Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலியின் சொல்லும் செயலும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தன - யாழ் தமிழ் மக்கள் பேரவை கண்ணீர் இரங்கல்

Featured Replies

வாலியின் சொல்லும் செயலும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தன - யாழ் தமிழ் மக்கள் பேரவை கண்ணீர் இரங்கல்

 

 

ஈழத் தமிழ் மக்களின் அவலம் கண்டு பொங்கியெழுந்த தொப்புள்கொடி உறவான கவிஞர் வாலியின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்துள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வாலிக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பம், குடும்ப நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் அவரின் அபிமானிகள் ஆகியோரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

கவிஞர் வாலியின் மறைவு குறித்து யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்களவன் தமிழர்களை அழித்தொழித்ததை கண்டு இந்தி மத்திய அரசாங்கமோ தமிழக அரசாங்கமோ உரிய அக்கறை எடுக்கவில்லையென்று மனம் வெதும்பிய வாலி அவர்கள் தனது கவி வடிவத்தால் இந்தியாவைக் கண்டித்தார். ஈழப் போராட்டத்திலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிலும் பெருமதிப்பு கொண்டவர்.

வாலியின் சொல்லும் செயலும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தன. 82 வருடங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த கவிஞர் வாலி அவர்கள் ஈழத் தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் துல்லியமாகவே அவதானித்து வந்தவர். இதன் காரணமாக காலத்திற்கு காலம் தான் எழுதுகின்ற சினிமா பாடல் வரிகளிலும் ஈழத் தமிழர்களுக்கு சார்பான, ஆதரவான கருத்துக்களை புகுத்தி கவி வடித்திருந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலத்தில், தமிழீழ தேசிய எழுச்சி கானங்கள் பாடப்படாத காலத்தில் கவிஞர் வாலியின் பாடல்களே தேசிய விடுதலைக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதற்கு பக்க பலமாக அமைந்தன. உலகெங்கும் ஒதுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களின் மனங்களில் கவிஞர் வாலியின் கவி வரிகள் புத்தெழுச்சியையும் விடுதலை உணர்வுகளையும் தோற்றுவித்தன. இது அவர்களை விடுதலை தொடர்பில் சிந்திக்கத் தூண்டின. இதன் விளைவாகவே போராட்டங்கள் தோற்றம் பெற்றன.

கவிஞர் வாலி 78 வயதாக இருக்கும் போது தமிழீழ விடுதலைப் போராட்டம் சிங்கள இனவெறியர்களால் சிதைக்கப்பட்டது. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். பல பெண்கள் மானபங்கப்படு;த்தப்பட்டனர். சமாதானம் பேசுவதற்கென்று சரணடைந்த இளநிலைப் போராளிகளும் சில முக்கிய தளபதிகளும் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலை கண்டு கவிஞர் வாலி துடித்தார். தனது துடிப்பை கவியில் வடித்தார். அந்த வரிகள் தமிழகத்தையே உலுப்பியது. தமிழக அரசாங்கத்தை சிந்திக்கத் தூண்டியது. தமிழர்கள் கொல்லப்பட்ட போது கபட நாடகமாடிய கருணாநிதி தலைமையிலான அரசாங்கத்தை தமிழக மக்கள் தூக்கியெறிவதற்கு கவிஞர் வாலியின் கருத்துக்களும் காரணமாக அமைந்தன.

இதனை விட தமிழீழ தேசியத் தலைவரின் மகனின் வீரச்சாவு, தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இறப்பு, அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரச்சாவு போன்ற சந்தர்ப்பங்களிலும் கவிஞர் வாலி வடித்த கவிஞர் தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய அன்பு வைத்திருந்த கவிஞர் வாலியின் இறப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தள்ளாத வயதிலும் தளராத உறுதியுடன் ஈழத் தமிழர்களுக்காய் கவி வடித்து குரல் கொடுத்த அமரர் வாலி அவர்களுக்கு நாம் எமது இதயம் கனிந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறோம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.sankathi24.com/news/31563/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.