Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவும் ரணிலும் – செய்தியும் செய்திப் பெறுமதியும்

Featured Replies

ஒரு செயல் அல்லது சம்பவம் இயற்கையாக நடந்தாலும் செயற்கையாக நடத்தப்படாலும் அதை பதிவு செய்து மீள்நிகழ்த்தலுக்குள்ளாக்கி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே ஊடகங்களின் பணியாகும்;.இது பிரபலமானவர்களின் பேச்சுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் பொருந்தும்.’

ஒரு செயலோ அல்லது சம்பவமோ ஒரு இடத்தில் நடந்தால் அல்லது நடத்தப்பட்டால்,அல்லது பிரபலமான ஒருவர் ஒரு இடத்தில் உரையாற்றினால் அதை ஊடகங்கள் மீள் நிகழ்த்தலுக்கு உள்ளாக்கவில்லை என்றால் அந்தச் செயலும் சம்பவமும் உரையும் பற்றிய தகவல் அது நடந்த அல்லது நிகழ்த்தப்பட்ட இடத்துடன் அல்லது வட்டாரத்துடன் நின்றுவிடும்.

இந்த மீள்நிகழ்த்தல் என்பது கருத்தியல் சார்ந்தது.கருத்தியல் என்கிறபோது ஒரு சம்பவத்தின் அல்லது செயலின் அல்லது ஒரு உரையின் செய்தி பெறுமதியில் இருந்து அது கட்டமைக்கப்படுகிறது.

பொதுவாக இன்றைய நவீன ஊடக கருத்தியல் என்பது 01)நேர்கோட்டு முறை.02)சமாந்தரமுறை 03)ஊடறுக்கும்முறை,04)சமூகப்பிரதிபலிப்பு முறை ஆகிய நான்கு வடிவங்களில் கட்டமைக்கப்படுகிறது.ஒரு ஊடகம் அல்லது ஊடகவியலாளர் இந்த நான்கு ஊடக கருத்தியல் வெளிப்பாட்டு முறைகளில் எந்த முறையை பின்பற்றுகிறது-பின்பற்றுகிறார் என்பதை வைத்து அந்த ஊடகத்தினதும் ஊடகவியலாளரினதும் அரசியல் மற்றும் கருத்தியில் தளம் என்ன என்பதை சுலபமாக இனங்கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக கடந்த வியாழக்கிழமை(25.04.2013) இலங்கை ஊடகங்களிலே இரண்டு செய்திகள் வெளியாகியிருந்தன. அதை பல புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களும் மிள்நிகழ்த்தலுக்கு அல்லது மீள்பதிவுக்குள்ளாக்கியிருந்தன.

ஓன்று சிறீலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா குமாரணத்துங்கா நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது ஆற்றிய உரை.

மற்றது யாழ்ப்பாணத்துக்கு சென்ற சிறீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கா அங்குள்ள உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கு செல்லமுற்பட்ட போது படையினர் அவரை திருப்பிஅனுப்பியது தொடர்பானது.

கொழும்பில் இருந்து வெளிவரும் மிக பிரபலமான ஊடகமொன்றில் இந்த இரண்டு செய்திகளும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

0000

01)மகா சிங்கள பௌத்தர்கள் என கூறும் சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள்: சந்திரிகா

p1-index.jpg?w=645இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை. அவர்கள் வேறு நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவே போரிட்டனர்.

மன்னர்கள் எதிரிகள் வரும் போது தாக்குதல்களை நடத்தினார்களே தவிர இனவாதத்தில் போதை ஏறி நாட்டில் உள்ள ஏனைய இனங்களையும் மத தலங்களை தாக்கவில்லை. இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல மாதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவதுடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.

