Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய தமிழர்களும், சாவக - ஹம்பேயர்களும்: சேரமான் (பாகம் - 1,2,3)

Featured Replies

இஸ்லாமிய தமிழர்களும், சாவக - ஹம்பேயர்களும்: சேரமான் (பாகம் - 1)

 

rizana1.jpgசவூதி அரேபியாவை தமது தாயகமாக விளித்துக் காலம் காலமாக இஸ்லாமிய தமிழர்களிடையே நயவஞ்சக அரசியல் புரிந்துவரும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தில் கரிபூசிய சம்பவமாக கடந்த வாரம் சவூதியில் நிகழ்ந்தேறிய ரிசானா என்ற இஸ்லாமிய தமிழ் யுவதியின் தலைதுண்டிப்பு சம்பவம் திகழ்கின்றது.

‘நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழ் மொழியில் பேசினாலும் சவூதி அரேபியாதான் எங்கள் தாயகம். எனவே நாங்கள் தமிழர்கள் அல்ல’: இதுதான் காலம்காலமாக சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு துணைநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டகம் செய்யும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைக்கும் வாதம்.
ஆனாலும் சவூதி அரேபியாவில் தமது ஆணிவேரைத் தேடித் தம்மைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளும் இந்த முஸ்லிம் தலைமைகளால், தமது தாயகம் என்று கூறப்படும் சவூதி மண்ணில் இஸ்லாமிய தமிழ்ப் பெண் ஒருவர் அவலமாக தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ரிசானாவின் தலைதுண்டிப்பு என்பது வெறுமனவே இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் கையாலாகாத்தனத்திற்கு மட்டும் சான்றுபகரவில்லை: கூடவே சவூதி அரேபியாவை தமது தாயகமாக விளிக்கும் முஸ்லிம் தலைமைகளின் மிதமிஞ்சிய முஸ்லிம் கற்பனைத் ‘தேசியவாதத்தையும்’ தகர்த்தெறிந்துள்ளது.

ரிசானா மீது 2005ஆம் ஆண்டு கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பொழுதும் சரி, அரபுச் சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்ட பொழுதும் சரி, இறுதியாக அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்த பொழுதும் சரி, அவரைத் தமது மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற அரபு வம்சாவழிப் பெண்ணாக எந்தவொரு அரபுக் குடிமகனும் கருதியதாகத் தெரியவில்லை.
உண்மையில் ஈழத்தீவில் வசிக்கும் முஸ்லிம்கள் யார்? இவர்கள் தமிழ்மொழி பேசும் அரபு வம்சாவழிகளா? அல்லது இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களா? இதற்கான பதில் ஒற்றை வார்த்தையில் கூறக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதற்கான பதிலை ஈழத்தீவிற்கும், இஸ்லாமிற்கும் இடையிலான வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதனூடாகப் பெற முடியும்.
இஸ்லாம் என்பது கி.பி. 610 ஆண்டில் அரபு மண்ணில் தோற்றம் பெற்ற ஒரு மதம். ஆனால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வணிகத் தொடர்பாடல்கள் இருந்துள்ளன. அராபியர்கள் மட்டுமன்றி, ஆபிரிக்கர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், சீனர்கள் என உலகின் பலதரப்பட்ட மக்களுடன் பல நூற்றாண்டுகளாக வணிகத் தொடர்புகளை தமிழர்கள் பேணி வந்துள்ளார்கள்.
பொதுவாக ஈழத்தீவின் வடமேற்கிலிருந்து வந்த வணிகர்களை யவனர்கள் என்றும், வடகிழக்கிலிருந்து வந்த வணிகர்களை சாவகர்கள் என்றும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் விளக்கின்றன. சங்க காலத்தில் பூம்பூகார், தொண்டி போன்ற துறைமுகங்கள் தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கியமை போன்று தமிழீழத்தில் மாந்தை, ஊர்காவற்துறை, மாதகல் போன்ற பகுதிகள் முக்கிய வெளிநாட்டு வணிகத் துறைமுகப் பகுதிகளாகத் திகழ்ந்தமைக்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அதிலும் அரபு தேசத்திலிருந்து வந்த குதிரைகளையே அதிக அளவில் தமது புரவிப் படைகளில் தமிழகத்து மன்னகர்களும், சரி ஈழத்தமிழ் மன்னர்களும் சரி விரும்பி பயன்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறாக அரபு தேசத்திற்கும், ஈழத்தீவிற்கும் இடையே நீண்ட வரலாற்றுப் பின்னணி இருந்தாலும்கூட, சங்க காலத்திலோ அன்றி சங்கம் மருவிய காலத்திலோ பெரும் தொகையில் ஈழத்தீவில் அராபியர்கள் குடியேறியதாக வரலாற்றுப் பதிவுகள் எவையும் இல்லை. ஆனாலும், இராசேந்திர சோழன் காலத்திற்குப் பின்னர் (ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர்) ஈழத்திற்கு வருகை தந்த அரபு வணிகர்கள் சிலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து பின்னர் அவர்களையும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஈழமண்ணிலேயே விட்டுச் சென்றதாக சில பதிவுகள் உள்ளன.

