Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களுக்காய் கண்ணீரில் நனைகிறது யாழ் நகரம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

Missing%20protest_CI.jpg

 

காணாமற் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணை மற்றும் நில அபகரிப்புக்கு எதிராக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் தற்பொழுது யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இடம்பெறுகின்றது.

Missing%20protest8.jpg

காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும்குழு இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சுந்தரம் மகேந்திரம் தெரிவித்தார்.

Missing%20protest7.jpg

காணாமற்போனோரின் உறவுகளை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்திக்கும் வேளையிலேயே இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. 

Missing%20protest1.jpg

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமற் போனவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

Missing%20protest6.jpg

அத்துடன் நில அபகரிப்புக்கு எதிராகவும், மீள்குடியமர்வை வலியுறுத்தியும் இந்தக் கவனவீர்ப்புப் பேராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது.

Missing%20protest5.jpg

காணாமல் போனபவர்களின் தாய்மார்கள் நெஞ்சை உருக்கும் விதமாக கண்ணீரோடு நிலத்தில் வீழந்தது புலம்பிய காட்சி யாழ் நகரை கண்ணீரால் நனைத்தது. 

Missing%20protest4.jpg

அத்துடன் தந்தையை காணாமல் போகக் கொடுத்து காத்திருக்கும் சிறுவர்களும் தமது தந்ததைய விடுவிக்குமாறு கோரி கண்ணீர் மல்க குரல் எழுப்பினர். 

எமது பிள்ளைகள் எங்கே? நியாமான விசாரணை வேண்டும். காணாமல் போனவர்கள் எங்கே அரசே விடுவி, எனது மகன் எங்கே அரசாங்கமே பதில் சொல் போன்ற பதாகைகளதை தாங்கியிருந்தனர். 

நிகழ்வில் பல்வேறு பகுதிகிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான உறவுகள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95781/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

யாழில்.காணாமல் போனோர் சங்க ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்றார் நவநீதம்பிள்ளை...

யாழில் காணமல் போனவர்கள் வீதிகளில் உருண்டு புரண்டும் அழுதுபுலம்பியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணமல் போனவர்களுடைய உறவினர்களை கண்டும் காணாதது போல் நவிப்பிள்ளை சென்றது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

missing%20proct1.jpg

நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நவிப்பிள்ளை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடிவருகின்றார்.

இதன் போது இன்று காலை 9 மணிக்கு யாழ்.பொது நுலகத்தில் வடமாகாணத்தின் நிர்வாக சேபை உயர் அதிகாரிளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

missing%20proct2.jpg

இருப்பினும் நவிப்பிள்ளை ஆர்ப்பாட்த்தில் இடுபட்டிருந்த காணமல் போனவர்களுடைய உறவினர்களைவ சந்திக்காமல், பொது நூலகத்தின் பின்பக்க வாசலினால் வெளியேறினார்.

இதனால் அங்கு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டிருந்த காணமல் போனவர்களுடைய உறவினர்கள் தமது விசனத்தினை வெளியிட்டிருந்தனர்.

missing%20proct3.jpg

missing%20proct4.jpg

http://www.sankathi24.com/news/32572/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.