எனினும் தற்போது ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு. இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் பாதிப்பு மிகவும் பாரியளவானது. ஏற்கனவே பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போல் நாட்டு மக்கள் என்ற வகையில் உரிமைகளும், கடமைகளும் உள்ளன. பௌத்தர்கள் என்ற வகையில் நாம் அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

00000

02)ரணில் உள்ளிட்ட குழுவினரை படையினர் திருப்பியனுப்பி வைப்பு

40979296_ranil203ap.jpg?w=645யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலையப் பகுதியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தப் பகுதிகளை பொதுமக்களோ அல்லது கட்சிகளின் பிரதிநிதிகளோ பார்வையிட முடியாதென்றும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டோர் தவிர்ந்த எவரும் அங்கு செல்ல முடியாது என்றும் கூறியே படையினர் இவர்களை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

0000

நேர் கோட்டு முறையில் இந்த செய்திகளை எழுதும் ஊடகவியலாளர்களும் அவற்றை வெளியிடும் ஊடகங்களும் சந்திரிகா ஒரு புத்தர் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தனது கருத்தை சொன்னார்.அது அப்படியே பதிவு செய்யப்படவேண்டும்.அதே போல ரணிலை உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்த விடயமும் செய்தியாக்கப்படவேண்டும்.அதேநேரம் செய்திப் பெறுமதி என்ற வகையிலே சந்திரிகா ஆற்றியது ஒரு உரை.அந்த உரையை அவர் ஆற்றிய நிகழ்வு பழையது.ஆனால் ரணில் விக்கரமசிங்கா தடுக்கப்பட்டது ஒரு சம்பவம்.அதுவும் புதிதாக நடந்தது அதனால் அது செய்திப் பெறுமதி மிக்கது.அதனால் அது முக்கிய தலைப்புச் செய்தியாகவும் முதன்மை செய்தியாகவும் போடப்பட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

சமாந்தர முறையில் இந்தச் செய்தியை எழுதுபவர்கள் சந்திரிகாவின் செய்தியில் சந்திரிகா எதிர் மகாசிங்கள பௌத்தர்கள் என்ற இரண்டு தரப்பும் ரணிலின் செய்தியில் ரணில் எதிர் படையினர் என்ற இரண்டு தரப்பும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.இரண்டு செய்திகளிலுமுள்ள இரண்டு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்வது முக்கிமானது.செய்திப் பெறுமதி என்று பார்த்தால் இரண்டு தரப்புமே சிங்கள பௌத்த அதிகார வர்க்கத்தைச் சோந்தவர்கள்.ஒருவரை முக்கியப்படுத்தி மற்றவரை முக்கியப்படுத்தாவிட்டால் முக்கியப்படுத்தப்படாதவர் தரப்பு ஆதரவை இழக்க நேரும் அதனால் இரண்டு தரப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைப்பார்கள்

ஊடறுக்கும் முறையில் இந்தச் செய்திகளை எழுதுபவர் இந்த நான்கு தரப்பில் ஒரு தரப்புக்கான ஆதரவு நிலையை அதாவது சார்பு நிலையை முதலிலேயே எடுத்திருப்பார்.உதாரணமாக சந்திரிகாவின் செய்தியில் சந்திரிகா ஆதரவு நிலையில் செய்தி எழுதபவர் சந்திரிகாவின் பேச்சு அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மகா சிங்கள தரப்பு என்று இரண்டு தரப்பு கருத்துக்களையும் சமாந்தரமான முறையில் சொல்லிக்கொண்டு வந்து முடிவில் மாகா சிங்கள பெத்தர்களின் செயற்பாடு நாட்டில் மீண்டும் பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இனக்கலவரங்களை தோற்றுவித்துவிடும்.என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு தீர்ப்பை சொல்லி சந்திரிகா சொல்வது சரி மகா சிங்கள பௌத்தர்கள் பிழையானவர்கள் என்று எழுதுவார்.