எனினும் இவ்வாறான சம்பவங்கள் பெருமளவில் இடம்பெறவில்லை. தவிர இவ்வாறு அரபு வணிகர்களுக்கும், ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் தமது தந்தையர் தேசத்தோடு தொடர்புகளைப் பேணியதாகப் பதிவுகள் இல்லை. மாறாக ஈழத்தில் வாழ்ந்த ஏனைய தமிழ்க் குடிகளோடு தமிழர்களாக ஒன்றித்தே தலைமுறை தலைமுறையாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

எனினும் கி.பி. 1311ஆம் ஆண்டு தமிழகத்தில் பாண்டி நாட்டுத் தலைநகர் மதுரையை டில்லியிலிருந்து வந்த மலீக் கபூரின் தலைமையிலான முகாலயப் படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சுந்தபாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெற்ற சகோதரச் சண்டையில் சுந்தபாண்டியனுக்கு உதவியாக வந்த மலீக் கபூரின் படை மதுரையைக் கைப்பற்றியதோடு மட்டும் நின்றுவிடாது அங்கு வசித்து வந்த சைவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றியது.

இதுவே தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றுவதற்கு காலாகியது. இதன் பின்னர் நடந்த மதமாற்றங்கள் - திருமணங்கள் போன்றவற்றின் விளைவாக தோற்றம் பெற்றதே இஸ்லாமிய தமிழ் சமூகமாகும். இவர்களின் வழித்தோன்றல்களே பின்னர் ஈழத்திலும் குடியேறினார்கள்.

இவர்கள் சாராம்சத்தில் தமிழர்கள். அதிலும் இஸ்லாமிய மார்க்கத்தை தமது சமயமாகத் தழுவிக் கொண்ட அல்லது தழுவுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழர்கள். இலங்கையின் முஸ்லிம் தலைமைகள் கூறுவது போன்று இவர்கள் அராபியர்களும் அல்ல. சவூதி அரேபியாவைத் தாயகமாகக் கொண்ட தமிழ்பேசும் முஸ்லிம்களும் அல்ல. ஆனாலும் அக்காலப் பகுதிகளில் தமிழர்களோடு தமிழர்களாகக் கலந்திருந்த அரபுக் கலப்பின இஸ்லாமியத் தமிழர்களோடு இவர்கள் கூடி வாழ்ந்தார்கள்.

தமிழகத்திலிருந்து நிகழ்ந்த இந்த இஸ்லாமியத் தமிழர்களின் வருகையோடு ஈழத்தீவில் மேலும் பல கட்டங்களாக இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இவர்களை சோனகர்கள் என்று குறிப்பிடுகின்றன. எனினும் பதினாறாம் நூற்றாண்டில் ஈழத்தீவில் கால்பதித்த போர்த்துக்கேயர்களும், ஸ்பானியர்களும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அராபியர்களையும், வட ஆபிரிக்கர்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘மூர்’ என்று சொற்பதத்தையே இஸ்லாமியத் தமிழர்களைக் குறிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

ஆனாலும் இவர்களை இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களாகவே அக்காலப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் கருதியிருந்தார்கள். இதற்கான சான்றாக பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்கூறில் (கி.பி.1736) மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை அமைகின்றது. அப்பொழுது ஈழத்தில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் அரபு தேசத்திலிருந்த வந்தோராக அதில் விளிக்கப்படவில்லை. மாறாக முகம்மதிய சமயத்தை தழுவிய சோனகத் தமிழர்களாகவே இவர்களை யாழ்ப்பாண வைபவமாலை விளிக்கின்றது. இதுபற்றிய விபரமான குறிப்புக்கள் நல்லூர் கோவில் வளாகத்திற்கான உரிமம் தொடர்பாக சைவத் தமிழர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பற்றிய பதிவில் உள்ளன.

