Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு? - தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் சம்பந்தன் விளக்கம்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு? - தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் சம்பந்தன் விளக்கம் [ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 15:59 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

Ra-Sam.jpg

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் ஓர் அரசியல் அமைப்பு ஆகும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை சேதப்படுத்த முயற்சிக்கும் எதிராளிகளின் சதிக்குள் சிக்காது எம் உள்விவகாரங்களை, வேறுபாடுகளைக் களையும் தகுதியும் அர்ப்பணிப்பும் எம்மிடம் உண்டு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்”

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று வெள்ளிக்கிழமை 26.04.2013 மாலை கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினக்கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரையில் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் ஆற்றிய தலைமையுரையின் முழு விவரம் வருமாறு:

தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் [Federal Party] நிறுவனரும் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவரும் ஆவர். இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கின்றோம். 'இலங்கைத் தமிழர்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றார்கள்?' என்பதே இன்றைய நினைவுரையின் தொனிப்பொருள் ஆகும்.

இலங்கைத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதாக தொனிப்பொருள் அமைந்துள்ளது. எதிர்காலம் தெளிவான சவாலை விடுப்பதாக இருக்கின்றது.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுநிலை நீதியரசர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் நினைவுரையை நிகழ்த்தவிருக்கின்றார். அவர் அசைக்கமுடியாத நேர்மையும் உறுதியும் கொண்டவர். அதன்காரணமாகத்தான் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அவரை நினைவுப்பேருரையை நிகழ்;த்த தெரிவுசெய்துள்ளார்கள்.

இலங்கைத்தமிழ் மக்களின் வரலாற்றை திரிபுபடுத்தி மீண்டும் எழுத திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை எதிர்த்து நிற்க தமிழ் மக்கள் உறுதிபூண்டுள்ளார்கள். மக்களின் உறுதியான நிலைப்பாட்டை அநீதியினால் தோற்கடிக்க முடியாது என்பது எமது திடமான நம்பிக்கையாகும்.

தந்தை செல்வநாயகத்தின் அரசியல் நடவடிக்கையின் அத்திவாரமான சிறப்பம்சங்களை இங்கு நான் சொல்லவிரும்புகின்றேன்.

1. அறவழி [அஹிம்சை].

அறவழி என்ற விடயத்தில் வளைந்து கொடுக்காத உறுதி படைத்தவராக அவர் விளங்கினார். இதனை அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 1961ல் சத்தியாக்கிரகம் என்ற அடிப்படையில் சட்டமறுப்புப் போராட்டத்தினை அவர் தலைமை வகித்து நடத்தினார். அப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் பங்குபற்றினர். வடக்கு கிழக்கு முழுவதும் பல வாரங்களாக மாவட்ட அரசாங்க அதிபர் செயலகங்கள் மற்றும் கச்சேரிகள் ஆகியவற்றின் நிர்வாகம் முழுமையாக நிலைகுலைந்தது. அறவழி முறையை வெளிப்படுத்திய அடையாளமாக இது அமைந்தது. பல பத்தாண்டு காலம் நீடித்த அவரது தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்கள் திரும்பத் திரும்ப இனப்படுகொலைக்கு உள்ளாகினர். ஆனால் தமிழ் மக்கள் திருப்பி தாக்கவில்லை. இது செல்வநாயகத்தின் உறுதியாக அறவழிக் கொள்கையை ஏற்பதாக அமைந்து இருந்தது.

2. கொள்கையில் உறுதி கொண்ட அவர் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவரின் வார்த்தை அவரை கட்டுப்படுத்தியது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், அரசாங்கத்திலிருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியிலிருப்பினும் சரி இந்த உண்மையை ஏற்றுக்கொள்வர்.

3. பேச்சுவார்த்தையை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. பேச்சுவார்த்தையில் அவர் தளராமல் தொடர்ந்து முயற்சித்தார். பேச்சுவார்த்தை விடயத்தில் அவர் தெளிவாக நியாயமாக மற்றும் யதார்த்தபூர்வமாக செயற்பட்டார். இந்த உண்மையை அவர் எஸ்.டிபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவுடனும் டட்லி சேனநாயக்காவுடனும் செய்து கொண்ட உடன்படிக்கைகள் வெளிப்படுத்துகின்றன

4. எப்படியாயினும் அவர் தமிழ் மக்களின் அடிப்படை நலன்களை கைவிடவில்லை. தமிழ் மக்களின் அசையாத நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார்.

