Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளை முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க அரசாங்கம் தயார்- அமைச்சர் கெஹலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hekaliaya.jpg

இலங்கைக்கான தனது விஜயத்தின்போது தன்னைச் சந்தித்திருந்த பொது மக்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டிருந்ததாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அராங்கம் தயாராக இருப்பதா அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

மேற்படி விசாரணையை உரியவாறு நடத்தும் பொருட்டு குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான சான்றுகளை நவி பிள்ளையின் காரியாலயம் வழங்க வேண்டுமெனக் கூறினார்.

நவநீதம்பிள்ளையுடன் கதைத் தோரை அச்சுறுத்தியோ அல்லது அத்தகைய பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியோ சில குழுக்கள் அரசுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ண முயற்சிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்த நவநீதம்பிள்ளை கடந்த வாரம் திருகோணமலையை தான் போய்ச் சேர்ந்ததற்கு முன்னரும் பின்னரும் முல்லைத்தீவில் உள்ள கிராமங்களிலும் குடியேற்றத் திட்டங்ளிலும் வசித்து வரும் மக்களிடம் பொலிஸாரோ அல்லது இராணுவத்தினரோ தன்னுடன் அவர்கள் மேற்கொண்டிருந்த உரையாடலின் பொருளடக்கம் பற்றி துருவித்துருவி விசாரிக்கப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் கிடைத்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே விமர்சன போக்குடையோர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தியோ அல்லது நிரந்தரமாகவோ மெளனிக்க வைப்பதிலோ பெயர் பெற்றுள்ள நாடாகிய இலங்கையில் இத்தகைய கடும் போக்கான கண்காணிப்பு அல்லது தொந்தரவு ஆகியன நிலைமையை இன்னும் மோசமடையவே வைக்கும்.

அதுவும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் விஜயத்தின் போது நிகழும் இத்தகைய அருவருப்பான செயல்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையெனவும் ஐ.நா. அதிகாரிகளுடன் கதைத்த மக்களைப் பழிவாங்கும் இந்த பாரதூரமான விவகாரம் குறித்து தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையிடப் போவதாகவும் கடும் தொனியில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே சமயம் நவி பிள்ளையின் விஜயம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் பொய்க்குற்றச்சாட்டுக்களை புனைவதற்கென்றே சிலர் நிகழ்ச்சி நிரலொன்றை வகித்து செயற்பட்டு வந்தமை இதன் மூலம் புலனாகியுள்ளதெனவும் எனவே இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்களால் நவநீதம்பிள்ளை தவறாக வழி நடத்தப்படக்கூடாதெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கையின் எப்பாகத்திற்கும் செல்லவும் எவரையும் சந்திக்கவும் நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டிருந்த பூரண சுதந்திர சூழ்நிலையை மேற்கூறப்பட்ட நபர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எது எப்படியிருப்பினும் தக்க சான்றுகளுடன் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் அவை குறித்து பொறுப்புள்ள அரசாங்கமென்ற வகையில் விசாரிப்பதற்கு அது தயாராகவுள்ளதெனவும் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.