அவை வருமாறு:
“அக்காலத்தில் சந்தச்சாய்பு என்பவனால் மகம்மது மார்க்கத்தவர்களாக்கப்பட்ட தமிழ் வமிசத்தவர்களான சில சோனகக் குடிகள் காயில் பட்டணம் முதலிய இடங்களிலிருந்து வந்து தென்மிருசுவில் என்னும் ஊரிலே குடியிருந்து, சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாவில் எனுமிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரம் பண்ணிக் கொண்டு, தாங்களிலிருந்ததென மிருசுவிலுக்கு உசனென்று பெயரிட்டார்கள். சில காலம் அவ்விடத்திலிருந்து, அவ்விடம் வசதிப்படாததனால், அந்தச் சோனகக் குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரிற் கந்தசுவாமி கோயிலிருந்த இடத்திலே வந்து குடியிருந்தார்கள். 
சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி கோவில் கட்ட வருங்காலத்திற் தடையாயிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களை அவ்விடத்தை விட்டுப் புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்துங் கூடாமற் போயிற்று. ‘அந்த நிலங்களுக்கு அதிக விலை தருவோம். எங்களுக்கு விற்று விடுங்கள்,’ என்றுங் கேட்டுப்பார்த்தார்கள். சோனகர் அதற்குச் சம்மதிக்கவில்லை. யாதொரு இணக்கத்துக்குஞ் சோனகர் சம்மதியாதே போனதனால், அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக் கொண்டு போய் அவர்கள் தண்ணீர் குடிக்கும் கிணறுகளிற் போடுவித்தார்கள். 

பன்றியிறைச்சியைக் கண்டவுடனே சோனகர் அழுது புலம்பிப் பசி பட்டினியாய்க் கிடந்து, ஆற்றாமல், ஈற்றிலே தமிழருடனே தங்கள் பெருநாட்களிலே தாங்கள் வந்து தங்கள் சமய வழிபாடு செய்யத் தடைபண்ணாதிருப்பதற்கு ஓர் உடன்படிக்கை எழுதுவித்துக்கொண்டு, கிடைத்த விலையையும் வாங்கிக் கொண்டு போய், நாவாந்துறைக்கு கிழக்குப் பக்கமாகக் குடியேறினார்கள்.”

இருநூற்று எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையே ஈழத்து முஸ்லிம்களை மதமாற்றம் பெற்ற தமிழர்களாக விளிக்கும் பொழுது என்ன அடிப்படையில் இஸ்லாமிய தமிழர்களை அரபுவம்சாவழிகளாக இன்றைய முஸ்லிம் தலைமைகள் கூற முடியும்? இதனைப் புரிந்து கொள்வதற்கு போர்த்துக்கேயரின் காலத்தில் அப்பொழுது தமிழ் வன்னிமைச் சிற்றரசில் ஒன்றாக விளங்கிய தற்போதைய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற குடியேற்றம் ஒன்றையும், பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் இந்தோனேசியாவிலிருந்து தென்னிலங்கையில் நடைபெற்ற ஜாவானிய (இஸ்லாமிய சாவகர்) கூலிப்படையின் வருகையையும், அவர்களுக்குப் பின்னர் ஆங்கிலேயர்களின் காலத்தில் ஆப்கானிஸ்தான், அரபுதேசம், பாரசீகம் (ஈரான்) போன்ற நாடுகளிலிருந்து கண்டியில் குடியேறிய ஹம்பேயர்கள் எனும் முஸ்லிம்களின் வருகையையும் நாம் ஆராய்வது அவசியமானது.

தென்னிலங்கையிலும், மலையகத்திலும் செறிந்து வாழும் இந்த சாவக-ஹம்பேய முஸ்லிம்களின் வழித்தோன்றல்களே இன்று இலங்கையின் முஸ்லிம் தலைமைகளாக விளங்குகின்றனர். தமிழ் மொழியைப் பேசினாலும் தம்மை அராபிய வம்சாவழிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களே ஈழத்தின் இஸ்லாமிய தமிழர்களுக்கும், ஏனைய தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையில் நயவஞ்சக அரசியல் புரிபவர்களாக விளங்குகின்றனர்.
ஈழத்தீவில் வசிக்கும் முஸ்லிம்களைத் தேசிய இனமாக சித்தரித்து இஸ்லாமிய ஈழத்தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளத்தை மறுதலிப்பவர்களும் இவர்களே. இந்த சாவக-ஹம்பேயர்களால் பலிக்கடாவாக்கப்படும் இஸ்லாமிய தமிழர்களின் குறியீடாகவே சவூதியில் தலைதுண்டிக்கப்பட்ட ரிசானா என்ற ஈழத்தமிழ் முஸ்லிம் பெண் திகழ்கின்றார்.

