Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! இரட்டைக்குடியுரிமை வழங்கு! மே தினப் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02--01.jpg

 

 

 

02--02.jpg

 

 

02--03.jpg

“சிறப்பு அகதி  முகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப்படிருக்கும் ஈழத்தமிழ் அகதிகலை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக்குடியுரிமை வழங்கு ! ” என்றமுழக்கங்களை முன் வைத்து  மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி , பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பேருந்து ரயில் முதல் தமிழகத்தின் தெருக்கள், ஆலைவாயிகள் கல்லூரிகள் என எங்கும் பிரச்சாரம் நடத்தின.

 

ஒரு மாதம் நடந்த பிரச்சாரத்தின் முடிவாக சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து பேரணியும் டிஜிபி அலுவலக முற்றுகையும் அறிவிக்கப்பட்டது.  தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைகளை போராடித்தான் பெறமுடியும் என்று நிரூபித்த நாள் மே 1, அன்று ஈழத்தமிழ் அகதிகளின் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்திற்கு அலையாய் திரண்டார்கள் தொழிலாளிகள். விவசாயிகள், மாணவர்கள், மற்றும் பெண்கள் உழைக்கும் வர்க்கமாய். பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி  ஈழத்தமிழருக்கு ஆதரவான மாணவர் எழுச்சியை கூறும் வகையிலும் அகதி முகாம்களை உருவாக்கிய ஜெயாவின் பாசிச வக்கிரத்தையும் அம்பலப்படுத்தும் வகையிலும் இருந்தது.

 

அகதிகள் என்றாலே அவர்களை கேவலமாக நடத்துவது, போலீசின் கண்காணிப்பு , பாலியல் துன்புறுத்தல்கள்  என்பது தொடர்வதும் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி ராணுவத்தை விட தமிழக போலீசு கொடுமையானது என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருச்சி ஓவியா பேசினார். ஈழத்தமிழ் அகதிகளின் அவலமான வாழ்க்கையையும் அவர்கள் இந்த முகாமிலிருந்து தினம் சாவதற்கு பதிலாக ஆபத்தானது என்று தெரிந்தும் ஆஸ்திரேலியாவிற்கு கடல்பயணம் மேற்கொள்வதையும்  நடுக்கடலில் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் கொடுமைகளையும்  பெண்கள் விடுதலை முன்னணி அஜிதா விளக்கினார்.

 

காலை 10 மணிக்குத் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களுடன் தொடங்கிய பேரணி கம்பீரமாக இந்திய அரசை அமபலப்படுத்தும் முழக்கங்களுடன் வழி நெடுக மக்களின் ஆதரவுடன் சென்றது. வழியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

 

மெமோரியல் ஹாலுக்கு மேல் பேரணி செல்வதற்கு போலீசு அனுமதி மறுத்தது. அந்த இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில செயலர், மருதையன், ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களை சிதைத்து அவர்களை போரின் மூலமாக நிர்மூலமாக்கிய இந்திய அரசுதான் அவர்களை சட்ட விரோதக்குடியேறிகளாக வைத்து தினம் தினம் பொய் வழக்குகள், கண்காணிப்பு, கியூ பிரிவின் கொடும் சித்திரவதை என்று வதைக்கிறது என்றும் ராஜபக்ஷேவின் முள்வேலியும் தமிழகத்தின் வதை முகாமும் ஒன்றுதான் , இதைப்பற்றி பேசாமல் தனி ஈழம் கிடைக்கும் என்று வாய்ச்சவடால் விடும் தமிழின வாதிகள் ஜெயாவுக்கு சேவகம் செய்வதையும் என்று எடுத்துக்காட்டியும் ஈழ அகதிகளை முகாமிலிருந்து விடுதலை செய்யும் வரை இப்போராட்டம் முடியாது, தமிழக மாணவர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு சென்று மீண்டும் எழுச்சியை உருவாக்குவோம் என்று கூறினார்.

 

தடையை மீறி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 5 மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அடைக்கப்பட்ட மண்டபங்களோ அகதி முகாம்களை விட கேவலமாக கழிப்பறை , காற்று இன்றி இருந்து. கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்ணீர், உணவு தர மறுத்து “அகதிகளுக்காக போராடினால் உனக்கு இந்த நிலைதான்” என்றது ஜெயா போலீசு. தோழர்கள் மண்டபத்திலிருந்து வெளியே வந்து பழைய வண்ணாரப்பேட்டை, டி.எச் சாலையில் மறியல் செய்த பிறகே தேவையான வசதிகள் செய்ய ஆரம்பித்தனர். குடி நீருக்காகவே போராட்டம் செய்ய வேண்டிய இந்த நாட்டில் ஈழத்தமிழரின் உரிமையை போராடாமல் பெறமுடியாது என்பதை அறிவிக்கும் விதமாகவும் மீண்டும் மாணவர் போராட்டத்தினை தொடங்க வேண்டிய அவசியத்தையும் இப்போராட்டம் உணர்த்தியது என்றனர் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98432

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.