Jump to content

நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள்.


Recommended Posts

பதியப்பட்டது

logo.png

நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள்.

 

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம்.

 

உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :-

 

1)    உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது.

 

2)    ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசத்தின் வளங்களையும் தொழில் முறைகளையும் அறிந்து அதற்கு ஏற்ப தொழில்களை உருவாக்கக்கூடிய தெளிவை ஏற்படுத்தல்.

 

3)    அனைத்துப் பகுதிகளிலும் வாழும் கல்விகற்க வசதியற்ற பிள்ளைகள் வாழ்வாதாரம்  வீழ்ச்சி நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களை முன்னேற்ற வேண்டிய வேலைகளைச் செய்வதோடு கல்வித்தரத்தை உயர்த்துவதோடு குடும்ப முன்னேற்றமும் உயர்வடையச் செய்யப்படும்.

 

4)    சமூகப்பிறழ்வுகள் , குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள் , பெண்கள், முதியோர்களுக்கான உளவள மேம்பாட்டை விருத்தி செய்யும் வகையிலான விழிப்புணர்வு , தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்த உதவுதல்.

 

5)     மேற்படியான நோக்கங்களை பரிசீலித்து அதற்குரிய மாற்றங்களை செயற்படுத்தல்களை மேற்கொள்ளும் ஆய்வறிக்கைகளை ஆய்வறிக்கைக்குழு தயாரித்துத் தருவார்கள்.

 

6) ஒவ்வொரு பிரதேசங்களினதும் புவியியல் அமைவு பொருத்தமான தொழில் பிரிவுகள் ஆராயப்பட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில் குறைந்த வளங்களின் மூலம் நிறைந்த பொருளாதாரத்தை பெறக்கூடிய வகையிலான ஊக்குவிப்புகளை வழங்கி எல்லோருக்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

 

6)    கிடைக்கப்பெறும் ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து தொழில் வாய்ப்பு , தொழில் ஊக்குவிப்பு , கல்வி வசதிகளை ஏற்படுத்தலுக்கான முடிவகளை நிறைவேற்றுக் குழுவே தீர்மானிக்கும். இந் நிறைவேற்றுக்குழுவில் சாந்தி, ஜெனனன், வசந்தன், தயா ஆகியோர் அங்கம் வகிப்பர்.

 

எமது உப அமைப்புக்கள் :-

1)    பறவைகள் :- வவுணதீவு பிரதேசத்தை அண்டிய அனைத்துக் கிராமங்களையும் ஒன்றிணைக்கும்.
2)    அரவணைப்பு : – செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
3)    நேசம் : – கதிரவெளி பிரதேச செயலர் பிரிவை அண்டிய வெருகல் முதல் நாவலடி வரையான கிராமங்கள் உள்ளடக்கி இயங்கும்.
4)    மீழ்ச்சி : – வெல்லாவெளி , மண்டுர் பகுதிகளை அண்டிய கிராமங்களை உள்ளடக்கிய இயங்கும்.
5)    விழி : – கல்குடா பகுதியை அண்டிய கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
6)    தேன்சிட்டு: – அம்பாறை மாவட்டம்.
7)    எழுவான் : – மன்னார் மாவட்டம்.
8)    சோலைப்பூக்கள் :- கிளிநொச்சி மாவட்டம்.

9) நந்தவனம் (ஆலோசனைக்குழு) இவ்வமைப்பில் யாரும் இணைந்து கொள்ளலாம். எமது உப அமைப்புகளின் செயற்திட்டம் தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகள் முன்னேற்றம் வளர்ச்சி எதிர்காலத் திட்டங்கள் பற்றிய திட்டமிடல்கள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை சமூக அக்கறை மிக்கவர்களால் வழங்க முடியும்.                                                     

10)  தளிர் (திருகோணமலை)                                                                                                                                                                                                           

11) மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் (பல்கலைக்கழமாணவர்களின் மேம்பாடு வளர்ச்சிக்கான அமைப்பு)

 

ஆகிய எட்டு உப அமைப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. காலக்கிரமத்தில் ஒவ்வொரு உப அமைப்பினதும் முன்னேற்றங்கள் அறியத்தருவோம்.

 

உதவுகிற புலம்பெயர் தமிழர்களின் உழைப்பு ஒரு திட்டமிடலின் கீழ் இல்லாமல் அங்கங்கு குறித்த சில பகுதிகளை மட்டும் மையப்படுத்தப்பட்டு உதவிகள் செல்கிறது. எனினும் தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்கிறவர்களாகவே எங்களது மக்களின் மனநிலமையும் இருக்கிறது.

 

உதவிகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருக்கும் நிலமையை மாற்றி நிரந்தர வாழ்வாதார கல்வி முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான எண்ணத்தின் வெளிப்பாடே உப அமைப்புக்களின் உருவாக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

நீங்கள் செய்யும் உதவிகள் சரியாக சரியான நபர்களைச் சென்றடைகிறதா உங்கள் உதவியின் பயன் என்ன என்பவற்றையும் எங்கள் உப அமைப்புக்கள் ஊடாக கண்காணித்துத்  தரவும் எம்மால் உதவ முடியும்.