 

 

இஸ்லாமிய தமிழர்களும், சாவக-ஹம்பேயர்களும் : சேரமான் (பாகம் - 2)

WEDNESDAY, 20 FEBRUARY 2013 03:40 SYDNEY

01022013%20005.jpgஈழத்தில் இஸ்லாமிய மதம் வேரூன்றிய பின்னணி பற்றியும், இற்றைக்கு இருநூற்று எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் மாதகல் மயில்வாகனப் புலவரால் யாழ்ப்பாண

வைபவமாலை எழுதப்பட்ட பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய சமயத்தை தழுவிய தமிழர்களாக விளங்கினார்கள் என்பது தொடர்பாகவும் எமது கடந்த தொடரில் பார்த்திருந்தோம்.

இவ் இஸ்லாமிய சமூகம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெறுவதற்கு முன்னர் சிறிய அளவிலான இஸ்லாமியர்கள் வட தமிழீழத்தில் வாழ்ந்தமைக்கான பதிவுகள் உள்ளன. பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய மதுரையை கி.பி.1311 ஆம் ஆண்டில் மலீக் கபூரின் தலைமையிலான முகாலயப் படைகள் கைப்பற்றி, தமிழகத்தில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றத்தை நிகழ்த்தி முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரே இவ் இஸ்லாமிய சமூகம் யாழ்ப்பாணத்தில் தோற்றம்பெற்றுள்ளது.

 

இது பற்றிய குறிப்புக்கள் கி.பி.1344 ஆம் ஆண்டில் மாலைதீவு வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த வட ஆபிரிக்காவின் மொறக்கோ தேசத்தை சேர்ந்த ஈபன் பற்றுற்றா என்ற இஸ்லாமிய வணிகரின் பயணப் பதிவில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து மன்னனை ‘சுல்தான் ஆயிரி சகரவுவதி’ என தனது பயணப் பதிவில் குறிப்பிடும் ஈபன் பற்றுற்றா, இம் மன்னனின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்திசையாக வெகு தொலைவில் காணப்பட்ட ‘மெந்தலி’ எனும் இடம் இருந்ததாக பதிவு செய்துள்ளார். இதுபற்றி 1928 ஆம் ஆண்டு ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்ட சுவாமி ஞானப்பிரகாசர், ‘ஆயிரி சகரவுவதி’ என ஈபன் பற்றுற்றா குறிப்பிட்டது யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவத்தி இடையில் ஏற்பட்டது என்றும், ‘மெந்தெலி’ என்பது தற்பொழுது புத்தளத்தில் உள்ள முந்தல் பகுதி என்றும் தெரிவிக்கின்றார்.


யாழ்ப்பாண மன்னனின் அனுசரணையுடன் சிவனொளிபாதமலை வரை பயணம் செய்த ஈபன் பற்றுற்றா, தான் பயணித்த எந்தவொரு இடத்திலும் முகமதியர்கள் எவரையும் காண முடியவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஈபன் பற்றுற்றாவின் இப்பயணப் பதிவு புத்தளம் வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிக்கம் பரந்திருந்ததை உறுதி செய்வதோடு, இவரது வருகைக்குப் பின்னரே ஈழத்தில் இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நாம் கருதுவதற்கான ஆதாரமாகும்.

யாழ்ப்பாண மன்னனோடு மட்டுமன்றி அக்காலப் பகுதியில் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களோடும் அராபிய - வட ஆபிரிக்க முஸ்லிம் வணிகர்கள் தொடர்புகளைப் பேணி வந்ததாக ஈபன் பற்றுற்றாவின் பயணப் பதிவு தெரிவிக்கின்றது. இவ்வாறு ஏற்பட்ட வணிகத் தொடர்பின் ஊடாகவே யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற இடங்களில் இஸ்லாமிய மதமாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று கருத முடியும்.


எனினும் இவ்வாறு வடதமிழீழத்தில் வாழ்ந்த சிறிய அளவிலான இஸ்லாமியத் தமிழர்கள் கி.பி.1626 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்களின் ஆட்சியில் அங்கிருந்து விரட்டப்பட்டதை அக்காலத்து போர்த்துக்கேய குறிப்புக்கள் உறுதி செய்கின்றன. ஆசியாவில் தமது வணிகத்திற்கு முஸ்லிம்கள் இடையூறு விளைவிப்பதாக அப்பொழுது போர்த்துக்கல்லை ஆட்சி செய்த மன்னன் கருதியதால் தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் வசித்த முஸ்லிம்களை விரட்டுமாறு கட்டளையிட்டிருந்தான். இதன்படி அப்பொழுது யாழ்ப்பாண இராச்சியத்திற்கும், கோட்டை இராச்சியத்திற்கும் (சிங்கள அரசு) தேசாதிபதியாக இருந்த கொன்ரன்ரினோ தூசாதூ நொறொன்ஹா என்ற போர்த்துக்கேய ஆளுநர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்த நான்காயிரம் முஸ்லிம்களை விரட்டியடித்துள்ளார் (போர்த்துக்கேயரின் காலத்தில் கோட்டை இராச்சியத்தின் ஒரு பகுதியாகவே புத்தளம் விளங்கியுள்ளது).

