Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவீனத்திற்கான பரிசு

Featured Replies

பலவீனத்திற்கான பரிசு

-அருஸ் (வேல்ஸ்)-

மத்திய கிழக்கில் நடைபெறும் சமர்தான் தற்போது உலகின் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் செய்திகள். ஆடி 12 ஆம் நாள் ஹிஸ்புல்லா போராளிகளால்; லெபனானின் எல்லையில் இருந்து 2 கீ.மீ தொலைவில் உள்ள இஸ்ரேலின் எல்லைப்புற நகரமான ளூவரடய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட இரண்டு வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

18 வருடங்கள் லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல் 2000 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர் நிகழ்ந்த முக்கிய சம்பவம் இது. சீற்றமடைந்த இஸ்ரேல், லெபனான் மீது விமான, கடல், தரை தாக்குதல்களை அதே நாளில் ஆரம்பித்தது, பேரழிவுகள் இன்றுவரை தொடர்கின்றன.

யார் இந்த ஹிஸ்புல்லா? 1982 இல் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களுக்கும் லெபனான் உதவுவதாக அதன்மீது ழுpநசயவழைn Pநயஉந கழச புயடடடைநந என்னும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டிருந்தது.

கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களை மேற்கொண்டு நாட்டை சின்னாபின்னமாக்கியதுடன் அங்கு நிலைகொண்டிருந்த சிரியா நாட்டு படைகளுடனான கடும் மோதலின் பின்;னர் லெபனானை ஆக்கிரமித்து கொண்டது.

ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகளை போராடி வெளியேற்றவென சியா (ளூiவைந) பிரிவு முஸ்லிம் மக்களினால் உருவாக்கப்பட்ட ஆயுதப்பிரிவு தான் ஹிஸ்புல்லா (ர்ணைடியடடயா), கடவுளின் குழு என்பது இதன் பொருள். இந்த அமைப்பு சிரியா, ஈரான் நாடுகளின் ஆதரவுடன் தற்போது தெற்கு லெபனானை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

தென் லெபனான் பகுதியில் மக்களிடம் வலிமையான ஆதரவைக்கொண்டுள்ளதுடன் 14 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆளும் அரசில் கொண்டுள்ளது.

வெளியில் இருந்து பார்க்கும் போது லெபனான் என்ற ஒரு நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது போலவே தெரியும் ஆனால் லெபனான் ஒரு நாட்டிற்குரிய முழுத்தகுதியுமற்ற தேசம். அதிலும் குறிப்பாக அதன் பாதுகாப்பை பொறுத்தவரை ஒரு வலுவற்ற தரைப்படை மட்டுமே உள்ளது. விமானப்படை இல்லை.

ஆநனவைநசசயநெயn ளுநய இலிருந்தும் கடற்படை கிடையாது. கரையோர பாதுகாப்புப் படை தான் உண்டு. அதன் கடல் பகுதி முழுவதும் இஸ்ரேலிய கடற்படையின் ஆளுமையில் தான் உள்ளது. மேலும் லெபனான் தன்னை பலப்படுத்திக்கொள்ள இஸ்ரேல் அனுமதித்ததும் கிடையாது.

பயணிகள் விமான போக்குவரத்துக்கு என லெபனானிடம் 5 போக்குவரத்து விமானங்கள் மட்டுமே இருந்தன. அதனை சண்டை தொடங்கியதும் ஜோர்தான் நாட்டிடம் பாதுகாத்து தரும்படி ஒப்படைத்துள்ளது.

எனவே பலவீனமானதும் தன்னை ஒரு வல்லமை மிக்க நாடாக உயர்த்த தவறிய லெபனான் கையை கட்டிக்கொண்டு அகோர அடி வாங்குவதையும், முழுக்க முழுக்க அமெரிக்காவின் உயர்தொழில் நுட்ப ஆயுதங்களைக்கொண்ட ஒரு அங்கீகரிக்கப்படாத அணுசக்தி வலுவுள்ளதும் குட்டிப்பிராந்திய வல்லரசுமான இஸ்ரேல் துள்ளிக்குதித்து தாக்குவதும் ஆச்சரியம் தரும் விடயமல்ல.

ஹிஸ்புல்லாவின் பலத்தை இஸ்ரேலுடன் ஒப்பிடுவோமாயின் மலைக்கும் மடுவிற்குமான ஒப்பீடாகும். 3,000-5,000 போராளிகளை கொண்டுள்ள இந்த அமைப்புக்கு இரண்டாம் உலகப்போரில் சோவியத்தினால் வடிவமைக்கப்பட்ட கதுஸ்சா பல்குழல் ஏவுகணை செலுத்திகளின் மறுசீரமைக்கப்பட்ட வடிவமான 22-35 கீ.மீ தூர வீச்சுடைய ஏவுகணைகள் (122அஅ முயவலரளாய சழஉமநவள) தான் முக்கிய ஆயுதபலம்.

