Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா

Featured Replies

வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா
1912147b-659d-4e51-a9b0-03474c3a84591.jp

 

'வடமாகாண சபைத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் அரசு களமிறக்குவதானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்'

இவ்வாறு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்

கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் தொழிற்சங்கப் பணிமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசு தனது குறைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது. ஆனால், இந்த நாட்டின் நாசகாரச் செயல்களுக்கு நாம் காரணமல்ல.

தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் இல்லை. ஆனால் எண்ணெய்க் கொள்கலனுடன் கப்பல் ஒன்று வருகிறது என அரசு தெரிவித்தாலும் இதுவரையிலும் துறைமுகத்திற்கு கப்பல் வரவில்லை.

இதுவரையிலும் அரசு எண்ணெய்க்கான கோரல் விடுக்காதுள்ளமையே இதற்கான காரணமாகும். இதனால் தற்போது பல ஆயிரம்கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, பொதுநலவாய மாநாட்டிற்காக 'ரோல்ஸ் றொயிஸ்' கார்களை அரசு இறக்குமதி செய்யவுள்ளது. பலகோடி ரூபா பெறுமதியான கார்களை இறக்குமதி செய்வதன் மூலம் எந்தவித இலாபத்தையும் அரசு பெற்றுக்கொள்ளப் போவதில்லை. மேலும், இதனால் ஏற்படும் நஷ்டமும் மக்களையே மேலும் பாதிப்படையச் செய்யும்.

வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளான தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இச்செயற்பாடு மிகவும் மோசமான ஒன்றாகும்.

30 வருட காலமாக நாட்டையே உலுக்கிவைத்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த சரத் பொன்சேகாவை தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி இரண்டு வருடங்கள் சிறையில் தள்ளியது இந்த அரசு. ஆனால், யுத்தத்தில் ஈடுபட்ட அவர்களிருவரையும் தேர்தலில் இறக்கி ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகிறது அரசு. இதனை எதிர்க்க முற்பட்டால் எம்மையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துவிடுகிறது.

ஆனால் மக்கள் இப்போது முன்னர் போலல்லாது தெளிவாகிவிட்டார்கள். எதிர்வரும் 21 ஆம் திகதி எம்மால் நடத்தப்படவிருக்கும் பாரிய போராட்டத்தில் மக்களைக் கலந்துகொள்ள நாம் அழைக்கின்றோம். நாம் நிம்மதியாக வாழும் காலம் வரும்வரை தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டேயிருப்போம்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ரட்ணாயக்கா தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=1912147b-659d-4e51-a9b0-03474c3a8459

  • கருத்துக்கள உறவுகள்

அரசு கருணாவையும் பிள்ளையானையும் இணைத்த போது ரவி கருணாநாயக்க எங்கே போயிருந்தார்? அப்போ இப்படி ஒரு அறிக்கை விடவில்லை. ஏன்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.