Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான எந்தவொரு விடயத்தையும் நவநீதம்பிள்ளையுடன் பேசவில்லை - ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
karu-jayasuriya-seithy-20121015-150.jpg

இலங்கைக்கு எதிரான எந்தவொரு விடயத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் பேசவில்லை. ஜனநாயகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை என்பவை தொடர்பிலேயே நவநீதம்பிள்ளையுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய 17 ஆவது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் நல்லாட்சிக்கான வரைபினையும் கையளித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இச் சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய எம்.பி., ரவிகருணாநாயக்க எம்.பி., மங்கள சமரவீர எம்.பி., கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜெ.எம். முசம்மில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா ஆகியோர் சந்தித்தனர்.

  

இச்சந்திப்பு தொடர்பில் கரு ஜயசூரிய எம்.பி. தெளிவுபடுத்துகையில்,

 

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்படுகின்ற அரசியல் கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சியாகும். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு சந்தித்தது. அச்சந்திப்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிரான விடயங்களை நாம் வலியுறுத்தவில்லை. ஜனநாயகம், சட்ட ஆட்சி, ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான யோசனைகளையே முன் வைத்தோம்.

 

17 ஆவது திருத்தச்சட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்தோம். இன்று அரச துறைகள், அரசியல் மயமாக்கப்படுவதற்கும் நல்லாட்சி வீழ்ச்சிக்கும் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடான சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டமையே பிரதான காரணம். தகவல் தெரிந்து கொள்ளும் உரிமைகளை வலியுறுத்தினோம். உண்மையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நாம் பேசியபோது நவநீதம்பிள்ளை அவற்றை சிறந்த முறையில் உள்வாங்கினார்.

 

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை நாம் தெளிவுபடுத்தினோம். அவற்றை ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார் எனக் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91579&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.