எனினும் குறைந்த அளவில் ஈரான், சிரியா நாட்டுக்கப்பல் எதிர்ப்பு, தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுடன் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் கொண்டுள்ளது. ரடார் மூலம் வழிநடத்தப்படும் 60 கீ.மீ தூரவீச்சுள்ள ஈரான் நாட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (ஊ-802) மூலமே 14 ஆம் நாள் ஆநனவைநசசயநெயn கடலில் வைத்து இஸ்ரேலின் கடற்படையின் தாக்குதல் கப்பல் தாக்கப்பட்டது.

கடும் சேதமடைந்த இக்கப்பல் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் 4 கடற்படையினரும் பலியானார்கள். இதன் பின்னர் கடற்படை தாக்குதல் குறைந்து போயுள்ளதும் குறிப்பிடதக்கது.

ஆனால் ஹிஸ்புல்லாவின் கணிப்பிட முடியாத பலமாக அதன் கெரில்லார் போர்முறையும், 2000 ஆண்டில் இஸ்ரேல் வெளியேறிய பின்னர் வடிவமைக்கப்பட்ட அதன் பாதுகாப்பு அரண்களையும், நிலத்தடி மறைவிடங்களையும் கொள்ளலாம்.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணை தாக்குதல்களை இப்பகுதிகளில் இருந்தே ஹிஸ்புல்லா மேற்கொண்டு வருகின்றது. இவை இஸ்ரேலின் வடபகுதி நகரங்களை தாக்குவதுடன் அதன் மூன்றாவது பெரிய நகரமான கய்பா (ர்யகைய) நகரமும் தப்பவில்லை.

போர் தொடங்கி இரு வாரங்களாகியும் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதல்கள் நின்றபாடில்லை, இன்றுவரை 1,500 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் Pயவசழைவ ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளாலும் தாழ்வாக பறக்கும் கதுஸ்சா ஏவுகணையை தடுக்க முடியவில்லை.

எனவே விமானத்தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாவை முறியடிக்க முடியாது என எண்ணிய இஸ்ரேல் தற்போது தனது தரைப்படைகளை களம் இறக்கியுள்ளது. அதாவது தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவை முற்றாக அழிப்பதன் மூலம் இஸ்ரேலை பாதுகாக்க முடியும் என்பது தான் இதன் நோக்கம்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானமான 1559 இன் பிரகாரம் லெபனானின் தென்பகுதியை லெபனான் இராணுவம் பொறுப்பேற்கவும் ஹிஸ்புல்லாவை நிராயுதபாணிகளாக்கவும் முயல்வதாக கூறுகின்றன.

ஆனால் சிரியா அமைச்சர் 'ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானமான 2338 இன் பிரகாரம் இஸ்ரேல் எல்லா ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் இருந்து வெளியேற வேண்டும்" எனக் கூறுகின்றார். இதில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் புழடயn ர்நiபாவள மலைப் பகுதியும் அடங்கும்.

ஹிஸ்புல்லா ஏன் எல்லை கடந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது? இரண்டு காரணிகள் தான் ஊகிக்கப்படுகின்றன. ஒன்று ஆறு வருடங்கள் தம்மை பலப்படுத்திய ஹிஸ்புல்லா இஸ்ரேலை வலிந்த சண்டைக்கு இழுத்து லெபனானில் தனது ஆதரவை பெருக்க முனைந்திருக்கலாம். அதற்காகவே இஸ்ரேலின் இராணுவ வீரர்களை கைது செய்து தனது போராளிகளை விடுவிக்க கோரியுள்ளது.

இரண்டாவது முழுக்க, முழுக்க ஈரானின் வழிநடத்தலில் இயங்கும் ஹிஸ்புல்லாவை வைத்து ஈரான் ஒரு வலிந்த போரை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஈரானின் அணுசக்தி தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் முற்றாக எதிர்க்கின்றன. ஏனைய அரபு நாடுகளுக்கும் ஐ.நாவிற்கும் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டு ஈரானை தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு தயாராகி வருகிறது அமெரிக்கா.

இதை நன்கு உணர்ந்த ஈரான் இஸ்ரேலை ஒரு வலிந்த தாக்குதலுக்கு இழுப்பதன் மூலம் அரபு நாடுகளின் ஆதரவையும் உலக ஆதரவையும் தன்பக்கம் திருப்ப முயன்றுள்ளது. அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

அதாவது இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் கொல்லப்படும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் சர்வதேசத்தையும் அரபு நாடுகளையும் மிகவும் பாதித்துள்ளது. இதுவரை நிகழ்ந்த குண்டுவீச்சில் 438 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் 200 பேர் குழந்தைகள் என தெரிவித்துள்ளார் லெபனான் அதிபர்.