அதே நேரம் எதிர்மறையாக மகா சிங்கள பௌத்த சார்பு நிலை எடுத்திருந்தால் தெற்காசியாவிலே உயரமான புத்தர் நிலை சிறீலங்காவில் அமைக்கப்பட்டதையிட்ட பதிவு அதை சந்திரிகா திறந்து வைத்த ஆற்றிய உரை என்பவற்றை சொல்லி சந்திரிகாவின் உரைக்கு மகா சிங்கள பௌத்த அமைப்பினர் கூறிய மறுப்புயும் கூறிவிட்டு சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா கிறஸ்தவ பாரம்பரித்தில் இருந்து வந்ததால் அவருக்கு சிங்கள பௌத்தர்களின் உண்மையான வரலாறு தெரியவில்லை என்கின்ற மாதிரி ஒரு தீர்ப்பை சொல்லி முடிப்பார்கள்.

இந்த முறை ஒரு திரைப்படத்தில் கதாநாயகனையும் வில்லனையும் சமாந்தரமாக காட்டி வந்து கடைசி கிளைமாக்சில் கதாநாயகன் வில்லனை தோற்கடித்து வெற்றிபெறுவதாக காட்டுவதற்கு ஒப்பானது .செய்தி பெறுமதி என்று பார்த்தாலும் செய்தியை வெளியிடும் ஊடக நிறுவனம் யாருக்கு சார்பாக இருக்கிறதோ அந்த தரப்புக்கு இந்த முறையின் கீழ் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அடுத்து ஈழத்தமிழர் தரப்பிலிருந்து சமூக பிரபலிப்பு முறையின் கீழ் இந்த செய்தியை எழுதுபவர்களுக்கும் அந்த முறையை பின்பற்றும் ஊடகங்களுக்கும் இந்த இரண்டு செய்தியிலும் சந்திரிகா எதிர் சிங்கள மகா பௌத்தர்கள் ரணில் எதிர் சிறீலங்கா படையினர் என்ற நான்கு தரப்புக்கு அப்பால் இந்த நான்கு தரப்பாலும் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் அல்லது தமிழ் சமூகம் என்ற ஐந்தாவது தரப்பு ஒன்று இருப்பது முக்கியமானதாகத் தோன்றும்;.

இந்த முறையின் கீழ் சந்திரிகாவின் செய்தியை எடுத்துக்கொண்டால்

சந்திரிகா புத்தர் சிலையை திறந்ததும் மகா சிங்கள பௌத்தர்களை கண்டித்ததும் பதிவுக்குரிய ஒரு தகவல் மட்டுமேயாகும்;. ஆனால் அவர் ஆற்றிய உரையில் உள்ள….

இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை.’

‘இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல் மதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவதுடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.’

‘நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை உள்ள உன்னதமான மனித பண்புகளை பேசும் மதம் வேறு எதுவும் இல்லை’….

இந்த மூன்று கூற்றுக்களும் மிக மிக முக்கியமானவை.

ஏனென்றால் ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் மகிந்தவைவிட சந்திரிகாவின் பங்கு முக்கியமானது.

அவர் பிரான்சின் புகழ் பெற்ற செர்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்.

பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைகலைக்கழகம் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கினாலும் பாரிஸ் செர்போன் பல்கலைக் கழகமே ஐரோப்பிய மற்றும் நவீன சிந்தனை மையத்தின் ஊற்றாக இருந்தது.ரூசோ வோல்த்தர் எமிலிசோலா முதலான 18 நூற்றாண்டு சிந்தனையாளர்கள் முதற்கொண்டு ஜோன் போல் சார்த்தர், தெரிதா, மிசேல் பூர்கோ முதலான நவீன சிந்தனையாளர்கள் வரை எராளமான தத்துவாதிகளும் கருத்தியல்புரட்சியாளர்களும் இந்த பல்கலைக்கழக வட்டத்தையே தளங்கொண்டே செயற்பட்டனர்.

இந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு ஐரோப்பிய சிந்தனை மையத்தில் நுழைந்த சந்திரிகா தனது தந்தையால் உள்வாங்கப்பட்டு தாயரால் வளர்த்தெடுக்கப்பட்டு தனக்கு கடத்தப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தை அங்கு நியாயப்படுத்தினார்.