5. அவர் உண்மையாகவே ஒரு ஜனநாயகவாதி ஆவார். 1972ல் புதிய அரசமைப்பு உருவாகுவதற்கு முன்பு நியாயமான இணக்கப்பாடு ஒன்றைக்காண்பதற்கு அவர் முயற்சித்தார். இவ்வரசமைப்பு உருவானதன் பின்னர் அதனை அவர் நிராகரித்தார். அவ்வரசமைப்பு முக்கிய விடயங்கள் குறித்த சுதந்திர சட்ட நிலைப்பாடு மறுக்கப்பட்டதுடன் நாடு சுதந்திரம் பெற்ற போது வழங்கப்பட்ட ஆகக் குறைந்த பட்ச பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டு பெரும்பான்மை ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது. அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து 1972ம் ஆண்டு அரசமைப்பை நிராகரிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் நீடித்து வந்தது. கடைசியாக மக்கள் அவரின் கோரிக்கையை ஏற்று ஜனநாயகத்தீர்ப்பை வழங்கினர்.

6. 1972ல் அரசமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் அவர் தமிழ் மக்களின் இறைமையை மீளப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க நிர்ப்பந்தித்தது. எனினும் அவர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கைவிடவில்லை.

1977ம் ஆண்டு செல்வநாயகம் மறைந்த பின்னர் தான் ஆயுத மோதலும் வன்செயலும் ஆரம்பித்தன. 2009ல் ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலை தோன்றிற்று.

இலங்கை தமிழரசுக் கட்சியை பங்காளியாகக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமானதும் செயற்படுத்தப்படக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணப்பட வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.

2011ம் ஆண்டு ஜனவரியிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளது. ஒருமித்த பிரிபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணும் யோசனைகள் அடங்கிய திட்டத்தை எழுத்து மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அப்பேச்சுவார்த்தைகளின்போது சமர்ப்பித்தது. அந்த யோசனைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உட்பட பதவிக்கு வந்த அரசாங்கங்களிடமும் சமர்ப்பித்தவையேயாகும். அந்த யோசனைகளின் அடிப்படையிலே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தியது.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த யோசனைகளை ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் சம்மதம் தெரிவித்த அரசாங்கம் இன்று வரை கூறியபடி நடக்கவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் இடம்பெற்ற விடயங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிச் செல்லவில்லை. இவ்வுடன்பாட்டிலிருந்து அரசாங்கம்தான் விலகிச்சென்றுள்ளது.

2012 ஜனவரி மாதம் 17, 18, 19ம் திகதிகளில் நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுக்களில் அரசாங்கம் பங்குபற்றவில்லை. தேக்க நிலையை போக்க அரசாங்கம் சாதகமான முறையில் நடக்கவில்லை. தற்போதைய முட்டுக்கட்டை நிலைக்கு அரசாங்கம் மட்டுமே முழுப்பொறுப்பு ஆகும். அரசாங்கம் ஒரே குரலில் பேசாததே அரசாங்கத்தின் பெரும் முட்டுக்கட்டையாகும். ஆரசாங்கத்தின் பேரில் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் எல்லாரும் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.

தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது இழுபறியாக இருக்கின்றது. பிரதான காரணம் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையான அணுகுமுறை இன்மையே ஆகும். கசப்பான நீண்ட ஆயுத மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் அவ்வாறான கருத்தொற்றுமையை உருவாக்கக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை முன்னர் எப்போதும் உருவாக்க முடியாத சூழ்நிலை இருந்ததால் தான் இலங்கைப் பிரச்சினை அனைத்துலக மயப்படுத்தப்பட்டதற்கு பிரதான காரணமாகும். வெறுமனே எம்மேல் குற்றத்தை போடாமல் யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்மைக்காலமாக அரசாங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது பழியை போடும் முயற்சியில் ஈடுபடுவது உண்மைக்கு முரணானதாகும்.

பல்லின மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவதற்கு உண்மையான பங்களிப்பை செய்வதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு காணப்படுவதாக ஊடகங்கள் ஊகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் சில கபடத்தனமானவையாகும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் கொள்கை அடிப்படையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் எவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்.

எதிர்காலத்தில் சமத்துவம், சுயமரியாதை, கௌரவம் மற்றும் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு பங்காளிக்கட்சியும் அர்ப்பணித்துள்ளன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் ஓர் அரசியல் அமைப்பு ஆகும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை சேதப்படுத்த முயற்சிக்கும் எதிராளிகளின் சதிக்குள் சிக்காது எம் உள்விவகாரங்களை எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியவிதத்தில் வேறுபாடுகளைக் களையும் தகுதியும் அர்ப்பணிப்பும் எம்மிடம் உண்டு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130426108165

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"" 1977ம் ஆண்டு செல்வநாயகம் மறைந்த பின்னர் தான் ஆயுத மோதலும் வன்செயலும் ஆரம்பித்தன. 2009ல் ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலை தோன்றிற்று ""

அந்த நேரம் தலையாட்டி பொம்மையா இருந்தம் எண்டு சொல்லுறாரோ???????? :lol: :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.