ஆடி 26 ஆம் நாள் ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் மீது நடைபெற்ற குண்டுவீச்சும் கொல்லப்பட்ட 4 பணியாளர்களும் உலக மட்டத்தில் இஸ்ரேல் மீது கடும் எதிர்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அலுவலகத்திற்கு அண்மையில் குண்டுகள் வீழ்வதாக 6 தடவைகள் இஸ்ரேலுக்கு தெரியப்படுத்திய பின்னரும் லேசர் கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும் குறி தவறாத ஏவுகணை மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருப்புக்கள் கடத்தப்படுவதும் கைதிகள் பரிமாற்றப்படுவதும், இஸ்ரேல் லெபனானில் குண்டு தாக்குதல்கள் மூலம் ஹிஸ்புல்லா தலைவர்களை கொல்வதும் புதியன அல்ல. முன்பும் நடந்தவை தான். ஆனால் இம்முறை இஸ்ரேலையும் அமெரிக்காவையும் பொறுத்த வரை ஒரு பெரும் தாக்குதலை நடத்தி அரபு நாடுகளுக்கும், ஈரானுக்கும், ஹிஸ்புல்லாவிற்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாவை முற்றாக அழித்து விட வேண்டும் என்றும்; தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

பொது மக்களின் இழப்புக்களை பற்றி அவை கவலைப்படுவதாக தெரியவில்லை. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ';லெபனான் மக்களின் சாவைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை" என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளும், ஐ.நாவும் உடனடியான போர்நிறுத்தம் வேண்டும் என அறைகூவல் விடுத்தாலும். அமெரிக்காவும், அதன் கூட்டாளியான பிரிட்டனும் அதை மறுத்துள்ளார்கள்.

இவர்கள் நடத்தும் போர் எத்தகையது? மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுவதுடன், விமானத்தளம், துறைமுகம், பாலங்கள், எண்ணைக்குதங்கள், தொழிற்சாலைகள், ஊடக நிலையங்கள், நோயாளிகள் காவு வண்டிகள், வாகனங்கள், ஐ.நா. அலுவலகங்கள் எல்லாமே கண்மூடித்தனமாக அழிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு நாட்டின் கட்டமைப்பே முற்றாக சீரழிக்கப்படுகிறது. இன்று வரை லெபனான் மீது 4,500 தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட போருக்கு தான் ஆதரவு வழங்குகிறார்கள், அதாவது பொதுமக்களின் சாவில் தங்களின் வலிமையை நிரூபிக்க முனைகிறார்கள்.

எனவே உயிர், பொருளாதார அழிவுகள் விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை. தென் லெபனானில் களமிறங்கியுள்ள இஸ்ரேலியப் படைகளின் வெற்றி தோல்வியிலேயே இறுதிமுடிவு தங்கியுள்ளது அதாவது இன்னும் சில நாட்களில் ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்த முடியாவிட்டால் அல்லது இஸ்ரேல் அதிக இழப்புக்களை சந்தித்தால் ஒரு முடிவு எட்டப்படலாம்.

1982 இல் நிகழ்ந்ததைப் போல லெபனானின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்க இஸ்ரேல் விரும்பவில்லை அது இராணுவ அரசியல் நலன்களில் கடும் இழப்புக்களை ஏற்படுத்திவிடும் என்பது அதற்கு நன்கு தெரியும்.

1983 இல் பெய்ரூட்டில் நிகழ்ந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 241 அமெரிக்க விசேட படையினரும், 58 பிரான்ஸ் நாட்டு படையினரும் கொல்லப்பட்டதுடன் அமெரிக்கா தனது துருப்புக்களை லெபனானில் இருந்து விலக்கி இருந்தது. இஸ்ரேலும் 18 வருட ஆக்கிரமிப்பில் 1,000 இற்கு மேற்பட்ட படையினரை இழந்திருந்தது.

மேலும் இந்த போரினால் அதிகரித்து செல்லும் மசகு எண்ணை விலையும் போரை நீண்ட காலத்திற்கு அனுமதிக்க போவதில்லை.

போர் ஆரம்பித்த பின்னர் விலை அதிகரிப்பு ஒரு பீப்பாய்க்கு 78 தொடக்கம் 74 அமெரிக்க டொலர் வரை ஏறி இறங்கியுள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ஐ.நாவை பொறுத்தவரை எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு பார்வையாளராகவே உள்ளது. அதன் கோரிக்கைகளை உலகில் சிறந்த ஜனநாயக நாடுகள் என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவோ, பிரிட்டனோ மதிக்கவில்லை.

அதாவது ஒரு செயற்திறனற்ற நிலையிலேயே ஐ.நா. உள்ளது. ஏனைய சர்வதேச நாடுகளும் போர்நிறுத்தம் தொடர்பாக பேசுகின்றன.

ஆனால் அதற்கு அப்பால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மனித அவலங்களை கூட அவர்களால் நிறுத்த முடியவில்லை. 'உங்களை காப்பாற்ற யாருமே வரமாட்டார்கள்" என்பது தான் லெபனானுக்கான உலகின் ஒருவரி செய்தியாக கொள்ளமுடியும்.

அரசியல், இராணுவ, பொருளாதார வழிகளில் பலமாக இருந்தாலே எம்மை நாம் காப்பாற்ற முடிவதுடன்;, உதவிக்கு உலக நாடுகளும் தலைகாட்டும் என்பது தான் அன்றும் இன்றும் நாம் அறியும் செய்தி என்றால் அதில் தவறில்லை.

http://www.tamilnaatham.com/articles/2006/...ly/arush/29.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.