Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:30 GMT ] [ நித்தியபாரதி ]


சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும்.

இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தென்னாசியவியல் போராசிரியரான வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்குதன் மூலம் நாட்டில் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை தனது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இத்தெரிவுக் குழுவின் தலைவராக மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன தமது சொந்தக் காரணங்களுக்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளன.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகக் காணப்படுகிறது. சிறிலங்காவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக உள்ளதால் இவர்கள் தொடர்பான பரிந்துரைகள் மிக இலகுவாகத் தட்டிக்கழிக்கப்படும். தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துவதற்கும் நீதியை வழங்காமல் விடுவதற்கும் அனைத்துக் கட்சி மாநாடுகள் 1983களிலிருந்து சமாதான முயற்சிகளைக் கையாள்வதில் சிறந்த கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இந்திய அரசாங்கம் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட பிற்சேர்க்கை C யானது சிறிலங்காவின் நிறைவேற்று அதிபராகச் செயற்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அனைத்துக் கட்சி மாநாட்டின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. ஆனால் இப்பிற்சேர்க்கையானது அனைத்துக் கட்சி மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்திய வம்சாவழியினருக்கு சிறிலங்காவில் குடியுரிமை வழங்குவது என்கின்ற கோரிக்கை தவிர இப்பிற்சேர்க்கை C யில் குறிப்பிடப்பட்ட வேறெந்த பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சிறிலங்காவில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட இவ்வாறான உடன்படிக்கைகள் முறிவடைந்துள்ளன. இதனால் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்யும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இனப் பிரச்சினை விடயத்தில் இணைந்து தீர்வை முன்வைக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் இவ்விரு பிரதான கட்சிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் சிங்கள மற்றும் தமிழர்கள் மத்தியில் செயற்படும் தீவிரவாதிகளை மிக இலகுவாக ஓரங்கட்ட முடியும்.

1950களின் நடுப்பகுதியிலிருந்து, சிறிலங்கா அரசியல் முறைமையில் இரு பிரதான விடயங்கள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. அதாவது:

முதலாவதாக, பெரும்பான்மை சிங்கள சமூகமானது சிறிலங்கா மிகப் பலமான ஒற்றை நாடாக, மத்திய அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, சிறிலங்காத் தமிழ் மக்களின் பார்வையில், அதிகாரங்கள் பகிரப்பட்டு, சமஸ்டி நிர்வாக முறைமை தோற்றுவிக்கப்பட்டு, சிறிலங்காவிலிருந்து பிரிந்து தமக்கான தனிநாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரப் பகிர்வானது மாகாண சபைச் சட்டம் மற்றும் 13வது திருத்தச் சட்டம் போன்றவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான அதிகாரப்பகிர்வானது ஒற்றையாட்சியின் கீழ் சமஸ்டி நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காணப்பட்டது.

சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும்.

குறிப்பிடத்தக்க சில அரசியல் அவாக்களைக் கொண்டுள்ள தமிழ்மக்களின் கோரிக்கைகள் தேசிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து சமரசப் பேச்சுக்களை நடாத்த வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் சிறிலங்காத் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்க முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.

மொழிக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துதல், தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்தல், தமிழர் வாழ் பகுதிகளில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களையும் இராணுவத்தினரையும் அகற்றுதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்கள் காணாமற் போதல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் கலந்துரையாடி, சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளும், கூட்டமைப்பு பிரதிநிதிகளும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும். சிங்கள அரசியல்வாதிகள் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, இவர்களின் நடவடிக்கைகள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வழிகோலுவதாக அமைந்துவிடக் கூடாது.

சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளும், கூட்டமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து பல சுற்றுப் பேச்சுக்களை நடாத்தியிருந்தனர். இவ்வாறான இரு தரப்பு பேச்சுக்களின் பின்னணியில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை உருவாக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இரு தரப்புக்களும் இது தொடர்பில் உடன்பட்டதன் பின்னர் இதற்கான முயற்சியை ஆரம்பிக்க முடியும் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது இழுத்தடித்தது. இந்நிலையில் அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் துரோகம் இழைப்பதாக கூட்டமைப்பு உணர்ந்து கொண்டது.

இனக்கிளர்ச்சிகளுக்கு சமாதான வழித் தீர்வைத் தேடும் எந்தவொரு உலக நாடுகளிலும், அரசாங்கங்கள் தமது நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடாத்துவது பொதுவானதாகும். 1985ல் ராஜீவ் காந்தி – லோங்கோவால் உடன்பாடானது, இந்திய அரசாங்கத்திற்கும் அகாலி (Akali) தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்களின் விளைவானதாகும். அகாலி மக்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாக இந்திய அரசாங்கம் வாக்குறுதியளித்ததன் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதற்காக அகாலி மக்கள் மத்தியில் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. இதன் பின்னர் அகாலி மக்களின் காலிஸ்தான் இயக்கம் பின்னர் மறைந்து போனது.

இதேபோன்று 1986ல் மிசோ உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம், லல்டென்காவால் தலைமை தாங்கப்பட்ட மிசோ தேசிய முன்னணிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களின் விளைவால் 1987 பெப்ரவரியில் மிசோறாமிற்கு மாநில நிலை வழங்கப்பட்டது. இதன்பின்னர் மிசோறாமில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, மிசோறா மாநில மக்கள் தாம் இந்தியக் குடிமக்கள் எனக் கருதும் நிலையை அடைந்தனர். மிக நீண்ட காலமாகத் தொடரும் நாகா பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய மத்திய அரசாங்கம் பேச்சுக்களை நடாத்தி வருகிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்தோனேசியாவில் தனிநாடு கோரிப் போராடிய Ache மாநில ஆயுதக் குழுவுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுக்களை நடாத்தியதன் விளைவாக இங்கு வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு பிரிவினைவாதம் ஏற்படுவதற்கு காரணமாக காணப்பட்ட இயற்கை வளங்கள் தொடர்பில் தற்போது புதிய கோட்பாடுகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் விளைவாக இயற்கை வளங்களுக்காக மோதிக் கொண்ட மக்கள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டனர். ஆகஸ்ட் 15, 1995ல் 'சிறப்பு சுயாட்சியை' ஆசே மாநில மக்களுக்கு வழங்கும் கெல்சிங் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிங்களவர்களைப் போல ஆசே மாநில மக்களுக்கு சுயாட்சி வழங்குவதை ஜவானிஸ்கள் எதிர்த்தனர். ஒற்றை இந்தோனிசியாவின் அரசியல் யாப்பில் ஆசே மக்களுக்கு சிறப்பான சுயாட்சி வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காத் தமிழ் மக்களுக்கு பயனுள்ள தீர்வொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வழங்க வேண்டும் என்பதை சிறிலங்காவின் அரசியல்வாதிகள் உணரும் வரை சிறிலங்காத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிப்பர். தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது பயனுள்ள அரசியற் தீர்வொன்றை முன்வைக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவில் அரசியற் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது ஒரு கெட்டவாய்ப்பாகும்.

சிறிலங்காவானது பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. இந்த அச்சுறுத்தலும் 2009ல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று சிறிலங்காவில் இனப்பிரச்சினை தொடரப்படவில்லை. வினைத்திறனான பிராந்திய சுயாட்சிக்கான கோரிக்கையானது நாட்டில் பல்வேறு மிகமோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

*The writer is former senior professor, Centre for South and Southeast Asian Studies, University of Madras.

http://www.puthinappalakai.com/view.php?20130721108712

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.