடியாது.

 

மறுபுறம் தமிழீழம் என்ற தமிழர்களின் போராட்டத்திற்கான திசையினை தீர்மானிப்பவர்காளக தமிழர்களே உள்ளனர் அன்றி பிறர் அல்ல என்பதனை வழிவகுக்கும் பொருட்டு தமிழீழம் நோக்கிய தமிழர்களின் உறுதியான அரசியல் நிகழ்ச்சி நிரலாக தமிழீழ சுதந்திர சாசனம் உள்ளது.

 

இந்நிலையில்தான சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்ச ஈழம்வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர் என தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

 

- சுதன்ராஜ் -

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.