அதாவது இலங்கை தீவில் சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்துக்கும் 2500 வருட கால வரலாறு இருக்கிறது என்றும் தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காலத்துக்கு காலம் தமிழகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் சிங்கள பௌத்தர்கள் அவர்களை வெறுக்காமல் அன்புகாட்டி அரவணைத்ததாகவும் தமிழர்களின் இராட்சியம் என்று சொல்லப்படுகின்ற யாழ்ப்பாண இராட்சியம் 14ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களால் சிங்கள பௌத்தர்களின் தாயகத்தில் நிறுவப்பட்டது என்றும் அதை கூட சிங்கள மக்கள் சகிப்பத்தன்மையுடன் எற்றுக்கொண்டு சாமாதானமாக வாழ்ந்ததாகவும் பரப்புரை செய்தார்.அதற்கு உதாணமாக கண்டிய மன்னரான விக்கிரம ராஜசிங்கன் தமிழகத்திலிருந்து வந்தவர் என்றும் அவரை தமது முன்னோர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி 2500 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த சமூகத்தை பிரிவினைவாதிகளான ஒரு சிறு பகுதி தமிழர்கள் பிளவு படுத்திவிட்டதாகவும் அவர்களது பிரிவினைவாத செயற்பாடுகள் தான் தெற்கில் இனவாத செயற்பாடுகள் தலை தூக்கவும் இனக்கலவரம் ஏற்படவும் காரணமாக இருந்ததென்றும் தமிழீழ விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக பார்க்கக்கூடாது என்றும் அது ஒரு பிரிவினைவாத -பயங்கரவாதப் போராட்டமென்றும் சித்தரித்தார்.

தமிழரான லக்ஷ்மன் கதிர்காமரை தனது அரசின் வெளிவிவகார அமைச்சர் என்ற முக்கியமான பொறுப்பில் நிமித்திருப்பதாக கூறி அவரை முன்னிறுத்தி தனது பேரினவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தினார்.

அவரது இந்த முயற்சி ஐரோப்பிய சிந்தனை மையத்தையும் தாண்டி அமெரிக்கா அவுஸ்ரேலிய கண்டங்களிலும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தந்தது.விளைவு தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் பிரிவினைவாத போராட்டமாக பார்க்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக மேற்குலகில் தடை செய்யப்பட்டது.

சந்திரிகாவின் பேச்சிலுள்ள முதலாவது கூற்று அவர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையை ஒத்துக்கொள்வதை காட்டுகிறது.அதாவது இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை என்பது சிங்கள பௌத்த பேரினவாதிகள் மூடிமறைத்த ஒரு வரலாற்று உண்மை. ஏனெனில் அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆண்ட மன்னர்கள் பௌத்தர்களும் பௌத்தர்கள் அல்லாதவர்களுமேயன்றி சிங்களவர்கள் அல்ல.சிங்கள இனத்தின் தோற்றமே கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்பிருந்துதான் ஆரம்பிக்கிறது.

‘இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல் மதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.’ இந்தக் கூற்றின் மூலம் இலங்கைத் தீவில் தமிழீழம்(தமிழர்களுக்கான அரசுகள்) என்ற நாடு இருந்ததை அவர் ஒப்புக்கொள்கிறார்.தமிழர்கள் இறைமையுள்ள சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என்ற நாட்டை பிரிக்க முயலும் பிரிவினைவாதிகள் என்று தான் அதிகாரத்தில் இருந்த போது சொன்னதை இப்போது மறுதலிக்கிறார்.

‘நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை உள்ள உன்னதமான மனித பண்புகளை பேசும் மதம் வேறு எதுவும் இல்லை’..என்று கூறும் அவரது ஆட்சிக்காலத்தில் நவாலித் தேவாலயத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி 147 அப்பாவி பொதுமக்கள் (குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டார்கள்.நாகர்கோவில் மகாவித்தியாலய படுகொலை கிளாலிப்படுகொலை சுதந்திர புரம் படுகொலை வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் படுகொலை என்று பல்வேறு படுகொலைகள் தாக்குதல்கள் மற்றும் இன அழிப்புகள் எல்லாம் பௌத்த மதத்தின் உன்னதமான மாண்பை கற்றறிந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் நடத்தப்பட்டன.

