Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த இரட்டையர் உத்தி: - பனங்காட்டான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wigneswaran-with-Sambanthan-150-article.

எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.

  

உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும்.

 

அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முடியும்.

 

54 பொதுநலவாய நாடுகளின் தலைவராக இரண்டு வருடங்களுக்கு உலக பவனி வரலாமென்ற நினைப்பு, மாநாடு நடைபெறாது போனால் பொரிமாத் தோண்டியின் கதையாகிவிடும்.

 

13இல் கைவைக்காது தேர்தலை நடத்தினால், ஆட்சியிலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடலாம்.

 

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுமாயின், அதன் பின்னர் 13ஐ திருத்தலாம் என்றால் சர்வதேசம் அதற்கு இடம்கொடுக்காது என்ற அச்சம் வேறு.

 

இதற்கிடையில் நவநீதம் பிள்ளை விஜயம் செய்கின்ற நாட்களும் நெருங்கி வருகின்றன.

 

திருமலை ஐந்து மாணவர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட பன்னிரண்டு அதிரடிப் படையினர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

பிரான்சின் மூதூர் தொண்டர் படுகொலைகளின் கோவை தூசுதட்டி மேலே கொண்டுவரப்பட்டுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமென மீண்டும் மீண்டும் அறிவிப்பு வருகின்றது.

 

இவையெல்லாம் நவநீதம் பிள்ளையின் விஜயம், மற்றும் பொதுநலவாய மாநாட்டுக்கானவை என்பது கருவிலுள்ள சிசுவுக்கும் தெரியும்.

 

அரசியல் ரீதியாக தேர்தலை நிறுத்த முடியாத நிலையிலுள்ள மகிந்த தரப்பு, நீதித்துறை சார்ந்த சட்டத்தின் வழியாக அதனை முடக்கவே விரும்புகின்றது.

 

நீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ள வழக்குகளூடாக இதனைப் பார்க்கலாம்.

 

பௌத்தர்களின் அதியுயர் பீடங்களான மல்வத்த மற்றும் அஸ்கிரிய ஆகியவற்றின் பீடாதிபதிகள், மாகாணசபைகளை முற்றாக ஒழிக்க வேண்டுமெனவும், இந்தியாவுக்கு ஒருபோதும் பயப்படக்கூடாது என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

 

இவர்களின் இந்த அறிவிப்பு மகிந்த தரப்புக்கு புது உத்வேகம் கொடுக்கக்கூடியது.

 

தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வட மாகாணசபை பதவியேற்கும்வரை, எல்லாம் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நடைபெறும் என்று திடமாகக் கூறமுடியாது.

 

1981இல் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தல்கால சம்பவங்களையும், தேர்தலின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் அங்கு இடம்பெற்ற வன்சம்பவங்களையும் (யாழ் பொது நூலக எரிப்பு) இப்போது நினைவுகூருவது பொருத்தமானது.

 

இந்த மாவட்ட சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெற்றி பெற்று அதன் தலைவராக முன்னாள் செனட்டர் நடராஜா (பொட்டர்) பதவியேற்றார். ஆகக்குறைந்த அதிகாரங்கள்கூட இல்லாத இச்சபையின் தலைவர் பதவியிலிருப்பதில் எந்தப் பயனும் இல்லையென்று கூறி, ஒரு வருடத்துள் அவர் தமது பதவியைத் துறந்ததையும் இவ்வேளையில் நினைத்துப் பார்ப்பது அவசியமானது.

 

இது நடைபெற்று சுமார் 30 வருடங்களின் பின்னர், வடக்கின் ஐந்து நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய, அதிகாரங்கள் முடக்கப்பட்ட வட மாகாணசபைக்கான தேர்தல் பற்றிப் பேசப்படுகின்றது.