போர்த்துக்கேயர்களால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் கண்டியைச் சென்றடைந்து, கண்டி மன்னனிடம் தஞ்சமடைந்த பொழுது அவன் அவர்களில் ஒரு பகுதியினரை மலையகத்தில் குடியேறுவதற்கு இடமளித்ததோடு, தமிழ்ப் பகுதிகளில் வாழ விரும்பியவர்களை அப்பொழுது கண்டி இராச்சியத்திற்கு திறைசெலுத்தி வந்த தமிழ்ச் சிற்றரசான மட்டக்களப்பு வன்னிமைக்கு அனுப்பி வைத்ததாக பதிவுகள் உள்ளன. அக்காலத்தில் சிங்களவர்கள் செறிந்து வாழ்ந்த மலையகப் பகுதிகளில் குடியேறுவதைத் தவிர்த்து தமிழ் சிற்றரசாக விளங்கிய மட்டக்களப்பு வன்னிமையில் இவர்கள் குடியேறியதை இவர்களின் தமிழ்ப் பின்னணிக்கான சான்றாகக் கொள்ளலாம்.

எனவே இவர்களின் வழித்தோன்றல்களாகவே இப்பொழுது திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வசிக்கும் பெரும்பாலான இஸ்லாமியர்களைக் கருதலாம். இவ்வாறு மட்டக்களப்பில் இஸ்லாமியத் தமிழர்களின் குடியேற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து ஈழத்தீவில் இன்னுமொரு குடியேற்றம் நடைபெற்றது. போர்த்துக்கேயர்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம், கோட்டை ஆகிய இராச்சியங்களை கைப்பற்றிய ஒல்லாந்தர்கள், தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இந்தோனேசியாவிலிருந்து ஜாவானிய (சாவகர்) முஸ்லிம்களைக் கொண்ட கூலிப்படை ஒன்றை அழைத்து வந்ததாக டச்சு வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவர்களில் அதிகமானவர்கள் பின்னர் கொழும்பிலும், தென்னிலங்கையின் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் குடியேறினார்கள்.

இவர்களின் குடியேற்றம் யாழ்ப்பாணத்திலோ ஏனைய தமிழீழ தாயகப் பகுதிகளிலோ இடம்பெற்றதாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. இதனை ஒல்லாந்தரின் காலத்தில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபமாலையிலிருந்து நாம் உறுதி செய்ய முடியும்.  ஆனால் அக்காலப் பகுதிகளில் தமிழீழத்தில் வசித்து வந்த இஸ்லாமியத் தமிழர்களோடு திருமணத் தொடர்புகளை இவர்கள் பேணியிருப்பதற்கான வாய்ப்புக்களை நாம் மறுக்க முடியாது.

இவ்விடத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி.1245) இந்தோனேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாவகர்களின் பிறிதொரு குடியேற்றம் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலப் பகுதியில் இந்தோனேசியாவில் இந்துக்களும், பௌத்தர்களும், சமணர்களுமே வாழ்ந்து வந்துள்ளார்கள். அப்பொழுது இந்தோனேசியாவில் இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை. இக்காலப் பகுதியில் ஈழத்தின் வடகடலோரத்தை வந்தடைந்த சந்திரபானு என்ற சாவக கடற்கொள்ளையர்களின் தலைவன், அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆட்சிசெய்ததோடு, யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களோடு இணைந்து சிங்களவர்களுக்கு எதிராகப் போர்தொடுத்து சிங்கள அரசுகளை தனக்கு திறைசெலுத்தும் சிற்றரசுகளாக மாற்றியதாக சடாவர்மன் வீரபாண்டியன் என்ற தமிழக மன்னனின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சந்திரபானுவோடு வந்த சாவகர்கள் குடியேறிய பகுதிகள் பிற்காலத்தில் சாவுகர்சேரி, சாவுகங்கோட்டை என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. எனினும் இங்கு வசித்த சாவர்களை கி.பி.1519ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாவது சங்கிலியன் என்ற மன்னன் முற்றாக விரட்டியடித்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது.