எந்த சர்வதேச அரங்கிலே செர்போன் பல்கலை கழகத்தில் கல்வி கற்ற சமாதான தேவதை என்று போர்வையை போற்றிக் கொண்டு ஈழத்தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தை பிரிவினை வாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் சந்திரிகா அம்மையார் முத்திரை குத்தினாரோ இன்று அவரே அதை கட்டுடைத்து இந்த உலகம் தமிழர்களுடைய போராட்டத்தை பார்த்த பார்வை தவறு என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகளை நமக்கு தந்திருக்கிறார்.சமூக பிரதிபலிப்பு முறையிலே இதை செய்தியாக்கும் ஒரு ஊடகவியலாளனுக்கு இது தான் முதன்மையான விடயமாகத் தெரியும்.

அடுத்து ரணில் விக்கிரமசிங்கா உயர் பாதுகாப்பு வலையத்துக்கு சென்ற போது திருப்பி அனுப்பப்பட்ட விடயம் சமூகப்பிரதிபலிப்பு முறையை தவிர்ந்த மற்ற முறைகளில் செய்தி எழுதுவர்களுக்கு பரபரப்புச் செய்தியாகவும் முக்கியமான செய்தியாகவும் இருக்கும்.ஆனால் சமூக பிரதி பலிப்பு முறையின் கிழ் இதை செய்தியாக்கும் ஒரு ஊடகவியலாளனுக்கு இது ஒரு சாதாரன பதிவுக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் தலைமை அமைச்சராக இருந்தவர்.தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்பவர் நாட்டின் முக்கிய கட்சியான ஐக்கிய தேசியக்கட்சின் தலைவராகவும் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் -இருப்பவர்.

அவருக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்ற இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அனுதியன்றி யாரும் செல்ல முடியாதென்ற உண்மை தெரியாது என்று சொன்றால்;;; அது ‘கேட்கிறவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டும்‘ என்று சொல்வதற்கு ஒப்பானது.

ரணில் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலையத்துக்கு செல்வதாக இருந்திருந்தால் முன்கூட்டியே சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் அல்லது வட பிராந்தியத்துக்கான சிறீலங்கா படை தலையகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.அவர்கள் அனுமதியளிக்க மறுத்தால் அதற்காக போராடியிருக்க வேண்டும்.நான் மக்களையும் ஊடகவியலாளர்களையும் திரட்டிக்கொண்டு அங்கு செல்லப்போகிறென் என்று அறிவித்துவிட்டு அங்கு சென்றிருக்க வேண்டும்.அப்படி அங்கு செல்கின்ற போது அங்குள்ள படையினர் அதை தடுக்க முயன்றால் அந்தத்தடையை மீறி அங்கு செல்ல முயன்றிருக்க வேண்டும். அவர்கள் அவரை கைது செய்யும் நிலை உருவாகியிருக்க வேண்டும். அது தான் அந்த பிரதேச மக்கள் மீது அக்கறை வைத்து செய்யப்பட்ட போராட்டமாக இருக்கும்; அதற்கு செய்திப் பெறுமதியும் முக்கியத்துவமும் கிடைத்திருக்கும்.சர்வதேச அளவிலே இந்த உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

அதை விடுத்து இவர்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு சென்றார்களாம். அங்கிருந்த படையினர் அனுமதியின்றி உள்ளே செல்ல முடியாதென்று கூறி இவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.இராணுவ நிர்வாகத்தில் இது ஒரு சாதாரண நடை முறை. இதிலே எங்கே செய்திப் பெறுமதி இருக்கிறது.உண்மையில் இது ரணில் போட்ட ஒரு அரசியல் நாடகம்.அவரது ஆட்சியிலும் பலாலி விமான படைத்தின் பாதுகாப்புக்கு என்று கூறி நில அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

அடிப்படையில் சந்திரிகாவும் ரணிலும் பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களேயாகும்.