 

அவரா இவரா� என்ற இழுபறியிலிருந்த தலைமை வேட்பாளர் பிரச்சினை ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. (ஆனாலும் இதனை நிச்சயமாகக் கூறுவது கடினமாக உள்ளது.)

 

திரு. சி.வி.விக்னேஸ்வரன் பெயர் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இப்பதவிக்கு அடிபட்டது. ஆனால், அவர் அதனை நிராகரித்து விட்டதாக பின்னர் வந்த செய்திகள் கூறின.

 

என்ன காரணத்தாலோ மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளராக (எதிர்கால முதலமைச்சர்?) வருவதை விரும்பாத சிலர் உள்ளிருந்து எடுத்த முயற்சி, அவரைப் பழிவாங்கி விட்டதாக கட்சி விசுவாசிகள் சிலர் சொல்கின்றனர்.

 

வடலி வளர்த்துப் பானம் பருகக் காத்திருந்த மாவை சேனாதிராஜா, "கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக நான் போட்டியிலிருந்து விலகினேன்" என்று கூறியிருப்பது போற்றப்படும் தன்னடக்கமானது.

 

வட பகுதியிலிருந்து கூட்டமைப்பில் பிரதிநிதித்துவம் பெறாத இரா சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் சேர்ந்து வட மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை �நியமனம்� செய்துள்ளனர்.

 

"கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளும் ஒருமனப்பட்டு ஆதரித்தால் நாம் தயார்" என்று மேட்டுக்குடி நிபந்தனை விதித்த விக்னேஸ்வரன் ஜூலை 15ஆம் திகதி அப்படியே நியமனமானார்.

 

மாவைக்காகக் குரல்கொடுத்து, தீர்மானம் நிறைவேற்றி, குழுக்கூட்டத்தில் வாக்குவாதப்பட்ட வட பகுதியின் கூட்டமைப்புப் பிரமுகர்கள், சம்பந்தன் - சுமந்திரன் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்றவர். 1979ஆம் ஆண்டு நீதிவானாகி, பின்னர் மாவட்ட நீதிபதியாகி, அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மேன்முறையிட்டு நீதிபதி பதவிகளை வகித்து, இறுதியில் 2001இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, 2004இல் ஓய்வு பெற்றவர்.

 

சட்டத்துறையிலுள்ள அனுபவமளவுக்கு ஈழத்தமிழர் அரசியலில் அனுபவம் இல்லாதவர். இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளதை பெருந்தன்மை என்பதா? பதவி நாட்டம் என்பதா?

 

விடுதலைப் புலிகளின் அன்ரன் பாலசிங்கத்தின் மறுஅவதாரமாக சி.வி.விக்னேஸ்வரன் வந்துள்ளார் என்று ஜாதிகஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க கூறுவது அபத்தம். ஈழ அரசியலில் முதலாமவர் மலை என்றால், பின்னவர் மடு.

 

விக்னேஸ்வரனை இந்தியாவின் தெரிவு என்றும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. "நான் எந்தவொரு இந்தியத் தலைவரையும் சந்திக்கவில்லை. நான் அவர்களின் தெரிவுமல்ல" என்று அச்செய்திகளை மறுதலித்துள்ளார் அவர்.

 

நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவின் புதல்வியை விக்னேஸ்வரனின் புதல்வன் திருமணம் புரிந்துள்ளதால், சிங்கள-தமிழர் ஒற்றுமையிலேயே இவர் கூடிய கவனம் காட்டலாம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

 

இதற்கு இயைவாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலரது கவனத்தை ஈர்த்துள்ளன. சிங்களவருடன் சேர்ந்தும், சேர்ந்தும் சேராமலும், முழுமையாகச் சேராமலே இருந்தும் தமிழர் பிரச்சினையை நோக்குவதுண்டு என்ற இவரது கருத்தும், "தமிழர் மீது சிங்களம் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்ற கூற்றும் இவரது சிந்தனை எந்த வழிப்பட்டதாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

13வது திருத்தம் வலது கையால் கொடுப்பதை இடது கையால் பறிப்பது போன்றது. ஆனாலும், அதனை மாற்றக் கூடாது. வடக்கும் கிழக்கும் இணைவதே நல்லது. இராணுவ அதிகாரிகள் மாகாண ஆளுநர்களாக இருக்கக் கூடாது என்ற இவரது கருத்துகள் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கலாவதற்கு முன்னரே வெளிவந்துள்ளன.