இப்பகுதிகளே இருபதாம் நூற்றாண்டில் சாவகச்சேரி என்றும், சாவாங்கோட்டை என்றும் அழைக்கப்பட்டதாக சுவாமி ஞானப்பிரகாசர் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இப்பகுதிகளில் சாவகர்கள் சமண சமயத்தைப் பின்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. எனவே இவர்களுக்கும், ஒல்லாந்தரின் காலத்தில் தென்னிலங்கையில் குடியேறிய சாவக முஸ்லிம்களுக்கும் தொடர்பு இருந்ததாக நாம் கருத முடியாது. இந்த சாவக முஸ்லிம்களின் வருகையைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின் காலத்தில் (பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து) அரபு தேசம், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் குடியேற்றம் தென்னிலங்கையில் நிகழ்ந்துள்ளது.
ஹம்பேயர்கள் என்று சிங்களத்தில் அழைக்கப்பட்ட இந்த முஸ்லிம்களின் முதலாவது வருகை தற்பொழுது அம்பாந்தோட்டை என்று அழைக்கப்படும் மகிந்தரின் தேர்தல் தொகுதியிலேயே நிகழ்ந்துள்ளது. உரோகணை என்று பண்டைய தமிழ் நூல்களிலும், சிங்கள நூல்களிலும் அறியப்பட்ட இப்பகுதி பின்னர் அம்பாந்தோட்டை (ஹாம்பாந்தோட்ட) என்று அறியப்பட்டதற்கு இப்பகுதியில் நிகழ்ந்த ஹம்பேய முஸ்லிம்களின் வருகையையே வரலாற்றாசிரியர்கள் மூலகாரணமாக குறிப்பிடுகின்றனர்.

கண்டியில் வசித்து வந்த சிங்கள பௌத்தர்களுக்கும், அங்கு குடியேறிய ஹம்பேய முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் ஒன்றே 1915ஆம் ஆண்டு தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இனக்கலவரம் வெடிப்பதற்கு காரணமாக அமைந்தது. இக்காலப் பகுதியில் ஈழத்தின் இஸ்லாமிய தமிழர்களோடு திருமண உறவைக் கூட இந்த ஹம்பேய முஸ்லிம்கள் பேணவில்லை என்று 1916ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூல் ஒன்றில் சேர் பொன்.இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இஸ்லாமிய தமிழர்களுக்கும், சைவ-கிறிஸ்துவ சமயப் பின்னணியைக் கொண்ட தமிழர்களுக்கும் இடையில் நச்சுக்கருத்துக்களைப் பரப்பிக் குழப்பம் விளைவிப்பவர்கள் இந்த ஹம்பேய முஸ்லிம்களே. இவர்களின் ஆதிக்கத்திலேயே முஸ்லிம் காங்கிரஸின் தலைமை உள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எது கிடைத்தாலும் அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்று கேட்பவர்கள் இந்த ஹம்பேயர்களே.

 

இஸ்லாமிய தமிழர்களும், சாவக-ஹம்பேயர்களும் (பாகம் - 3 ) // சேரமான்
MONDAY, 18 MARCH 2013 11:07 SYDNEY

humbergersss.jpgஈழத்தீவில் வசிக்கும் முஸ்லிம்கள் மதரீதியில் ஓர் சமூகமே தவிர ஒரு தனித்துவமான இனத்திற்கான பண்பியல்புகளை அச்சமூகம்

கொண்டிருக்கவில்லை என்பதைக் கடந்த இரு தொடர்களில் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் ஊடாக ஆராய்ந்திருந்தோம்.

 

தமிழீழத் தாயகமாக இருந்தாலும் சரி, தென்னிலங்கையாக இருந்தாலும் சரி அங்கு வசிக்கும் முஸ்லிம்களை மூன்று பிரிவுகளாக நாம் வகைப்படுத்தலாம்:
தமிழர்கள்,
சாவகர்கள்,
ஹம்பேயர்கள்.

இதில் இஸ்லாமிய தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் அங்கமாகவே அவர்கள் திகழ்கின்றார்கள். இவ் இஸ்லாமிய தமிழர்கள் பேசுவது தமிழ்: அதனால் அவர்களின் தாய்மொழி தமிழ் மொழியே. அவர்களின் மூதாதையர்கள் தமிழர்கள்: அதனால் அவர்களும் தமிழர்களே. இந்த வகையில் எந்தவொரு இஸ்லாமியத் தமிழனும் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்துவதை தவிர்த்து முஸ்லிம் என்று அடையாளப்படுத்துவது அபத்தமானது.

இவ் இஸ்லாமிய தமிழர்களிலிருந்து சாவக முஸ்லிம்களும், ஹம்பேய முஸ்லிம்களும் வேறுபட்டு நிற்கின்றனர். இதில் சாவக முஸ்லிம்களை தனியான ஓர் இனமாகக் கருதலாம். இவர்களின் பேச்சு மொழியாக தமிழ் மொழி விளங்கினாலும் இவர்களின் தாயகம் இந்தோனேசியாவிலேயே உள்ளது.