25.04.2013 அன்று இந்த இரண்டு செய்தியும் வந்த போது சமூக பிரதிபலிப்பு முறையின் கீழ் அவற்றை ஒரு ஊடகத்துக்கு செய்தியாக்கிய நான் சந்திரிகாவின் செய்தியை முதன்மை படுத்தி நேரம் மற்றும் இடப்பற்றாக்குறை கருதி முக்கியமற்ற ரணிலில் செய்தியை சேர்க்காமல் விட்டுவிட்டேன்.

சமூக பிரதிபலிப்பு முறை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடிய ‘சுப்பிரமணிம் சுவாமிகள்’ சிலர் ரணிலின் செய்தி அல்லவா இன்று முக்கியமான செய்தி சந்;திரிகாவின் செய்தியில் என்ன இருக்கிறது அது பழைய செய்தியல்லவா? இவருக்கு செய்தி எழுதத் தெரியவில்லை என்று பொங்கி எழுந்துவிட்டார்கள்

இந்த சுப்பிரமணியம் சுவாமிகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிற தேவையும் அவசியமும் எனக்கு இல்லை என்றாலும் இந்த புலம் பெயர்ந்த ஊடக தளத்தில் இது சார்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோற்றியதாலேயே இந்த பதிவை எழுதுகிறேன்.

நாங்கள் எங்களது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் தமிழ் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இருந்தன.அந்த ஊடகங்கள் பயத்தின் காரணமாகவே நிர்வாகிகளின் அரசியல் சார்பு காரணமாகவோ எங்களது செய்திகளை பிரசுரிப்பதில்லை.சர்வதேச ஊடகங்கள் எங்களை கண்டுகொள்வதேயில்லை. அப்படி எங்களைப் பற்றி எழுதுகின்ற ஊடகங்களும் நாங்கள்ஒன்று சொன்னால் அதை எதிர்மறையாக திரித்து எங்களுக்கு எதிராகவே எழுதுவார்கள்.80களில் நாங்கள் எங்களுக்கான ஊடகங்களை தொடங்;கும் வரை இந்த நிலைமை தான் நீடித்தது.

இன்று இணையத்தின் வருகையால் ஊடகங்களும் வகை தொகையின்றி பெருகிவிட்ட நிலையில் கருத்தியல் ரீதியில் தமிழ் ஊடக கருத்தியில் ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்றுவரை நாங்கள் எங்களது ஊடகங்களை குப்பைகளால் தான் நிறைக்கிறோம்.பக்கத்தை நிரப்ப நேரத்தை நிரப்ப வெறும் குப்பை கூடைகளாகத்தான் நாங்கள் எங்கள் ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

முள்ளிவாய்க்கல் பேரவலத்துக்கு பின் எமது இனத்தின் தேவை என்ன? அதற்கு நாங்கள் ஊடகப்பரப்பில் என்ன செய்யலாம் ? எதை முதன்மைப்படுத்த வேண்டும்? அவற்றை எப்படி எந்த வடிவத்தில் முதன்மைப்படுத்த வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்? ஏன் அவற்றை தவிர்க்க வேண்டும்?இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட வேண்டி இருக்கின்றன.ஆனால் இவற்றை எழுப்பவதற்கு யாரும் தயார் இல்லை.

மக்கள் விரும்பகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு

சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் குப்பைகளை ஊடகப்பரப்பில் கொட்டி நேரத்தை வீணடிப்பதை விட காலத்திற்கும் சமூகத்திற்கும் தேவையானதை மக்கள் விரும்புகின்ற விதத்தில் கொடுப்பது தான் சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளார்களினதும் ஊடகங்களினதும் கடமையாகும்.இதை எத்தனை பேர் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?

http://sivasinnapodi.wordpress.com/2013/05/01/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/

 

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.