 

ஆனால், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது அவரது ஆழமற்ற தமிழ் அரசியலையே பளிச்செனக் காட்டுகின்றது.

 

அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்ததையும், தமிழர் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளே உருவாக்கினர் என்பதையும் சம்பந்தன்-சுமந்திரன் இரட்டையர் விக்னேஸ்வரனுக்கு எடுத்துக்கூற வேண்டியது அவசியம். இல்லையேல், தவறான கருத்துகளையே அவர் தொடர்ந்து கூறிவர நேரிடும்.

 

விரும்பியோ விரும்பாமலோ விக்னேஸ்வரன் முதன்மை வேட்பாளராகத் தெரிவாகியுள்ளதால், அவரது வெற்றியை நிச்சயப் படுத்துவதில் தமிழ்ப் புத்திஜீவிகளும் குடிசார் பிரதிநிதிகளும் முன்வந்துள்ளனர்.

 

அதிகாரமில்லாத - மேலும் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற மாகாணசபையால் தமிழருக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை.

 

�அரசியல் ரீதியாக சவால்களைச் சந்திப்பதை விட, அவைகளைச் சட்ட ரீதியாகக் கையாளுவேன்� (iளெவநயன ழக கயஉiபெ வாழளந உர்யடடநபெநள .ழடவைiஉயடடலஇ ஐ றழரடன ர்யனெடந வாநஅ டநபயடடல...) என்ற விக்னேஸ்வரனின் கூற்று அவரது உட்கிடக்கையைக் காட்டுகின்றது.

 

இலங்கையின் சட்ட � நீதித்துறை எத்தகைய அரசியற் கலப்பான சாக்கடை என்பதை அவர் நன்கறிவார்.

 

அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் விடயத்தில் நீதித்துறையின் போக்கை வன்மையாகக் கண்டித்தவர்களில் இவரும் ஒருவர். அதே நீதித்துறையில் தம்மால் எதனையாவது சாதிக்க முடியும் என்று விக்னேஸ்வரன் நினைப்பது விசித்திரமானது.

 

சட்ட ஞானமுள்ள ஒருவரே முதலமைச்சர் பதவிக்கு முக்கியம் என்ற சம்பந்தன்-சுமந்திரன் எதிர்பார்ப்பை விக்னேஸ்வரன் முழுமையாக செயற்படுத்துவதற்குப் பொருத்தமானவர்.

 

1970 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தொகுதிக்கு சட்டத்துறை விற்பனர் ஒருவரை நிறுத்த வேண்டும்

என விரும்பி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான சி.எக்ஸ்.மார்ட்டினை தமிழரசுக் கட்சி நிறுத்தியது.

 

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் எவ்வாறு 'மனச்சாட்சி மார்ட்டின்' ஆனார் என்பது தமிழ் அரசியலில் நல்லதொரு படிப்பனை.

 

உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த ஒருவர் இலங்கையில் தேர்தலில் போட்டியிடுவதில் முதலாமவர் என்ற பெருமையுடன் சி.வி.விக்னேஸ்வரன் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த கூட்டமைப்பின் இரட்டையர் வெற்றி கண்டுள்ளது.

 

தேர்தல் வெற்றியின் பின் இன்னொரு 'மனச்சாட்சி மார்ட்டின்' உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவரை நியமனம் செய்தவர்களின் முக்கிய பொறுப்பு.

 

-பனங்காட்டான்-

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=88015&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.