Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தில் தொடரும் மோதல்கள்: 1000க்கும் மேற்பட்டோர் கைது

Featured Replies

எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

130817091434_cn_cairo_ramses_sq_woman_30

படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையிலான மோதல்களின்போது கத்திக் கூக்குரலிடும் பெண்ணொருவர்

அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

அல் ஃபட்டா பள்ளிவாசலை படையினர் சூழ்ந்துள்ளனர்
130817041151_egypt_death_304x171_afp_noc

கெய்ரோவில் ஆர்ப்பாட்டங்களின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

 

தலைநகர் கெய்ரோவில் பாதுகாப்புப் படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

நேற்றைய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு சடலங்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள அல் ஃபட்டா பள்ளிவாசலை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துகொண்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவாசலுக்குள் புகுந்த இராணுவத்தினர் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் வெளியேறிய சிலர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மற்றவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.

பள்ளிவாசலுக்குள்ளே நாற்காலிகள் பாதுகாப்பு அரண் போல அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை வீடியோ காட்சி ஒன்று காட்டுகின்றது.

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் இன்று முதல் ஒருவார காலத்துக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2013/08/130817_egyptclashes.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.