 

மற்றும் சரியான தொடர்பாடல்கள் இல்லாது உதவிகள் வீணாவதையும் நீங்கள் தடுக்க முடியும். இத்தகைய ஆதரவுகள் தேவைப்படுகிற புலத்துத் தமிழ் அமைப்புக்களின் உதவிகளை சரியான முறையில் நிரந்தர முன்னேற்றம் நோக்கிய பாதையில் கொண்டு செல்லும் வகையில் தங்களுக்கான ஆதரவுகளையும் எம்மால் வழங்க முடியும்.

 

எம்முடன் இணைந்து செயற்பட அல்லது எம்மோடான நட்புறவை பேணிக்கொள்ள விரும்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். நிரந்தர  பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் எங்கள் மக்களை உயர்த்துவோம்.

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

Posted

அது சரி மட்டக்களப்பிற்கு ஏன் 5 உப அமைப்பு?

Posted

தேவைக்கேற்பவும், ஒத்துழைப்பிற்கேற்பவும் ஏனைய அமைப்புகளையும் ஏனைய ஒன்றிணைக்கும் நடவடிக்கை நல்லதே.
நீங்கள் வவுனியாவில் ஏதாவது கல்வி மற்றும் இதர உதவிகள் செய்வதாயின் வவுனியா மாவட்ட பல்கலைக்கழ‌க மாணவர்கள் கூட்டமைப்பின் தொடர்பினை பெற்றுத்தர முயற்சிக்கிறேன்

Posted

தேவைக்கேற்பவும், ஒத்துழைப்பிற்கேற்பவும் ஏனைய அமைப்புகளையும் ஏனைய ஒன்றிணைக்கும் நடவடிக்கை நல்லதே.

நீங்கள் வவுனியாவில் ஏதாவது கல்வி மற்றும் இதர உதவிகள் செய்வதாயின் வவுனியா மாவட்ட பல்கலைக்கழ‌க மாணவர்கள் கூட்டமைப்பின் தொடர்பினை பெற்றுத்தர முயற்சிக்கிறேன்

 

நன்றிகள் உதயம். மாவட்ட ரீதியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உங்கள் உதவியையும் வரவேற்கிறோம். அடுத்தடுத்த மாவட்டங்களில் நம்பிக்கையான சமூகப்பொறுப்பு மிக்கவர்களை உள்வாங்கித் தாருங்கள். காரணம் கடந்தகால அனுபவங்களின் படிப்பினை எல்லாவற்றையும் ஒன்றுக்கு நூறுமுறை ஆராய்ந்தே செயற்பட வேண்டுமென்ற அனுபவத்தைத் தந்துள்ளது.

தங்களை முன்னிலைப்படுத்த அல்லது தாங்களே இந்த அமைப்பின் மூலம் வேரென்று பின்பு பொய்யான புரளிகைளைக் கிழப்பி குழப்பத்தை உண்டுபண்ணாத சுயநலமற்றவர்களையே எதிர்பார்க்கிறோம். கடந்தகால இங்கு களத்தில் நடந்த புரளிகளை நீங்களும் பார்த்திருந்தீர்கள் என்பதனால் இவ்விடயத்தை மீளவும் ஞாபகப்படுத்துகிறேன்.

நீங்கள் குறித்த மாணவர்களை தொடர்புபடுத்தி தாருங்கள்.

 

Posted

எனது நண்பருடன் தொடர்பு கொண்டேன். ஒரு வாரத்திற்குள் உங்களுடன் தொடர்பு கொள்வர் அல்லது நான் அவர்களின் தொடர்பிலக்கத்தை தருகிறேன்.. தேவை எனின் எனது பெயரைக் கூறி அறிமுகம் செய்யுங்கள் (2002/2003 இல் அதன் உபதலைவராக இருந்துள்ளேன்)..

Posted

எனது நண்பருடன் தொடர்பு கொண்டேன். ஒரு வாரத்திற்குள் உங்களுடன் தொடர்பு கொள்வர் அல்லது நான் அவர்களின் தொடர்பிலக்கத்தை தருகிறேன்.. தேவை எனின் எனது பெயரைக் கூறி அறிமுகம் செய்யுங்கள் (2002/2003 இல் அதன் உபதலைவராக இருந்துள்ளேன்)..

 

மிக்க நன்றிகள் உதயம். உங்கள் ஊடான ஒரு உப அமைப்பை தோற்றுவிக்க ஆதரவு கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி. ஏற்கனவே பலமுறை பலருக்கு நேசக்கரம் ஊடாக உதவியிருக்கிறீர்கள். உங்கள் உதவி பெற்று தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவர்கள் பலர். எல்லாவற்றுக்கும் நன்றிகள்.

 

தங்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அமைப்புக்களை உருவாக்கி மக்களுக்கு உதவ தங்கள் மாவட்டங்களை நேசிக்கிற யாவரும் இணையலாம்.

Posted

உதயம் உங்கள் நண்பர் ஸ்கைபில் தொட்பு கொண்டார். விபரங்கள் தனிமடலில் எழுதுகிறேன்.

  • 6 months later...
Posted

தேன்சிட்டு உளவள அமைப்பானது 2014 தை முதலாம் திகதியிலிருந்து தாயகப்பகுதிகள் எங்கும் இயங்கும் அமைப்பாக மாற்றம் பெற்றுள்ளது. தொடர்பான செய்திகள் செய்யப்படும் திட்டங்களின் செய்திகளில் இணைக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.