இந்த வகையில் ஈழத்தீவைப் பொறுத்தவரை இவர்கள் ஓர் சிறுபான்மை இனமே தவிர தேசிய இனம் அன்று. இதே நிலைதான் ஹம்பேய முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஆனால் சாவக முஸ்லிம்களைப் போன்று இவர்களை தனித்துவமான ஓர் சிறுபான்மை இனமாகக்கூட கருத முடியாது. இவர்களின் பேச்சு மொழியாக தமிழ் மொழி விளங்கினாலும் இவர்களின் தாயகம் அரபு தேசம், பாரசீகம், ஆப்கானிஸ்தான் என்ற மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும், மத்திய ஆசியாவிலுமே உள்ளது. இவர்களை பல சிறுபான்மை இனங்களின் ஓர் தொகுப்
பாகவே கருதலாம்.

இவ்வாறு பல இனங்களின் தொகுப்பாக விளங்கும் ஈழத்தீவின் முஸ்லிம் சமூகத்தை ஓர் தனித்துவமான இனமாகவோ அன்றி தேசிய இனமாகவோ சித்தரிப்பதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் முற்படுவது அபத்தமானது. இந்த வகையில் தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் இஸ்லாமியத் தமிழர்களின் பிரதிநிதிகளாக சாவகர்களும், ஹம்பேயர்களும் தம்மை முன்னிறுத்த முற்படுவது நகைப்புக்கிடமானது.

தமிழீழ தாயகத்தைப் பொறுத்தவரை அங்கு வசிக்கும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கடந்த நூற்றாண்டில் தமிழீழ தாயகத்தில் குடியேறிய சாவகர்களும், ஹம்பேயர்களும் இவ் இஸ்லாமிய தமிழ் சமூகத்தின் மத்தியில் இன்று வாழ்ந்தாலும்கூட இஸ்லாமிய தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நியாயத்தன்மையோ அன்றி அருகதையோ இவர்களுக்குக் கிடையாது.
இதே நிலைதான் தென்னிலங்கையில் வசிக்கும் சாவக-ஹம்பேய முஸ்லிம்களுக்கும் பொருந்தும். தென்னிலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களை இச் சாவக-ஹம்பேயர்கள் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆனால் துர்ப்பாக்கியவசமாக இவ் உண்மையைப் பல இஸ்லாமியத் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லை.

இதுதான் 1990களில் தென்தமிழீழத்தில் தமிழர்கள் மீது மிக மோசமான படுகொலைகளை முஸ்லிம் சமூகம் கட்டவிழ்த்து விட்டதற்கு காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், முஸ்லிம் காடையர்களாலும், முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் படுகொலை செய்யப்பட்டார்கள்: தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இக்கொடூரச் செயல்களை ஏவி விட்டு முன்னின்று நடத்திய பெரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளையே சாரும்.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை பூதாகரப்படுத்தி ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரி, எழுத்தாளர்களும் சரி, தென்தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், பாலியல் வெறியாட்டங்கள், சொத்துச் சூறையாடல்கள் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. 03.08.1990 அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் 103 முஸ்லிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தூக்கிப்பிடித்து இப்பொழுதும்கூட பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் முஸ்லிம்களின் கண்களுக்கு தென்தமிழீழத்தில் இரண்டாயிரம் தமிழர்களை முஸ்லிம் காடையர்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தமை தெரிவதில்லை.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி இரண்டு வாரங்களில் 26.06.1990 அன்று அம்பாறை கல்முனையில் முதன் முதலாக 75 தமிழர்களை சிங்களப் படைகளுடன் இணைந்து முஸ்லிம் காடையர்கள் உயிருடன் டயர் போட்டுத் தீக்கிரையாக்கிப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து 07.07.1990 அன்று திருமலை கந்தளாய்ப் பகுதியில் முஸ்லிம் காடையர்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட 12 இஸ்லாமியத் தமிழர்களும், மேலும் 24 தமிழர்களும் பலியாகினர். இதனைத் தொடர்ந்து 10.07.1990 அன்று திருமலை கிண்ணியா பகுதியில் மீண்டும் முஸ்லிம் காடையர்களால் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதே நாளில் கல்முனை வீரமுனையில் முஸ்லிம் காடையர்களாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 31 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு தொடங்கிய முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கொலைவெறியில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 1990ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இரண்டாயிரத்தை தாண்டியிருந்தது. இது பற்றி ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பின் கீழ் 1990ஆம் ஆண்டு நவம் பர் மாத இறுதியில் ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையில் வெளிவந்த முகப்புச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்
பட்டிருந்தது:

