Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய்க்கு ஆதரவு அலை ஏழாமல் போனது ஏன்?

Featured Replies

Vijay-b.png

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கும் இது பிடிக்கவில்லை. உடனே தமிழகம் முழுக்க விஜய் டிவியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டினர். பயந்து போன விஜய் டிவி நிர்வாகம், நடிகர் விஜயிடம் மன்னிப்பு கேட்டது. அது தொடர்பாக ஒரு ஸ்லைடையும் நிகழ்ச்சி நடுவே ஒளிபரப்பியது. இது முதல் சம்பவம்.திரைப்படம் தொடர்பாக விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தின்போது, பார்வையாளர் ஒருவர் விஜய் படத்தில் கதையே இல்லை... அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று சொன்னார். உடனே விஜய் ரசிகர்களை தூண்டி விட்ட விஜய்யும் அவர் தந்தையும், ரசிகர்களை விட்டு, விஜய் டிவிக்கு கடிதங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்தார்கள். இதையடுத்து நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத், விஜய் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார். ஒரு நடிகர் என்ற வகையில் தன்னை யாரும் கிண்டல் செய்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்று தன்னை விஜய் மற்றும் அவர் தந்தை நினைத்துக் கொண்டதால்தான் இன்று தலைவா படத்தை வெளியிட முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் கையறு நிலையைப் பார்த்து யாருக்கும் பரிதாபம் வரவில்லை... மாறாக நல்லா வேணும் என்ற எண்ணமே பெரும்பாலானோருக்கு இருக்கிறது..... நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட என்றும், நான் புறா இல்லடா சுறா என்றும் பன்ச் டயலாக் பேசிய விஜய், "நானும் எங்கள் யூனிட்டும் ஆடிப்போயிருக்கிறோம், அதிர்ச்சியில் இருக்கிறோம். " என்று பேசி வீடியோ வெளியிடுகிறார். மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தையே முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள் என்று பேசுகிறார். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக ஒரு திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசாகப் போகிறது.) தமிழக முதல்வர் இதில் தலையிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிறார். இவருக்கு படம் எப்படி முக்கியமோ அது போலத்தானே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளும் ? அவர்களை மிரட்டி மன்னிப்புக் கேட்கச் செய்தபோது உங்களுக்கு அவர்களின் வலி என்னவென்று தெரியுமா ? இப்போது புரிந்து கொள்ளுங்கள்.

Source www.vuin.com
  • கருத்துக்கள உறவுகள்

கேலிக்கூத்து ‘தலைவா’!

 
 
கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது இந்தக் கேளிக்கை வரி விலக்கு விவகாரம். தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து 2006 நவம்பரில் அப்போதைய முதல்வர் தமிழினத் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
 
தமிழை வளர்க்க இப்படியொரு வழியை கண்டறிந்த கருணாநிதியை எப்படி மெச்சினாலும் தகும்! தாய்மொழிப் பற்று ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அதற்கும் நம் திரைப்படத் துறையினர் விலை பேசி ஆதாயம் பெறுகிறார்கள் என்றால் இதைவிடக் கேவலம் எதுவும் இல்லை.
 
இந்தக் கேளிக்கை வரியை கேலிக் கூத்தாக்கியதில் கருணாநிதியின் பங்கு அபரிவிதமானது. குறிப்பாக, 1987 வரை கேளிக்கை வரி 55 சதவீதமாக இருந்தது. 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அதை 45 சதவீதமாகக் குறைத்தார். அவரையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கேளிக்கை வரியை 30 சதவீதமாகக் குறைத்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் இதை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு 15 சதவீதமாகவும் இதர பகுதிகளுக்கு 10 சதவீதமாகவும் குறைத்தார் கருணாநிதி.
 
அதோடு மட்டும் விட்டாரா? தமிழுக்கு சேவை செய்கிறோம் எனத் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரியிலிருந்து விலக்கு என அறிவிக்க, கேளிக்கை வரி என்பது சூனியமாகிப் போனது. இப்படித்தான் தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு பாதிக்கு மேல் ஆங்கில வசனங்களும் காட்சிக்குக் காட்சி விரசமும் கொண்ட தமிழ்த் திரைப்படங்களுக்கும் கருணாநிதி அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துக் கொண்டிருந்தது.
 
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்ட படங்கள் எப்படி எல்லாம் தமிழ்ப் பெயர்களாகின என்பதைச் சொன்னால், சிறுபிள்ளை கூட கைகொட்டிச் சிரிக்கும். திரைப்படங்கள் மூலம் பெறப்படும் கேளிக்கை வரியை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 55 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி காலப்போக்கில் ஒன்றுமே இல்லாமல் செய்ததால் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்?
 
 இந்த அறிவிப்புக்கு முன் தமிழக அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக 2003 - 04-ம் நிதியாண்டில் ரூ. 75.07 கோடி கிடைத்தது. இதில் திரைப்படங்கள் மூலமான வருவாய் மட்டும் ரூ. 67.71 கோடி. ஆனால், அறிவிப்புக்குப் பின் இந்த வருவாய் 2006 - 07-ல் ரூ. 24.9 கோடியாகவும் 2007 - 08-ல் ரூ. 16.35 கோடியாகவும் குறைந்தது.
மொத்தத்தில் இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கேளிக்கை வரி விதிப்பை அமல்படுத்தாமல் இந்தளவு தொகையை தமிழ்மொழி வளர்ச்சிக்கென்று பயன்படுத்தியிருந்தால் உண்மையிலேயே மொழி வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கும்.
 