‘கிழக்கில் மட்டும் 4000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 2000 மக்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதிகளால் நசுக்கப்பட்டு வந்த தமிழர்கள் இன்று முஸ்லிம் காடையர்களின் கொலைவெறிக்குள்ளும் அகப்பட்டு சொல்லொணாத் துயர்களை அடைந்து வருகின்றனர். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராட வேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதமான தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாது சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய செயல்கள் தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டில் நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ - சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டு சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகிறது. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்களை சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமான இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பாண்டிருப்பு, கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை... இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

தீவிர மதவெறிபிடித்த முஸ்லிம் காடையர்களின் வெறிச்செயல்களினால் கிழக்கு மாகாணத்தின் (தென்தமிழீழம்) பெரும் பகுதியில் தமிழர்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் முழுமையாக இணைத்து போராட்டத்தை நடாத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமூகத்துடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தவும், தனித்துவமான அவர்களுடைய மத கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு பல்வேறு விதமான எதிர்ப்புக்கள், சதிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களை அணிதிரட்ட முயன்றோம்.

அரசியல் அமைப்பு வாயிலாக எந்தக் காலத்திலுமே நிலைத்திருக்கக்கூடிய விதத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக முடிவெடுத்து அதைப் பகிரங்கமாக அறிவித்து அதன்படி செயற்பட்டு வந்தோம். ஆனாலும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தை தனது கைக்குள் வைத்திருந்த பணப் பலம்மிக்க முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம்களுக்கு சுலபமாக மதவெறியூட்டியதுடன் தனது ஆயுதக்குழுவை தமிழர்கள் மீது ஏவிவிடச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தது.

சிறீலங்கா படைகளுடன் போர் தொடங்கி சில நாட்களில் தமிழர் பகுதிகளை நோக்கி சிங்களப் படை நகரத் தொடங்கியதும் சிங்களப் படையுடன் சேர்ந்து ‘ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரசின் சமூக விரோதக் குழுவினர் தமிழ் மக்களை படுகொலை செய்யத் தொடங்கினர். தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கத் தொடங்கினர்.

நாட்கள் செல்லச் செல்ல இந்தப் படுகொலையிலும், சூறையாடல்களிலும், பாலியல் வன்முறைகளிலும் முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானோர் ஈடுபடத் தொடங்கினர். சிறீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம் காங்கிரசினால் ஊர்காவல் படைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நவீன ரக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி இந்த ஆயுதங்களை வைத்திருந்த முஸ்லிம் ஆண்கள் தமிழ் இனப்படுகொலையில் ஈடுபடத் தொடங்கினர்.

அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளிலிருந்த பல தமிழர் கிராமங்கள் கொலைக்களங்கள் ஆகின. சிங்களப் படைகளுடன் சேர்ந்து கொண்ட இவர்களது வெறித்தனத்தால் கிழக்கு மாகாணத்தில் 4 இலட்சம் மக்கள் அகதிகளாகினர். அங்கே கொல்லப்பட்ட 4000இற்கும் மேலான தமிழர்களில் சுமார் 2000 பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்ட 2500 தமிழர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.


இதே சமயம் எமது இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இயக்கத்தை விட்டோடி சிங்களப் படைகளுடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுத்தனர். எமது ஆயுதங்களில் சில பறிபோகவும், எமது போராளிகள் சிலர் கொல்லப்படவும், எமது உதவியாளர்கள் பலர் படுகொலை செய்யப்படவும் காரணமாக இருந்தார்கள்.

சிங்களப் படைகளை விட முஸ்லிம்களாலேயே தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர். கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களுள் பெரும்பாலானவை இன்று ஊர்காவல் படைகள் - சிங்கள இராணுவம் சேர்ந்த ஒரு படை முகாமைப் போலவே விளங்குகின்றன. இத்தகைய நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைக்கச் செய்துவிட்டன.

இருந்த பொழுதும் எமது இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற வடமாகாணத்தில் எந்தவொரு முஸ்லிமும் கொல்லப்படவுமில்லை, எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படவுமில்லை. சிங்கள இனவாதப் பூதத்தை திருப்திப்படுத்தி அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக அயலவர்களான தமிழர்களை கொன்றொழித்த முஸ்லிம்கள் நாளை அதே சிங்கள இனவாதப் பூதத்தால் விழுங்கப்படப் போகிறார்கள்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6737:-3-&catid=298:2011-02-18-08-43-02&Itemid=392

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.