கேளிக்கை வரி விலக்கால் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மக்கள் பணத்தில் அரசு அனுமதியுடன் கொள்ளை லாபம் ஈட்டினர். இதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேட்டியை மடித்துக் கட்டிய தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத் தொகையை உயர்த்திக் கொண்டார்கள்.
 
அன்றைய காலங்களில் கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், வீடு, கருத்தம்மா, பாரதி போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதை யாரும் குறை சொல்லவே முடியுமா? அப்போதெல்லாம் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் படங்களுக்கு மக்களிடமும் வழக்கமான நுழைவுக் கட்டணத்தை விட குறைவான கட்டணமே வசூலிக்கப்பட்டது, நினைவு கூறத்தக்கது.
 
எனக்கு நினைவு தெரிந்து இயக்குநர் பாலுமகேந்திராவின் வீடு படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதால், அந்தப் படத்திற்கான முதல் வகுப்பு நுழைவுச் சீட்டு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
 
ஆனால் இப்போதைய கேளிக்கை வரி விலக்கால் மக்களின் நலத்திட்டம் பாதிக்கப்படுவதுடன் ரசிகர்களின் சட்டைப் பையில் திரைத் துறையினர் கையை விட்டுக் ஜேப்படி அடிக்கும் அவலம்தான் அரங்கேறுகிறது.
 
தமிழ்ப் பெயரை சூட்டுவதற்காக வழங்கப்பட்ட கருணாநிதியின் இந்தக் கேளிக்கை வரி விலக்கு திட்டத்தால் தமிழ் மொழி அசர வேகத்தில் வளர்ந்து விடவில்லை. மாறாக, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் கோடிக் கோடியாக சம்பாதித்தனர் என்பதை நாடறியும். அத்துடன் விட்டாரா கருணாநிதி, முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் விருப்பம் போல் கட்டணங்களை  நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உத்தரவு போட்டார்.
 
இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஜெயலலிதா கேளிக்கை வரியை 30 விழுக்காடாக உயர்த்தினார். தமிழ்ப் பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதற்கான அளவு கோலை யார் வைத்திருக்கிறார்கள்? இதனால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கும் பிறருக்கு வரி விலக்கில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்ட கொடுமை தொடர்ந்தது.
 
karunanidhi-and-vijai.jpg
 
 
மக்கள் நலனை தூர எறிந்த இந்தத் திராவிட ஆட்சியாளர்களால் கேளிக்கை வரி விலக்குப் பெறும் படங்கள் கூடுதல் விலைக்கு திரையரங்குகளுக்கு விற்கப்படுகின்றன. இப்படியான நிலையில் தான் எப்படியாவது கேளிக்கை வரி விலக்குப் பெற்று விடலாம் என்கிற நப்பாசையில் விஜய் நடித்த ‘தலைவா’ படம் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
 
ஆனால் படத்தைப் பார்த்த குழுவினர் விரசமான உரையாடல்களும், வன்முறைக் காட்சிகளும் அதிகமாக உள்ளதாக சொன்னதோடு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என்று அறிவித்தனர். அந்த அறிவிப்புக்குப் பின்னால், காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
 
கேளிக்கை வரி விலக்கு இல்லை என்கிற இந்த அறிவிப்பால் ஏற்கெனவே அதிக விலை கொடுத்து ‘தலைவா’ படத்தை வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் ஆடிப் போனார்கள். கேளிக்கை வரி செலுத்தினால் லாபத்தில் துண்டு விழும் என்று துடித்துப் போனார்கள். அதன் விளைவாக படத்தின் விலையை குறைத்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள். படத் தயாரிப்பாளர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவேதான் வினியோகிஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் படத்தைத் திரையிட முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால்தான் குறிப்பிட்ட நாளில் தலைவா திரைப்படம் வெளியாகவில்லை.  
 
இதற்கிடையே எப்படியாவது முதல்வரை சந்தித்துப் பேசி அவரது பரிந்துரையின் பேரில் கேளிக்கை வரி விலக்கைப் பெற்று விடலாம் என்று நடிகர் விஜய் மற்றும் தலைவா பட இயக்குநர் விஜய் முயற்சி செய்து பார்த்தார்கள். வேலை நடக்கவில்லை. இந்த உண்மையை மறைத்து இந்தப் படத்தை திரையிட விடாமல் அரசே சதி செய்வதாக வதந்தி பரப்பப்பட்டது. அனைத்துத் திரையரங்குகளுக்கும் வந்த அனாமதேய மிரட்டல் கடிதத்தை ஏதோ தலைவா படத்துக்கு எதிராக வந்ததாக செய்தி பரப்பப்பட்டது.
 
இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களும் ‘தலைவா’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து மேற்கண்ட உண்மையான செய்தியை வெளியிடாமல், மறைத்துவிட்டன என்பதுதான் இதில் உள்ள இன்னொரு வேதனை.
 

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல், எங்கோ ஒரு ரசிகர் இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்பதால் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தமிழனுக்கு நேர்ந்த நிலையை நினைத்தால் தலையில்தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது!  இன்றைக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. எனவே தமிழ்நாட்டு கருத்துரிமை கந்தசாமிகள் இந்த நாளை கொண்டாடலாம். கேட்கவே கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது!
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனும் மவனுமாய் காங்கிரஸ் தங்களை  கூப்பிடுது கூப்பிடுது என்று சீன் காட்டி கடைசியில் இத்தாலி ஓரிணச்சேர்க்கையாளன் ராகுல் உடன் இரண்டு மணித்தியாலம் பினாத்திட்டு ஏதோ பெரிய அரசியல்வாதி மாதிரி அதைபற்றி பேட்டி குடுத்தது இந்த வலசு.இதுக்கா கூட்டம் சேரும்  :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.